Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

லிக்கும் ஒளிக்கும் ஆதாரமாக இருப்பது ஆகாசம். விண்வெளி மட்டுமல்ல, இடைவெளியும் ஆகாசத்தில் அடங்கும். தென்படும் அத்தனைப் பொருட் களிலும் இணைந்திருக்கும் ஆகாசம். ஒளியும் காற்றும் லேசான பூதங்கள்; பூமியின் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்படாது. ஒளி வடிவான கிரகங்கள் விண்வெளியில் 'ப்ரவஹம்’ என்ற காற்றினால் சுழன்றுகொண்டே இருக்கின்றன என்கிறது ஜோதிடம். அதன் சுழற்சி, பருவ காலங்களை தோற்றுவித்து  உலக இயக்கத்துக்கு உறுதுணையாக செயல்படுகின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பும் அதற்கு உண்டு. மூன்று ஆரங்கள் இணைந்த சக்கர வடிவில் சுழன்று கொண்டிருக்கின்றன என்கிறது வேதம் (த்ரினாபிசக்கரமஜரமனர்வம்).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்திரன், சூரியன், காற்று ஆகிய மூன்றும் முக்காலி போன்று உலகை தாங்கி இருக்கின்றன என்கிறது ஆயுர்வேதம் (ஸோம ஸுர்யானிலா யதா...). சக்கரம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவையே காலத்தின் அளவான- வருடத்தின் 12 பகுதிகளான மாதங்கள் என்று சொல்லலாம். அந்த பகுதிகள்  30-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையே 30 நாட்கள்! 30 ஜ் 12 = 360 நாட்கள் - ஒரு வருஷம். ஆகையால் அதை, காலச் சக்கரம் எனச் சொல்லலாம் என்கிறது வேதம் (த்ரீணிச சதானி ஷஷ்டிச அஷராணி தாவதீ; ஸம்வதஸரஸ்யராத்ரய:...).

அண்டவெளியில் காலச் சக்கரத்துடன் இணைந்து இருப்பவை நட்சத்திரங்களும் கிரகங்களும். இந்தக் கிரகங்கள் சுழலும் பாதையாக... நட்சத்திரங்கள் ராசியுடன் இணைந்திருக்கும். தடுமாறாமல், பாதையை விட்டு அகலாமல், இயற்கையின் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு சுழலும் கிரகங்களின் செயல்பாடு அதிசயமான ஒன்றுதான். அதன் சுழற்சியில் உலகில் நிகழும் அதிசயங்களும், நமது சிந்தனைக்கு எட்டாத ஒன்று. சக்கரங்களின் சுழற்சி, உலகவியல் மாறுதல்களுடன் நில்லாமல் தனி மனிதனின் சிந்தனையையும் பாதிக்கிறது என்ற தத்துவத்தை விவரித்த தவசீலர்களான முனிவர்களின் கணிப்பு நம்பிக்கைக்கு உகந்தது. அவர்களது கணிப்பு படிப்படியாக விரிவடைந்து பலன் சொல்லும் ஜோதிடமாக உருப்பெற்று விளங்குகிறது. பிற்பாடு வந்த ஜோதிட வல்லுனர்கள் மனித இனத்தின் நன்மைக்காக விரிவுப்படுத்தி விளக்கினார்கள். உருவமற்ற காலத்தின் ஓர் உருவமாக மாறியிருப்பது ராசிச் சக்கரம். காலத்துடன் இணைந்த அது காலத்தின் வடிவம் ஆகும். நொடிப்பொழுதில் இருந்து வருஷம் வரை இருக்கும் கால அளவு ராசிச் சக்கரத்தில் உண்டு.

கிரகங்களும் நட்சத்திரங்களும் ராசிச் சக்கரம் வாயிலாக காலச் சக்கரத்தில் இணைந்திருக்கும். காலச் சக்கரமானது அத்தனைப் பொருட்களுட னும் இணைந்திருக்கும். காலச் சக்கரத்தின் வாயிலாக நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கம், அத்தனைப் பொருட்களிலும் பரவி விடும். தட்பவெப்பம், காற்று ஆகியன சுற்றுச் சூழலின் மாறுபாட்டுக்குக் காரணம். அதை உருவாக்கும் பொறுப்பு கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் உண்டு. அதன் தாக்கமானது நம் உடலில் இருக்கும் முப்பெரும் பூதங்களைப் பாதிக்கும். நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றின் மாறுபாடு, சிந்தனை மாற்றத்தை உருவாக்கி, அதற்கு உகந்த செயலில் ஈடுபடவைத்து,  மகிழ்ச்சி அல்லது துயரத்தை உணர வைக்கிறது.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் கலவையில் உருப்பெற்றது உலகம். நம் உடலும் ஐம்பெரும் பூதங்களின் கலவையில் உருப்பெற்றது என்கிறது ஆயுர்வேதம் (இதிபூதம யோதேஹ:). நம் உடலில் ஆகாயத்தின் பங்குண்டு என்கிறது உபநிடதம் (யாவான்வாஆகாச: தாவான் அந்தர் ஹிருதய ஆகாச:). ஆகாயத்தில் இருக்கும் கிரகங்களும் நட்சத்திரங் களும் நம் உடலில் இருக்கும் ஆகாயத்திலும் உறைந்திருக்கும். பிரம்மாண்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் பிண்டாண்டத்திலும் (உடலிலும்) பிரதிபலிக்கும். காலத்தையும் கிரகங்களையும் இணைக்கும் பாலமாக ராசிச் சக்கரம் உருப்பெற்றிருக்கிறது. அதில் இணைந்திருக்கும் கிரகங்கள், காலத்தின் மூலம் நம்மிடமும் பரவியிருக்கும். கண்ணுக்குப் புலப்படாத காலத்தை சுட்டிக்காட்ட ராசிச் சக்கரத்தை அமைத்திருக்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

ராசிச் சக்கரம் ஜோதிடத்தின் படைப்பு. உருவமற்ற காலத்தை அளக்க, உருவமான ராசிச் சக்கரம் பயன்படுகிறது. 'பூமத்திய ரேகையின் கிழக்கில், ஸ்ரீசைலத்தின் ஆக்னேய திக்கில், ராமர் கட்டிய சேதுவுக்கும் கங்கைக் கும் நடுவில்...’ என்று நாம் இருக்கும் இடத்தை ஸங்கல்பத்தில் வரையறுப்பது உண்டு (பூமத்ய ரேகாயா:பூர்வதிக்பாகெ, ஸ்ரீசைலஸ்ய ஆக்னேயதிக்பாகெ, ஸ்ரீராம சேது கங்கயோ: மத்யப்ரதேசே). இங்கு பூமத்திய ரேகை என்று ஒரு கோடு இல்லை. நாம்தான் மற்ற விஷயங்களை விளக்கிக் கூறுவதற்காக அப்படியரு கோடை ஏற்படுத்தியுள்ளோம்.

அதுபோன்று, கிரகங்களின் தன்மையை வரையறுக்க ராசிச் சக்கரம் உதவுகிறது. அது உயிரற்றது; ஜடம். கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இணைப்பில் செயல்படக்கூடியது. நம் மனம், உடல் ஆகியன ஜடம்; ஆன்மாவின் இணைப்பில் செயல்படும். ஆன்மாவின் இணைப்பில் உடலும் அதன் உறுப்புகளும் செயல்படுவதுபோல், கிரகங்களின் செயல்பாட் டில் உயிர்ப்பெற்று விளங்குகிறது ராசிச் சக்கரம். விண்வெளியில் தென்படும் அபரிமிதமான ஆற்றலை காலத்துடன் இணைத்து, உலகத்தை உணர வைக்கிறது ராசிச் சக்கரம். மனித சிந்தனையில் தோன்றும் மாற்றங்களை ராசிச் சக்கரம் வாயிலாக வரையறுக்கிறோம். தனி மனிதன், தான் தோன்றிய வேளையில் இணைந்த நட்சத்திரம் வாயிலாக, ராசிச் சக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறான். ராசி மண்டத்தில் நிகழும் விளைவுகள் அவன் பிறந்த நட்சத்திரம் வாயிலாக அவனையும் பாதிக்கும். அந்த பாதிப்பின் விளக்கவுரையே... பலன் சொல்லும் ஜோதிடப் பகுதி.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

படைத்தல், காத்தல் அழித்தல் அத்தனையும் காலத்தின் பங்கு. கடவுள் கால வடிவில் அதை நிகழ்த்துகிறார் என்கிறது ஜோதிடம் (கால:ஸ்ருஜதி பூதானி...). கால விதான சாஸ்திரம் என்பது ஜோதிடத்தின் பண்டைய பெயர். காலத்துக்கு ஆதி-அந்தம் இல்லை. இடையில் நிகழும்... நாம் பிறக்கும் வேளையை காலத்தின்

ஆரம்பமாக வைத்து, ஜாதகம் வாயிலாக காலம் நிகழ்த்தும் விளையாட்டைச் சந்தித்து, இன்ப-துன்பங்களை உணர்கிறோம். நாம் மறைந்துவிடுவோம். காலம் மறையாது தொடர்ந்து இருக்கும். 'ப்ளோட்டிங் பாப்புலேஷன்’ போன்று காலத்துடன் இணைந்து

வெளிவருவோம். அந்த இடைவெளியில் விளையும் நன்மை - தீமைகளை வரையறுக்கும் கருவியாக ஜோதிடம் செயல்படும்.

##~##
பூர்வ ஜன்ம வினையை வெளிக்கொண்டு வருவதற்கான விஞ்ஞானக் கருவிகள் இன்று வரை தோன்றவில்லை. முனிவர்களின் சிந்தனையே நம்பிக்கையை ஊட்டுகிறது. இயற்கையில் தோன்றிய ஜோதிடத்துக்கு சான்று தேட வேண்டிய அவசியம் இல்லை. அதன் அடித்தளம் சூரியனும், சந்திரனும், நட்சத்திரமும். அவற்றின் தாக்கம் உலகத்தையே பாதிக்கும்போது, உயிரினங்களையும் பாதிப்பதில் ஆச்சரியம் இல்லை. வாழப் பிறந்த நாம் எதிரிடையான இடையூறுகளை தகர்த்தெறிந்து வெற்றிபெற, ஜோதிடம் உதவும். யுக்திவாதிகளின் சிந்தனை சிறிய வட்டத்தில் ஒடுங்கியிருப்பதால், அது நம்பிக்கைக்கு உகந்ததல்ல. மூளைக்குள், படைப்பில் தோன்றிய செல்களில் நாம் படைத்த மருந்து நுழையாது, நுழைவாயிலில் நின்றுவிடும். மன அமைதி இல்லாமல் வாடும் மனிதர்கள் தற்போது ஏராளம். ரசாயன ஏற்றக்குறைச்சலை (கெமிக்கல் இன் பாலன்ஸ்) சந்தித்தவர்கள், உயிர் பிரியும் வரை மருந்து உட்கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பது அதற்கு அத்தாட்சி!

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள், ராசி புருஷனின் அவயவமாகக் கருதப்படுகின்றன. சிரம், முகம், கைகள், இதயம், வயிறு, அரை (இடுப்பு), வஸ்தி, லிங்கம், துடைகள், முட்டு, கணுக்கால், பாதம் - இப்படி 12 ராசிகளும் உடலுறுப்புகளுக்கு பிரதிநிதியாக இருக்கின்றன. ராசி நவாம்சகம் அவன் அனுபவிக்கும் தசைகளை வரையறுக்கும். மேஷம், சிம்மம், தனுசு இந்த மூன்றின் நவாம்சகங்கள்... நட்சத்திரங்கள் மாறினாலும் தசைகளில் ஒன்றாக இருக்கும். ராசிக்கு உடையவனின் தரத்தை ஒட்டி ராசி பலம் பெற்று விளங்கும். பல தகவல்களின் தொகுப்பு ராசி. ஒன்று முதல் 60 வரை ராசியைப் பிரித்துத் தனித்தனி பலனை... அதில் வீற்றிருக்கும் கிரகங்களை வைத்து விளக்கும் ஜோதிடம். அதன் கூட்டு பலனே ராசி பலன் ஆகும்.

தனி மரம் தோப்பாகாது. ராசியின் ஒரு சிறு பகுதியின் பலன் மட்டுமே ராசி பலன் ஆகிவிடாது. தானியத்தின் குவியல் போன்றது ராசிபலன். அதில் இருக்கும் ஒரு தானிய மணிக்கு மட்டுமே ராசி என்ற பெயர் இல்லை. ஒரு வீரனை சைன்யம் என்று அழைக்க முடியாது. 'காடு’ என்றால் பல மரங்களின் தொகுப்பு என்று பொருள். சரம், ஸ்திரம், உபயம், பகல் ராசி, இரவு ராசி, ஒற்றைப்படை, இரட்டைப்படை ராசி, ஜல ராசி, மனுஷ்ய ராசி, விலங்கின ராசி, ஊர்வன ராசி... இப்படி அதன் பிரிவுகள் விரிவடைந்து இருக்கும். பலன் சொல்லும்போது இவற்றையும் கவனிக்க வேண்டும்.  ராசியின் திசைகள், ராசிகளின் மாறுபட்ட இடங்கள், லக்ன ராசி, சந்திரன் இருக்கும் ராசி, அவர்களது அதிபதிகள் இருக்கும் ராசி, சந்திர லக்ன அம்சக ராசி, லக்னாம்சக ராசி... இவை ஆறும் பலன் சொல்லும் வேளையில் இணைத்துக் கொள்ளப் பட வேண்டும் என்கிறது ஜோதிடம். கேந்திரம், த்ரி கோணம், உபசயம், அபசயம் போன்ற நிலைகள், அதில் இருக்கும் கிரகங்கள் ஆகியவற்றையும் பலனில் இணைக்கச் சொல்லும்.

ராசியை வைத்து வரும் விஷயங்கள் கிரக பலனின் மாறுபடும். உச்சம், நீசம், மித்ரெ ராசி, சத்ரு ராசி போன்ற பாகுபாடுகளும் ராசியை வைத்து எழுந்தது. ஸ்வக்ஷேத்ரம், ஸுஹ்ருத் க்ஷேத்ரம். இப்படியும் பாகுபாடு உண்டு. ராசியின் விரிவாக்கம் துல்லியமான பலனை தேடிப்பிடிப்பதில் உதவுகிறது.

மேஷத்துக்கு- ஆடு, ரிஷபத்துக்கு- மாடு, மிதுனத்துக்கு- மனிதன், கர்க்கடகத்துக்கு- நண்டு, சிம்மத்துக்கு- சிங்கம், கன்னிக்கு- ஓடத்தில் வீற்றிருக்கும் கன்யகைப் பெண், துலாத்துக்கு- தராசு, விருச்சிகத்துக்கு- தேள், தனுசுக்கு- வில், மகரத்துக்கு- மகர மத்ஸம், கும்பத்துக்கு- குடம், மீனத்துக்கு- இரண்டு மீன்கள்... இந்த அடையாளங்கள் ராசியின் பல தகுதிகளை வெளியிடும். இவற்றை, ட்ரேடு மார்க்குக்கு போடும் அடையாளமாக எண்ணிவிடக் கூடாது. எல்லா உயிரினங்களையும் நினைத்து தன்னிச்சையாக ஏற்பட்டதாக நினைக்கக் கூடாது. இவை, கற்கால மனிதனின் மூளையில் தோன்றிய விளையாட்டாக அமையவில்லை; முதிர்ச்சி அடைந்த முனிவர்களின் மூளையில் தோன்றிய முன்னேற்ற எண்ணங்களின் பிரதிபலிப்பு.

பெயருக்கு ஒப்பான செயல்பாடு ராசிக்கு உண்டு. பெயருக்கு ஒப்பான உணவையும் பெயருக்கு ஒப்பான இயல்பையும் சுட்டிக் காட்டும் (ஸ்வனாமஸத்ருசா: ஸ்வசரா:ச). மேஷத்துக்கு- ஆடு. அதன் இயல்பு மற்றும் உணவு, அந்த ராசியில் பிறந்தவனில் தென்படும். காரமான, கொஞ்சம் சூட்டோடு இருக்கும் உணவை ஆடு விரும்பும். ரிஷபம்- மாடு; அது புல்லை உணவாக்கும். மிதுனம்- மனிதன். அவன் அரிசி, கோதுமை போன்றவற்றை விரும்புவான். கர்க்கடகம்- நண்டு. அது மீனை உண்ணும். சிம்மம்- சிங்கம். அது, மிருகங்களை உண்டு களிக்கும். இப்படி உணவோடு நிற்காமல் இயல்பிலும் பிரதிபலிக்கும்.

பிறந்தவன் மேஷ ராசியானால், அதாவது மேஷ லக்னமோ, சந்திர லக்னமோ ஆனால், நான்காலி போல நடைப்பயணத்தில் விருப்பம் இருக்கும்.

அவசர அவசரமாக உணவை ஏற்பவனாகவும் இருப்பான். நீரில் பயம், அளவுக்கு அதிக மான ஆசையும் இருக்கும். தன்னை தூய்மைப் படுத்துவதில் அக்கறை இருக்காது. ரிஷபம்  லக்னமானால் பயணத்தில் வேகம் இருக்காது, மெள்ள நடப்பான், பாரத்தை சுமப்பான், துயரத்தைப் பொறுத்துக்கொள்வான், உடலுழைப்பில் சளைக்க மாட்டான், உட் கொண்ட உணவு ஜீரணிக்கும் அளவு அக்னி பலம் இருக்கும். இப்படி, அந்தந்த ராசிகளின் அடையாளங்கள், அதில் பிறந்தவனின் மாறுபட்ட இயல்பை சுட்டிக்காட்டி உதவு கின்றன. ஆக, பிறந்தவனின் இயல்பையும் செயல்பாட்டையும் இறுதி செய்ய ராசியின் அடையாளங்களுக்கு பங்கு உண்டு. அதன் பெருமை மற்றும் வலிமையைப் புரிந்துகொண்டு, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை வழிபடுவது போல் ராசிகளையும் வழிபடச் சொல்கிறது பிரச்ன ஜ்யோதிடம்.

மேஷாய நம: ரிஷபாய நம: மிதுனாய நம: என்று ராசிச் சக்கர வழிபாடு உண்டு. ராசியை வழிபட்ட பிறகு,  பிரச்ன ஜ்யோதிடத்தில் இறங்குவர். நாமும் நமது நட்சத்திரத்துக்கு உரிய ராசியை வழிபட வேண்டும்.

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். அதன் சரிபாதிக்கு சூரியனும் சந்திரனும் அதிபதி. நவாம்சத்தில் 9 கிரகங்கள் இருக்கும். த்வாதசாம்சத்தில் 12 ராசியும் இருக்கும். அத்துடன் அதன் அதிபதிகளும் இருப்பார்கள். இரண்டேகால் நட்சத்திரமும் அதன் தசாநாதன்மார்களும் இருப்பார்கள். ராசியை வணங்கினால் அத்தனை கிரஹங்களையும் வணங்கியதாகி விடும். நமது நல்லது- கெட்டதை வரையறுப்பதில்... கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள்  ஆகிய மூன்றில் ராசியின் பங்கு சிறப்பானது. நட்சத்திர வழிபாட்டில் ராசியையும் சேர்த்து வழிபடுவது நல்லது.

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism