Published:Updated:

சித்தமல்லியில் பெருமாளுக்கு பூச்சொரிதல் வைபவம்!

சித்தமல்லியில் பெருமாளுக்கு பூச்சொரிதல் வைபவம்!

சித்தமல்லியில் பெருமாளுக்கு பூச்சொரிதல் வைபவம்!
சித்தமல்லியில் பெருமாளுக்கு பூச்சொரிதல் வைபவம்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நா
கை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு அருகில் உள்ளது சித்தமல்லி எனும் சிறிய கிராமம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து, சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில், ஸ்ரீசுந்தரநாராயண பெருமாள் கோயிலும் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலும் அமைந்துள்ளன. கொள்ளிடக் கரைக்கு அருகில் உள்ள தலம் இது. சித்தர்கள் வாழ்ந்து, தவமிருந்து இறையருள் பெற்ற புண்ணிய பூமி இது.

''எங்க மூதாதையர்கள் வழிபட்ட பெருமாள் விக்கிரகம் எங்க வீட்டுக் கொல்லைல இருக்கு. ஆனா நான் கடவுளைக் கும்பிடுறதே இல்லை. நாத்திகனா, சாமியாவது இருக்கறதாவதுன்னு சொல்லிட்டிருந்தேன். ஒருநாள் பின்பக்கம் கொல்லைல கொட்டகை போடலாம்னு முடிவு எடுத்தப்ப, 'அப்படியே அந்த சாமிக்கும் கொட்டகையைப் போடுங்கப்பா. பாவம், வெயில்லயும் மழையிலயும் நிக்கிறாரு’ன்னு கேலியாச் சொன்னேன். அவருக்கு கொட்டகை போட்ட அன்னிக்கி ராத்திரி, 'எனக்கு நிழல் கொடுத்த உனக்கு, நிழல் ரூபத்துல காட்சி கொடுக்கறேன்’னு ஒரு குரல் கேட்டுச்சு. ஏதோ மனப்பிரமைன்னு நினைச்சுக்கிட்டேன்'' என்று ஆச்சரியம் மாறாமல் சொல்கிறார் சுந்தரநாராயணன்.

சித்தமல்லியில் பெருமாளுக்கு பூச்சொரிதல் வைபவம்!

அவரே தொடர்ந்தார். ''வெத்தலை போடுற பழக்கம் இருக்கு எனக்கு. மறுநாள், வெத்தலை போட்டுட்டு, ஒரு ஓரமா துப்பலாம்னு போனா... 'உனக்கு காட்சி தரலாம்னு வந்திருக்கேன். நீ எம்மேலயே துப்பப் பாக்கறியே...’னு திரும்பவும் ஒரு குரல். வெலவெலத்துப் போயிட்டேன். அந்த நிமிஷம்... நான் ஆத்திகனானேன்'' என நா தழுதழுக்கச் சொல்கிறார்.

மகான் ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தையான பத்மா சென்னை அசோக்நகரில் வசிக்கிறார். ''ராகவேந்திர சுவாமியுடன் எந்த விஷயமானாலும் பேசுவேன். அவர் உத்தரவு கேட்டுட்டுதான் எதையும் செய்வேன். அப்படித்தான் ஒருமுறை, சித்தமல்லி எனும் ஊரைச் சொல்லி, அங்கே பெரிய திருவுருவம் கொண்ட பெருமாளுக்கு வஸ்திரம் கொடுக்கச் சொல்லுன்னு தெரிவிச்சார்.

அடுத்த கொஞ்ச நேரத்துல, சித்தமல்லியைப் பூர்வீகமாகக் கொண்டவரின் மனைவி எங்கிட்ட வந்து, ஊருக்குப் போற விஷயத்தைச் சொல்லி, ஊர்ப்பெயரையும் தெரிவிச்சார். அசந்து போயிட்டேன். 'அங்கே... பெரியதிருமேனியா பெருமாள் இருக்கார். அவருக்கு வஸ்திரம் வாங்கிண்டு போங்க’ன்னு சொன்னேன். உடனே அவங்க, 'அங்கே பெருசா, பெருமாள் எல்லாம் இல்லியே’ன்னு சொன்னாங்க.

அதுக்குப் பிறகு, சித்தமல்லிக்குப் போனவங்க எல்லா திசையிலயும் பக்கத்து ஊர்கள்லயும் தேடினாங்க. பெரியதிருமேனியா... பெருமாள் இல்லை. அப்புறம் யதேச்சையா சித்தமல்லி அக்ரஹாரத்துல இருக்கிற சுந்தரநாராயணன்ங்கறவர் வீட்டுக்கு வந்தவங்க, கொல்லைப் பக்கம் கை-கால் அலம்பறத்துக்கு போயிருக்காங்க. அங்கே... பெரிய திருமேனியில பெருமாளைப் பார்த்து அதிர்ந்து நின்னுட்டாங்க! ரொம்ப சாந்நித்தியமான இடம் இது. சித்தம் கலங்கித் தவிக்கிறவங்க, டிஸ்லெக்ஸியா மாதிரியான நோய்ல அவதிப்படுற குழந்தைங்க எல்லாருக்கும் ஞான பலம் தரக்கூடிய புண்ணிய பூமி இதுன்னு மகான் ஸ்ரீராகவேந்திரர் அசரீரியாச் சொல்லிருக்கார்'' என்று ஆச்சரியமும் பெருமிதமும் ஒருசேரத் தெரிவித்தார் பத்மா.

சித்தமல்லியில் பெருமாளுக்கு பூச்சொரிதல் வைபவம்!

'ஐப்பசி திருவோணம் நட்சத்திர நாளில் (23.10.12), சித்தமல்லியில் பெருமாளுக்கு பூச்சொரிதல் செய்யச் சொல்லி மகான் கிட்டேருந்து உத்தரவு. பிருந்தாவனப் பிரவேசத்தின்போது எப்படி இருந்ததோ அப்படி இருக்கணுமாம் சித்தமல்லி. பூச்சொரிதல் விழாவுக்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சிலபேர் ஒண்ணாச் சேர்ந்து, ஒவ்வொண்ணாப் பொறுப்பெடுத்து, செஞ்சுக்கிட்டிருக்கோம்.

அன்னிக்கி சரஸ்வதி பூஜை. மகா நவமி. நவமியும் திருவோணமும் சேர்ந்து வருவது ரொம்ப அபூர்வம். இங்கே, சுந்தரநாராயணன் எனும் பக்தர் பூஜித்து வரும் விக்கிரகத் திருமேனியில் (சாளக்ராமம் என்கின்றனர்), பெருமாளின் வயிற்றுப் பகுதியில் திருவேங்கட நாயகனின் திருவுருவமும் திருக்கரத்தில் ஸ்ரீநரசிம்மரின் திருவுருவமும் இருப்பதும் விசேஷம்'' என்று பூரிப்புடன் சொல்கிறார் பத்மா.

மகான் ஸ்ரீராகவேந்திரர் அவதரித்த தலம் புவனகிரி. கொள்ளிடத்தின் இக்கரையில் சித்தமல்லி இருப்பது போல் அக்கரையில் இருக்கிறது குஞ்சிமேடு கிராமம். கிட்டத்தட்ட பிருந்தாவனத்துக்கு இணையான தலம் என்பர். இங்கிருந்து பிருந்தாவனத்துக்கு நடந்தே சென்று, அங்கிருந்து மண் எடுத்து வந்து, குஞ்சிமேட்டில் கட்டிய மடம்தான், தமிழகத்தின் முதல் ஸ்ரீராகவேந்திர மடம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, சித்தமல்லிக்கும் ஸ்ரீராகவேந்திரருக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கிறது. பக்தர்களுக்கும் சித்தமல்லிக்கும் இனி நெருங்கிய பந்தம் ஏற்படப் போகிறது.

குரு ராகவேந்திரரே சரணம்!