Published:Updated:

குங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய பலம் பெருகும்!

நவராத்திரி தரிசனம்!

குங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய பலம் பெருகும்!
##~##
பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வனம் முழுவதையும் காக்கும் தேவியை ஸ்ரீபுவனேஸ்வரி என்று அழைப்பார்கள். திண்டுக்கல் நாகல் நகரில் ஸ்ரீபுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள் தேவி. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது நாகல் நகர். இங்கே, அழகுற கோயில் கொண்டு,  கருணையுடன் அருள்மழை பொழிகிறாள் ஸ்ரீபுவனமாதா.

ஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்ததாம். பிறகு அம்பிகையின் அருளை வியந்து, ஊர்மக்கள் அனைவரும் வாரிக் கொடுத்த நிதியைக் கொண்டு, அற்புதமாகக் கோயில் கட்டப்பட்டது என்கிறார்கள், அந்தப் பகுதி மக்கள்.

ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு முன்பாக ஸ்ரீவாராஹியம்மனும் ஸ்ரீராஜமாதங்கியும் தரிசனம் தருகின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாளைத் தரிசிக்க திண்டுக்கல்லின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு வந்து செவ்வரளி மாலை சார்த்தி, ஸ்ரீபுவனேஸ்வரி அன்னையை மனதாரப் பிரார்த்தித்துச் சென்றால், துஷ்ட தேவதைகளால் வரும் அனைத்துத் துன்பங்களையும் ஓடோடி விரட்டி அருள்வாளாம் தேவி.

குங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய பலம் பெருகும்!
குங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய பலம் பெருகும்!

வருடந்தோறும் இங்கே விழாக்களும் கொண்டாட்டங்களும் நிறைந்திருக்கும் என்றாலும், நவராத்திரி விழா வெகு விமரிசை யாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பிகையைக் காண, ஏராளமான பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். அந்த ஒன்பது நாட்களும் சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள், அலங்காரங்கள், திருவீதியுலா என ஆலயம் அமர்க்களப்படுகிறது. இந்த நாட்களில் ஆலயத்துக்கு வந்து அம்மனைத் தரிசித்தால், மனோபலம் பெருகும்; மாங்கல்ய பலம் பெருகும். நாகலோகத்தில் உள்ள நாகதேவதையாக, சிவனாரைப் பூஜிக்கும் பார்வதியாக, ஸ்ரீகனக துர்கையாக, ஸ்ரீஆதிபராசக்தியாக, ஐஸ்வரியம் அருளும் ஸ்ரீசந்தானலட்சுமியாக, ஞானம் வழங்கும் ஸ்ரீலலிதாம்பிகையாக, எதிரிகளை வீழ்த்தும் ஸ்ரீமகிஷாசுரமர்த்தனியாக ஸ்ரீபுவனேஸ்வரியம்மனைத் தரிசிக்க... நம் பாவமெல்லாம் பறந்தோடும் என்கின்றனர் பக்தர்கள். நவராத்திரி நாட்களில், இந்த ஆலயத்தில் விதம்விதமான பொம்மைகளைக் கொண்டு கொலு வைப்பதும் வழக்கம். மேலும், 9 நாட்களும் தினமும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணமும் சிறப்பு அர்ச்சனையும் விசேஷமாகச் செய்யப்படுகின்றன. அப்போது பெண்களே வந்து, குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்திப்பது இங்கு விசேஷம்!

ஸ்ரீவாராஹியம்மனுக்கு  சிவப்பு வஸ்திரம் அணிவித்து மாதுளம்பூ, மாம்பழம், சர்க்கரைப் பொங்கல், தட்டைப்பயறு, துவரை ஆகியன கொண்டு நைவேத்தியம் செய்தால், எதிரிகள் தொல்லை ஒழியும்; வழக்கில் வெற்றி கிடைக்கும். ஸ்ரீராஜமாதங்கியம்மனுக்குப் பச்சை நிற வஸ்திரம் சார்த்தி, மருக்கொழுந்து அணிவித்து, கொய்யாப்பழம், பாசிப்பயறு ஆகியன கொண்டு நைவேத்தியம் செய்து வணங்கினால், கல்வியில் சிறக்கலாம்; வியாபாரத்தில் ஜெயிக்கலாம் என்பது ஐதீகம்!  

- க.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்