Published:Updated:

சரண் புகுந்தோருக்கு சந்தோஷம் கிடைக்கும்!

ஐப்பசி அன்னாபிஷேகம்...

சரண் புகுந்தோருக்கு சந்தோஷம் கிடைக்கும்!
##~##
பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
துக்கோட்டை தேவஸ்தான கோயிலுக்கு உட்பட்ட முக்கியமான ஆலயங்களில், ஸ்ரீவேதநாயகி சமேத ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி கோயிலும் ஒன்று! புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

முதலாம் குலோத்துங்க சோழ மன்னன் காலத் தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஏராளமான மன்னர் பெருமக்கள், திருப்பணிகள் செய்து உள்ளனர் என்றும் ஒருகாலத்தில் இந்தப் பகுதி, குலோத்துங்க சோழீச்சரம் என்றே அழைக்கப்பட் டது என்றும் கல்வெட்டு தகவல்கள் சொல்கின்றன.

அதேபோல், அடுத்து வந்த பல்லவர்களின் ஆட்சி யிலும் ஏராளமான திருப்பணிகள், இங்கே செய்யப் பட்டுள்ளன. கோயிலுக்கு வடக்கே, அவர்கள் வெட்டிய திருக்குளம், பல்லவராயர் திருக்குளம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்லவன் குளம் என்கிறார்கள்.

தன்னைச் சார்ந்து, தன்னிடம் சரண் அடையும் அடியவர்களைக் காத்தருள்வாராம் இங்கேயுள்ள சிவனார். எனவே அவருக்கு ஸ்ரீசார்ந்தாரைக் காத்த நாயனார் என்று திருப்பெயர். அதுவே பின்னாளில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி என மருவியதாம்.

சரண் புகுந்தோருக்கு சந்தோஷம் கிடைக்கும்!

தொழிலில் திடீர் நஷ்டம் என்றாலோ சிக்கல்கள் என்றாலோ திங்கட்கிழமை விரதம் இருந்து, ஸ்ரீசாந்த நாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, நெய்விளக்கு ஏற்றி வைத்தால் விரைவில் வியாபாரம் செழிக்கும் என்பது ஐதீகம். அம்பாளின் திருநாமம் ஸ்ரீவேத நாயகி. நான்கு வேதங்களுக்கும் தலைவியாய் திகழ்கிறாள் இந்த அம்பிகை!

பல்லவன் திருக்குளமும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் குளத்தில் கங்கையே வாசம் செய்வதாக நம்பிக்கை. இதில் நீராடிவிட்டு, இதன் கரையில் அமர்ந்து பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய காரியங் களையும் சடங்கு சாங்கியங்களையும் செய்து வழிபடுவதால், பித்ருக்களின் அருளும் ஆசியும் கிடைக்கும் என்கின்றனர், பக்தர் கள்! அதேபோன்று. ராஜகோபுர நுழைவு வாயிலில், குடைவரைப் பகுதியில் தெற்கே மிகப் பிரமாண்டமாக அருளும் ஸ்ரீசேம விநாயகர் தரிசனம், இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.

சரண் புகுந்தோருக்கு சந்தோஷம் கிடைக்கும்!

ஆலயப் பிராகாரத்தின் வடக்கு பகுதியில் ஸ்ரீராமநாதர்- ஸ்ரீபர்வதவர்த்தினி, தெற்கில்- அறுபத்துமூவர், தென்மேற்கு மூலையில் அருளும் பிள்ளையார் மற்றும் ஸ்ரீஆறுமுகப் பெருமான் ஆகிய தெய்வங்களும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். மேலும், ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் நவக்கிரக சந்நிதியையும், ஸ்ரீநடராஜர், பள்ளியறை சொக்கநாதர், அரிய நாச்சியம்மன் ஆகிய தெய்வங்களையும் இங்கே தரிசிக்கலாம். பல்லவன் குளத்தில் நீராடி ஸ்வாமி, அம்பாளை முறைப்படி வழிபடுவதுடன், ஸ்ரீஅரியநாச்சியம்மனையும் தரிசித்து வணங்க சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

பிரதோஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும் இந்த ஆலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகமும் (29.10.12 மதியம் 3 முதல் 8 மணி வரை) வெகு சிறப்பாக நடந்தேறும். அன்னாபிஷேகத்தில் கலந்துகொண்டு ஸ்ரீசாந்தநாத ஸ்வாமியையும் ஸ்ரீவேதநாயகியையும் மனதாரப் பிரார்த்தித்து வழிபட்டால், நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்!

     - கே.அபிநயா
படங்கள்: தே.தீட்ஷித்