Published:Updated:

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

''அன்னமிட்ட ஆலயம்... நைவேத்தியம் காணாத ஈஸ்வரன்’ என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான்நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் பற்றி, கடந்த 18.9.09 இதழில் 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம்.

நீராடுவதற்குக் குளம், பூஜிப்பதற்கு ஆலயம், அன்னதானம் செய்வதற்கும் யாத்ரீகர்கள் இளைப்பாறுவதற்கும் சத்திரம் என மன்னர்கள் அமைத்திருந்ததையும், அந்தக் காலத்தில் இவை சத்திரத்துக் கோயில்கள் என அழைக்கப்பட்டதையும் விவரித்திருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் சுமார் 500 வருடங்களாகக் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. திருவிழாக் களும் நடைபெறவில்லை. முழுவதும் சிதிலம் அடைந்த நிலையில் உள்ள ஆலயத்தில், சின்ன தீபாராதனையோ நைவேத்தியமோ இல்லாமல், மெல்லிய திருவிளக்கின் வெளிச்சம்கூடப் பரவாமல் இருள் சூழ்ந்த நிலையில் இருக்கிறார் ஸ்ரீசிதம்பரேஸ்வரர்’ என்று எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, கண்ணீருடன் வாசகர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள்.

##~##
அபுதாபியில் வேலை செய்யும் இளைஞர் சுந்தரேசன் என்பவர் இரண்டு மாத விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தார். வந்த இடத்தில், சக்தி விகடனில் மேற்படி கட்டுரையைப் படித்துவிட்டு, உடனே அந்த ஆலயத்துக்குச் சென்று நிதியுதவி செய்தார். தினந்தோறும் இறைவனுக்கு பூஜையும் நைவேத்தியமும் குறையற நடப்பதற்கு மாதாமாதம் ரூ.6,000 அனுப்புவதாகச் சொல்லிச் சென்றார். அதன்படியே இன்று வரை செய்தும் வருகிறார். இதுகுறித்து 3.10.09 இதழில் எழுதியிருந்தோம்.  

''இதேபோல ஏராளமான வாசகர்கள் திருப்பணிக்கு நிதியுதவி செஞ்சாங்க. கோயில் முகப்பு, அர்த்த மண்டபம், சந்நிதிகள்னு எல்லா இடங்களையும் புதுசாப் பண்ணினோம். அப்புறம், கோயிலுக்கு மின்வசதி செய்யுறதுக்கும் உதவிகள் குவிஞ்சுது. இதோ... இந்த மாதம் 28-ஆம் தேதி (28.10.12), ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடத்த முடிவு பண்ணி, மளமளன்னு வேலைகள் நடந்துட்டிருக்கு. சக்தி விகடனுக்கும் வாசகர்களுக்கும்தான் நன்றி சொல்லணும்'' என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் பொங்கச் சொல்கிறார் கந்தசாமி சிவனடியார்.

தொண்டைமான்நல்லூரில், தொண்டை மான் மன்னரால் கட்டப்பட்ட கோயில் சீரும் சிறப்புமாக புதுப்பிக்கப்பட்டாயிற்று. இனி, ஸ்ரீசிதம்பரேஸ்வரரின் அருளுக்குப் பாத்திரமாவது, பக்தர்களின் கைகளில்!

- வி.ராம்ஜி
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்