Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

Published:Updated:

ரு நைவேத்தியத்தை பல தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கலாமா?

கேள்வி-பதில்

எண்ணற்ற திருப்பெயர்களைச் சொல்லி ஸ்ரீராமனைச் சிறப்பிக்கின்றன புராணங்கள். அவற்றில் ஒன்று 'காகுத்தன்’. இந்தத் திருப் பெயருக்கான காரண விளக்கம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சுசிலா உபேந்திரன், கோவை-38

எந்தப் பெயரைச் சொல்லியும் ஸ்ரீராமனை அழைக்கலாம். எல்லாத் தகுதியும் நிறைந்து இருப்பதால், எந்தப் பெயரும் அவரை சுட்டிக்காட்டும்.

ஸஹஸ்ரநாமத்தில், குறிப்பிட்ட தெய்வத்தின் தனித்தன்மையை  விளக்கும் பெயர்கள் ஏறத்தாழ 300-க்கு மேல் போகாது. மீதி இருக்கும் பெயர்கள், எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும்படியாகவே அமைந்திருக்கும். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் தென்படும் பெயர்கள், மற்ற தெய்வங்களுக்கான ஸஹஸ்ரநாமத்திலும் இருக்கும்.

கேள்வி-பதில்

திருதராஷ்டிரனும் பாண்டுவும் ஒரே வம்சத்தைச் சார்ந்தவர்கள். ஆனால், துரியோதனனைக் குறிப்பிடும்போது கௌரவர்கள் என்றும், தருமரைக் குறிப்பிடும்போது பாண்டவர்கள் என்றும் சொல்வது உண்டு. சூரிய வம்சத்தில் உதித்தவன் ராமன். ஆனால், அதே வம்சத்தில் உதித்த ரகுவின் பெயரை வைத்து ரகு வம்சத்தில் தோன்றியவன் என்றும் சொல்வார்கள். அதுபோன்று, காகுத்தன் பரம்பரையில் தோன்றியதால் ஸ்ரீராமனும் காகுத்தன் ஆனான்.

அரசாட்சியில் பெருமை பெற்றவர்கள் தனியாக கௌரவிக்கப் படுவார்கள். ராம ராஜ்யம் என்று சிறந்த அரசாட்சியை சுட்டிக் காட்டுகிறோம். ராமனுக்கு முன்னதாகவும் சிறந்த ஆட்சி அமைந்திருந்தது. அதையே ஸ்ரீராமன் பின்பற்றினார். இருந்தாலும், ஸ்ரீராமனுக்கு தனிச்சிறப்பு இருந்தது. ரகுவம்சத்து அரசர்களில் பகீரதனுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அதுபோல் சிலநேரம் பேர் பெற்றவர்களின் பெயரால் அவரது வம்சம் குறிப்பிடப்படும்.

கோயில்கள் பலவற்றில், சிறு பாத்திரத்தில் இருக்கும் நைவேத்தியத்தையே அனைத்து சந்நிதிகளிலும் நிவேதனம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஸ்வாமிக்கும் தனித்தனியே நிவேதனம் செய்வதுதானே சரி?

மேலும், ஸ்வாமியின் திருவுருவ அளவை கருத்தில் கொண்டு அதில் மூன்றில் ஒருபாகம் அளவு நிவேதனம் படைக்க வேண்டும் என்று பெரியவர் ஒருவர் விளக்கம் அளித்தார். கோயில்களில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்வது குறித்து தர்மசாஸ்திரம் தரும் அறிவுரை என்ன?

- எல்.பழனிச்சாமி, திருச்சி

ஸனாதனம் சொல்லும் பஞ்சாயதன பூஜையில் 1/4 படிக்குமேல் 1/2 படிக்குக் குறைவாக நிவேதனம் செய்வது உண்டு. சாஸ்தா ப்ரீதியில் செம்பு அல்லது சரக்கில் ஒரு கலம் அரிசியில் நிவேதனம் செய்வதுண்டு. அதாவது, நிவேதனம் தயாரான பாத்திரத்துடன் நிவேதிப்பது உண்டு.

##~##
பாத்திரங்களில் பகிர்ந்தளித்து பல தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் நடைமுறை பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக நிவேதனம் தயார் செய்து, அதைப் பல்வேறு பாத்திரங்களில் பகிர்ந்துவைத்து, தனித்தனியாக நிவேதனம் செய்யும்போது... முதல் நிவேதனம் ஆனதும், அதாவது முதல் பாத்திரத்தில் உள்ள நைவேத்தியம் நிவேதனம் செய்யப்பட்டதும் மற்றவையும் நிர்மால்யம் ஆகிவிடும். எனவே, மற்ற தெய்வங்களுக்குப் பகிர்ந்தளித்த நிவேதனம் தனது தூய்மையை இழந்துவிடும் என்கிறது தர்ம சாஸ்திரம். சமைத்த பொருளுக்கு மட்டும் இது பொருந்தும். தேங்காய், பழ வகைகள் தகுதி இழக்காது.

கோயில் பூஜை முறைகள் ஆகமத்தைத் தழுவி செயல்படும். ஆகமத்தை உயர்த்திக்காட்ட தர்மசாஸ்திரத்தின் சில கோட்பாடுகளைப் புறக்கணிக்கும். தனக்கென்று ஒரு பூஜா முறையை வகுத்துக்கொண்டிருக்கும். கோயில் பூஜைகளில் சைவ ஆகமங்கள், பாஞ்சராத்ர ஆகமங்கள் வைகானஸ ஆகமங்கள்... ஆகிய ஒவ்வொன்றும் தத்தமது விதிமுறைகளைப் பின்பற்றும். ஆகவே, தற்போது நடைபெறும் நிகழ்வுகளை தர்மசாஸ்திரத்துடன் உரசிப்பார்க்கக் கூடாது.

கோயில்களில் நித்ய பூஜைகள் அவரவர் ஆகமப்படி நடந்தேறுவதை கண்காணிக்க அறங்காவலர்கள் இருக்கிறார்கள். சேவார்த்திகள் அதில் தலையிடாமல், சேவையில் கவனம் செலுத்தினால் போதுமானது. பூஜை முறைகளில் நமது ஆராய்ச்சி செயல்படும்போது, பக்தியும் பணிவிடையும் தரம் தாழ்ந்துவிடும். எனவே, சேவார்த்திகள் தெய்வ தரிசனத்தில் கண்ணாக இருந்து வழிபட்டால் போதுமானது.

பண்டைய ஆலயங்களில் பரிவார தேவதைகள் குறைவு. அங்கு, நிவேதனமும் தனித்தனியாக இருக்கும். காலப்போக்கில் பரிவார தேவதைகளின் எண்ணிக்கை வளர்ந்ததால், அதற்கு உகந்தவாறு மடப்பள்ளி, நிவேதனம் போன்றவற்றில் ஏற்படும் கவனக்குறைவு, நீங்கள் சொல்வதுபோன்ற நிவேதனத்துக்கு வழிவகுக்கும்.

தற்காலச் சூழலில்... புதிதாகத் தோன்றும் கோயில்களில், சேவார்த்திகளின் விருப்பப்படி, சட்டதிட்டத்தை மீறி பல பரிவார தேவதை களை கோயிலை அடைத்து பிரதிஷ்டை செய்வது நடைமுறையில் உண்டு.அங்கெல்லாம் விதிகளைப் புகுத்துவது  கடினம். கால மாற்றம் மன மாற்றத்தை அளித்தது; மன மாற்றமானது விதியை அலட்சியப்படுத்துகிறது. சேவார்த்திகள் அதில் நுழையாமல் பக்தியோடு இறைவழிபாட்டில் ஈடுபடுவதே சிறப்பு!

கேள்வி-பதில்

108 ருத்ராட்சங்கள் கொண்ட எனது ஜபமாலையில் ஒரு ருத்ராட்சம் விரிசல் கண்டுவிட்டது. இந்த நிலையில் ஜபமாலையை தொடர்ந்து பயன்படுத்தலாமா? அது, என் குருநாதர் அனுக்கிரகம் செய்து கொடுத்த மாலை என்பதால், கிடப்பில் போட மனம் வரவில்லை. தாங்களே வழிகாட்ட வேண்டும்.

- வித்யா மூர்த்தி, வேலூர்

நல்லதொரு வேளையில் நடந்தேறிய பூணூல் கல்யாணத்தில், எனது தகப்பனார் என் தோளில் அணிவித்த பூணூலானது அறுந்துவிட்டது. அப்போது, அதை மாற்றிவிட்டு புதுப் பூணூலை அணிவோம். தகப்பனார் போட்ட பூணுலை எடுக்க மனமில்லாமல், ஒட்டுப்போட்ட பூணுலை அணியமாட்டோம். தர்மசாஸ்திரமும் புதுப்பூணுலை ஏற்க வைக்கும். தாலிக்கயிறு அறுந்தால் புது தாலிக்கயிற்றை ஏற்போம். அன்புக்கு உரிய கணவன் கட்டியதை எப்படித் துறப்பது என்று சங்கடப்படுவதில்லை.

குருநாதரின் அனுக்ரஹம் தங்களுக்குத்தான்; ஜபமாலைக்கு அல்ல. ஜபமாலை மாறினாலும் அனுக்ரஹம் அழியாது. அனுக்ரஹம் ஜப மாலையில் ஒட்டிக்கொண்டிருப்பதாக எண்ணம் ஏற்படுவதால், அதை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. மாறாக, அனுக்ரஹம் தங்களிடம் தங்கியிருப்பதாக எண்ணினால், ஜப மாலையை மாற்றுவதில் நெருடல் இருக்காது.

கோயிலில் உறைந்திருக்கும் இறை வடிவத்தில் விரிசல் ஏற்பட்டால், அதை மாற்றிக் கும்பாபிஷேகம் செய்வது உண்டு. மடாதிபதி நடைமுறைப்படுத்தி அருள்புரிந்த இறையுருவம் என்று எண்ணி அதையே தக்கவைத்துக் கொள்வதில்லை. தாத்தா குளித்த கிணறு. அதில் உப்புத் தண்ணீர்தான் கிடைக்கிறது; குடிக்கப் பயன்படாது. ஆனாலும், தாத்தா குளித்த கிணறாயிற்றே என்று, அந்தக் கிணற்று நீரை குடிக்கப் பயன்படுத்துவோமா? (தாதஸ்ய கூபோயம் இதி ப்ருவாண: க்ஷ£ரம் ஜலம் காபுரஷா: பிபந்தி)!

லட்சியத்துக்கு முன்னுரிமை அளிக்காமல், அதை அடையும் கருவிக்கு முன்னுரிமை அளிப்பது சிறப்பல்ல. மாறிக் கொண்டிருக்கும் உலகில் தகுதி இழப்பைத் தவிர்த்து, தகுதியுடையதை ஏற்பது சிறப்பு. மாற்று கண், மாற்று கால் என மாற்று உறுப்புக்களை ஏற்கத் தயங்காத நாம், தகுதியிழந்ததைத்  துறப்பதில் சுணக்கம் காட்டுவது விசித்திரமாக இருக்கிறது.

விரிசல் ருத்ராட்சத்தை அகற்றி, நல்ல ருத்ராட்சத்தை அணியுங்கள்; எல்லாம் நன்மையில் முடியும்.

யோகங்கள் 27, கரணம் 11 இவற்றைச் சங்கல்பத்துடன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? மேலும், சக்தி விகடன் பஞ்சாங்கத்தில் சித்த, அமிர்த, மரண யோகங்கள் மட்டுமே தரப்படுகின்றன. இந்த 3 யோகங்களும் 27 யோகங்கள் எனக் குறிப்பிடப்படுபவையும் வெவ்வேறா? தயவுகூர்ந்து விளக்குங்களேன்.

- பா.சுப்ரமணியராவ், பெங்களூரு

வருஷம், மாதம், தேதி, நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் - இவற்றை முற்றிலும் குறிப்பிட்டால் துல்லியமான வேளை கிடைக்கும். மணி, நிமிடம், செகண்ட் வரையிலும் சொல்வது துல்லியமான வேளையைக் குறிப்பிடுவதற்குதான்.

ஐந்து அங்கங்களை உடையது பஞ்சாங்கம். பஞ்ச என்றால் ஐந்து. திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்கள். யோகத்தையும் கரணத்தையும் விட்டுவிட்டால் துல்லியமான நேரம் சொல்லப்பட்டதாக ஆகாது. வேளையின் ஐந்து அங்கங்களைக் குறிப்பிட வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். காலப்போக்கில் அதைவிட்டு நழுவி, தோராயமான காலத்தை குறிப்பிட்டு திருப்திப்படுகிறோம். விஷயத்தைப் புரிந்துகொண்டு நாம் திருந்த வேண்டும்.

அமிர்த, சித்த, மரண யோகங்கள் பஞ்சாங்கத்தில் அடங்காது. அவை காலத்தின் உருப்படிகள் அல்ல. மக்களின் விருப்பத்துக்காக அதை எழுதுகிறோம்.

கேள்வி-பதில்

எங்கள் ஊர்ப் பக்கம் சிதிலம் அடைந்து கிடந்த  சிவாலயத்தைப் புதுப்பிக்க திருப்பணிகள் ஆரம்பமாகி யுள்ளன. அங்கே லிங்க மூர்த்தம் மட்டுமே உண்டு. அம்பாள் விக்கிரகத்தை புதிதாகச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். கல்வெட்டு தகவலின்படி ஸ்வாமியின் திருநாமம் தெரிய வந்துள்ளது. ஆனால், அந்த ஆலயத்துக்கான அம்பாளின் திருநாமம் என்னவென்று தெரியவில்லை.

இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது? ப்ரச்னம் மூலம் புதிய அம்பாளுக்கான திருநாமம் குறித்து முடிவெடுக்கலாமா?

- எழில்வண்ணன், அன்னம்புத்தூர்

மூர்த்தத்தின் பெயர் தெரிந்துவிட்டது. புதிதாக அமையும் அம்பாள் திருவுருவத்துக்கு லலிதா ஸகஸ்ரநாமத்தில் இருந்து ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கலாம். லலிதா ஸஹஸ்ரநாமப் பெயர்கள் அம்பாளின்  தனித்தன்மையைப் பறைசாற்றும். அதுவே சிறந்த வழி. ப்ரச்னம் பார்ப்பது தேவையற்றது.

ப்ரச்னத்திலும் உமையவளுக்குப் பொருந்தும் பெயரையே எடுத்துரைப்பார் ப்ரச்னம் பார்ப்பவர். வியாச முனிவரால் இயற்றப்பட்ட புராணப் பெயருக்கு ப்ரச்ன விளக்கத்தைவிட பெருமையுண்டு. ப்ரச்னத்தின் முடிவு சாஸ்திரத்துக்கு உடன்படாது. ப்ரச்னம் ஜோதிடத்தின் ஒரு பகுதி. குறிப்பிட்ட விஷயங்கள் மட்டுமே அதன் வரம்பில் அடங்கும். பிறந்த நேரம் தெரியாதவனுக்கு, நஷ்ட ஜாதகம் மூலம்தான் அதை கண்டுபிடித்தார்கள். ஆக, ஜோதிடமே பிரச்னத்தை அணுகவில்லை. ப்ரச்னம், ஜோதிடம் பற்றிய அறிவு பொதுமக்களிடம் போதுமான அளவு பதியவில்லை. கடவுள் அருளால் அது கிடைக்கவேண்டும்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism