Published:Updated:

முறுக்கு அதிரசப் படையல்!

தீபாவளி தரிசனம்...

முறுக்கு அதிரசப் படையல்!

தீபாவளி தரிசனம்...

Published:Updated:
முறுக்கு அதிரசப் படையல்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞ்சாவூர் மேலவீதியில் அழகுறக் கோயில்கொண்டு, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள் ஸ்ரீபங்காரு காமாட்சி அம்மன். இவளின் சந்நிதியில் நின்று, கண்ணீர் மல்க நாம் வைக்கும் பிரார்த்தனையைச் சட்டென்று நிறைவேற்றி வைக்கிற கருணைத் தெய்வம் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

காஞ்சி ஸ்ரீகாமாட்சியின் நெற்றியில் இருந்து தோன்றிய சக்தியே ஸ்ரீபங்காரு காமாட்சித் தாயாகத் திகழ்கிறாள் என்பர். அந்நியப் படையெடுப்பின்போது செஞ்சி, உடையார்பாளையம், அனக்குடி என்று பல ஊர்களில் வைக்கப்பட்ட அம்பிகையின் விக்கிரகத் திருமேனியை, மராட்டிய மன்னன் கனவில் வந்து அம்பிகையே உத்தரவிட... அதன்படி அவள் சுட்டிக்காட்டிய இடத்தில், தஞ்சை மேலவீதி பகுதியில் வைத்துக் கோயில் எழுப்பினான் என்கிறது ஸ்தல வரலாறு.  

வருடத்தில் 11 முறை மட்டுமே அம்பிகைக்கு அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்தின்போது அம்பாளுக்கு புனுகு சார்த்துவது மட்டுமே வழக்கம். அபிஷேக தரிசனம் இங்கு இல்லை. கிழக்குப் பார்த்தபடி மூலவரும், தெற்குப் பார்த்தபடி உத்ஸவரும் அமர்ந்த நிலையில் தரிசனம் தரும் அழகே அழகு!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து, பங்காரு காமாட்சியம்மனுக்கு அரளிப்பூமாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!

முறுக்கு அதிரசப் படையல்!

ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், கார்த்திகை மாதம் முழுவதும் அம்மனுக்கு விசேஷ பூஜைகளும் நடைபெறும் இந்த ஆலயத்தில், மார்கழி துவங்கியதும் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் எனக் களைகட்டுமாம்!

தீபாவளி நன்னாளில், ஸ்ரீபங்காரு காமாட்சியம்மனுக்கு முறம் ஒன்றில் அதிரசம், முறுக்கு எனப் பண்டங்களை எடுத்து வந்து படையலிடுவார்கள். தங்களால் முடிந்த அளவில் (11 அல்லது 21 என எண்ணிக்கையில்) பலகாரங்களை எடுத்து வந்து படையலிட்டு, அம்மனை வணங்கிப் புத்தாடை அணிந்துகொண்டால், வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

- ச.மஞ்சுளா
படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism