Published:Updated:

பிரிந்த தம்பதி சேருவர்!

சரவணபவனே சரணம்... சரணம்!

பிரிந்த தம்பதி சேருவர்!

சரவணபவனே சரணம்... சரணம்!

Published:Updated:
பிரிந்த தம்பதி சேருவர்!

ரியலூர்- பெரம்பலூர் சாலையில், அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீபால தண்டாயுதபாணி திருக்கோயில். பழநியில் காட்சி தருவது போன்று ஆண்டித் திருக்கோலத்தில் காட்சி தரும் கந்தக் கடவுளின் அழகே அழகு!

சுமார் 500 வருடங்கள் பழைமை மிக்க ஆலயம் இது. முனிவர் ஒருவரின் திருச்சமாதியின் மேல் ஸ்ரீமுருகப்பெருமானின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதாகவும், அந்த முனிவர் நன்னூல் சிவப்பிரகாச(ம்) சுவாமிகள் என்றும் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். எனவே, இங்கு வரும் பக்தர்கள், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீமனோன்மணி அம்பாள், ஸ்ரீதுர்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீஇடும்பன் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன.  

##~##
தைப்பூசம், பங்குனி உத்திரம், மாதந் தோறும் வரும் கார்த்திகை நன்னாள் ஆகியவை சிறப்புறக் கொண்டாடப்படு கின்றன. முக்கியமாக, எட்டு நாள் விழாவாக நடைபெறும் கந்த சஷ்டிப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுமாம். தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் திருவீதியுலா வரும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும். ஆறாம் நாள் சூரசம்ஹார நாளில் கலந்துகொண்டு தரிசித்தால், எதிரிகள் தொல்லை ஒழியும்; வழக்கில் வெற்றி கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

அதையடுத்து, ஏழாம்நாள் திருக்கல்யாண வைபவம். இந்த இரண்டு நாட்களும் முருகப்பெருமானைத் தரிசிக்க அரியலூர், பெரம்பலூர் எனப் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரள்கின்றனர். தடைப்பட்ட திருமணத்தால் கலங்குவோரும் பிரிந்த தம்பதியும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு தரிசித்துப் பிரார்த்தித்தால், விரைவில் திருமணம் நடந்தேறும்; பிரிந்தவர் கள் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்!  

இங்கே செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் ஸ்ரீதுர்கைக்கும், தேய்பிறை அஷ்டமி யில் ஸ்ரீபைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கட்டுரை, படங்கள்: க.விக்னேஷ்குமரன்