
கங்கா ஸ்நானம்!
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அன்று சூரிய உதயத்துக்கு நான்கு நாழிகைக்கு (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்) முன் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் நீராடவேண்டும். இதனால், காசி-கங்கையில் நீராடிய புண்ணியமும், லட்சுமிகடாட்சமும் கிடைக்கும்.
யம தீபம் எதற்கு?
தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக 'மஹாளய பட்சம்' காலத்தில், நம் முன்னோரை நினைத்து வழிபாடுகள் செய்வோம். அப்போது பூமிக்கு வரும் நம் மூதாதையர் நமது வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு மனத்திருப்தியுடன் மேலுலகத்துக்கு திரும்பிச் செல்வது, தீபாவளி- அமாவாசையன்றுதான். அப்போது அவர்களுக்கு இருட்டில் பாதை தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, தீபாவளிக்கு முதல் நாள் இரவு 'யம தீபம்' என்ற ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றி, வீட்டு மொட்டைமாடி, மேற்கூரைகள்... என உயரமான இடத்தில் தெற்குநோக்கி வைக்கவேண்டும். அப்போது,
'ஸ்ரீ யமாய நம: ஸ்ரீ யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச சித்ர குப்தாய வை நம ஓம் நம:’ என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இதனால் யமபயம் நீங்கும்.