Published:Updated:

நோய் தீர்க்கும் மாமருந்து!

ஐப்பசி அன்னாபிஷேகம்...

நோய் தீர்க்கும் மாமருந்து!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சின்னாளப்பட்டி. புடவைக்குப் பெயர் பெற்ற இந்த ஊருக்கு அருகில் கீழக்கோட்டை எனும் கிராமத்தில், அழகுறக் கோயில் கொண்டுள்ளார் சிவனார். இங்கே இவரின் திருநாமம்- ஸ்ரீலிங்க ஸ்வாமி.

இந்த ஆலயத்தில் இரண்டு சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிக்க முடிகிறது. ஒருகாலத்தில், சித்தபுருஷர் ஒருவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தாராம். அவர், தான் தினமும் வழிபடுவதற்காக சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிறியதாகக் கோயில் அமைத்தார் என்கிறது ஸ்தல வரலாறு. அவர் முக்தி அடைந்த தும், கோயிலின் அருகிலேயே அவருக்குத் திருச்சமாதி அமைத்து, அதன் மேல் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்களாம், அவரின் பக்தர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தச் சித்தரின் திருநாமம் லிங்கசாமி என்றும், அதனால் அவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்துக் கும் லிங்க ஸ்வாமி என்றே திருநாமம் அமைந்த தாகவும் சொல்கின்றனர் சிலர். அதேநேரம், சித்தரின் திருநாமம் தெரியாததால், இறைவனின் திருநாமமான லிங்க ஸ்வாமி எனும் பெயரையே சித்தருக்குச் சூட்டி, வழிபட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர் வேறு சிலர்.

##~##
''இங்கு வந்து பிரார்த்தித்தால், குருவருளும் இறையருளும் கிடைப்பது நிச்சயம். காலை 7 முதல் 10 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் பூஜைகள் நடைபெறும். சித்த புருஷர் பயன்படுத்திய தடி, இன்றைக்கும் சிவலிங்கத்துக்கு அருகில்  இருக்கிறது'' என்கிறார்  கோயில் அர்ச்சகர். பௌர்ணமி பூஜையும் பிரதோஷமும், மாத சிவராத்திரியும் சிறப்புறக் கொண்டாடப்படும் இந்தக் கோயிலில், ஐப்பசி அன்னாபிஷேகமும் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று, ஸ்ரீலிங்க ஸ்வாமிக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெறும்.

அன்னாபிஷேகத்துக்கு நேர்ந்துகொண்ட பக்தர்கள் வழங்கும் பச்சரிசியைக் கொண்டு சாதம் தயாரித்து, அதனை ஸ்ரீலிங்க ஸ்வாமிக்குச் சார்த்துவார்கள். பிறகு, இந்த அன்னாபிஷேகப் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப் புண் ஆகியவை குணமாகிவிடும்; விரைவில் பிள்ளை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  

- கா.பெனாசிர்
படங்கள்: வீ.சிவகுமார்