Election bannerElection banner
Published:Updated:

வேடனாக வந்த புத்தூர் வேலன்!

சரவணபவனே சரணம்... சரணம்!

வேடனாக வந்த புத்தூர் வேலன்!
##~##
துரையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது உசிலம்பட்டி. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், புத்தூர் எனும் கிராமத்தில், பச்சைப்பசேலன இயற்கை எழிலார்ந்த சூழலில் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி.

சுமார் 900 வருடங்கள் பழைமை வாய்ந்த கோயில் இது.  ஒரு காலத்தில் நாகாசுரன் எனும் அரக்கன் பாம்பு வடிவில் வந்து, இந்தப் பகுதி மக்களைக் கொடுமைப்படுத்தினான். மக்களின் நிலை கண்டு வருந்திய மன்னர், தன் இஷ்ட தெய்வமான கந்தவேளை நினைத்துக் கண்ணீருடன் பிரார்த்தித்தார். 'முருகய்யா... என் மக்க ளையும் இந்தத் தேசத்தையும் நீதான்ப்பா காப்பாத்தணும்’ என மனமுருகி வேண்டினார். அன்றிரவு மன்னரின் கனவில் வந்த முருகக் கடவுள், 'கவலை வேண்டாம். சீக்கிரமே மக்கள் நிம்மதி அடைவார்கள்’ என்று அருளிச் சென்றார்.

அதன்படி, வேடனாக வந்த முருகப்பெருமான், நாகாசுரனை அம்பு தொடுத்துக் கொன்றார். மக்களும் மன்னரும் ஆனந்தத்தில் திளைத்தனர். அப்போது நாகாசுரனை அழித்த இடத்தில், முருகப் பெருமானுக்கு ஆலயம் கட்டி வழிபடுவது என எண்ணம் கொண்ட மன்னர், அப்படியே அழகிய சிறிய கோயிலைக் கட்டினார். இங்கே கருவறையில் வேடனாகவே காட்சி தருகிறார் முருகப்பெருமான்.

வேடனாக வந்த புத்தூர் வேலன்!

ஆரம்ப காலத்தில், முருகப்பெருமான் மட்டுமே சந்நிதி கொண் டிருந்தாராம். அசுரனை அழிப்பதற்காகக் கோபத்துடன் வேடனாக வந்ததால், அவரின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டி, திருமலைநாயக் கரின் சகோதரர் இங்கே ஸ்ரீவள்ளி- தெய்வானைக்கும் விக்கிரகம் அமைத்துப் பிரதிஷ்டை செய்தார் என்கிறது ஸ்தல வரலாறு.

பசுமையான சூழலில் அமைந்துள்ளது ஆலயம். மூலவரின் திருநாமம் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி. திருப்பாதத்தில் செருப்பு, கால்களில் வீரத்தண்டை, கையில் வில், இடுப்பில் கத்தி என வேட னாகவே காட்சி தந்தருள்கிறார் கந்தக்கடவுள். ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, இரட்டை விநாயகர் என அனைவரும் தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். இங்கே பாணம் மட்டுமே கொண்ட ஸ்ரீஅகத்தியலிங்கம் உள்ளது. இதில் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஐக்கியமாகி, அருள் புரிவ தாக ஐதீகம். பௌர்ணமியின் 3-ஆம் நாள், இங்கு வந்து அகத்திய முனிவர் பூஜை செய்வதாக நம்பிக்கை.

வேடனாக வந்த புத்தூர் வேலன்!

தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கந்த சஷ்டி வைபவத்தின்போது, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெறும். பயந்த சுபாவம் உள்ளவர்கள், மனத்தில் குழப்பத்துடன் இருப்பவர்கள், வாழ்வில் முன்னேற்றம் தடையாக இருக்கிறதே எனப் புலம்புபவர்கள் இந்த நாளில் இங்கு வந்து ஸ்ரீசுப்ர மணிய ஸ்வாமியை வணங்கித் தொழுதால், விரைவில் நல்லது நடைபெறும்; வாழ்வில் சுபிட்சம் நிலவும் என்கின்றனர், பக்தர்கள்.

பாம்பு வடிவில் வந்த அரக்கனை அழித்த தலம் என்பதால், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் வணங்கி வளம் பெற வேண்டிய திருத்தலம் என்பது கூடுதல் சிறப்பு.

     - ச.பா.முத்துக்குமார்
படங்கள்: எஸ்.கேசவ சுதன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு