சபரிமலையில் உள்ளது போலவே, பதினெட்டுப் படிகளுடன் கட்டப்பட்ட ஐயப்பன் கோயில்கள் பல உண்டு. சென்னை, மடிப்பாக்கம் பகுதியிலும் பதினெட்டுப் படிகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது ஐயப்பன் ஆலயம்.

அறுபதுகளில்... சென்னை- தி.நகரில் உள்ள சிவா- விஷ்ணு ஆலயத்தில், ஸ்ரீஐயப்ப விக்கிரகம் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டு வந்ததாம். ஒருமுறை, அங்கு வந்த காஞ்சி மகா பெரியவா, 'சிவனாரும் மகாவிஷ்ணுவும் ஐக்கியமாகி அருள்பாலிக்கிற தலம் இது. எனவே, இருவரும் கலந்திருக்கிற ஐயப்ப விக்கிரகத்தை வைக்க வேண்டாம்’ என அருளினாராம்.

அதையடுத்துப் பல வருடங்கள் கழிந்த நிலையில், மடிப்பாக்கம் பகுதியில் பெரியவர் ஒருவர், ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்குக் கோயில் கட்டும் பணியில் ஈடுபட, அவரின் கனவில் தோன்றினார் ஸ்ரீஐயப்பன். தான் இருக்கும் ஆலயத்தைத் தெரிவித்து, அங்கிருந்து விக்கிரகத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்யும்படி சொல்லி மறைந்தாராம். அதன்படியே செய்யப்பட்டது. 1978-ஆம் வருடம், அப்போதைய சபரிமலையின் பிரதான தந்திரி நீலகண்டரு இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். அன்று துவங்கி இன்றளவும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்து அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி. தவிர, நோய் தீர்க்கும் மருத்துவராக இருந்து, மக்களின் சகல நோய்களையும் தீர்த்தருள்கிறார் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். இங்கு ஸ்ரீகாச்சுகடுத்த ஸ்வாமி, ஸ்ரீகருப்பண்ண ஸ்வாமி ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

கார்த்திகை மாதம் துவங்கியதும், பிரம்மோத்ஸவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நாட்களில், சென்னை முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர். அதேபோல், கார்த்திகை முதல் நாளன்று, ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து, மாலை அணிந்து விரதம் துவக்குகின்றனர்.

''கடவுள் மேல நம்பிக்கை இல்லாம இருந்தவன் நான். ஒருமுறை, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து, ஆபரேஷன் பண்ணணும்னு ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டாங்க. ஆபரேஷனும் நல்லபடியா நடந்துச்சு. ஆஸ்பத்திரியில சிகிச்சையில இருக்கிறப்ப, மடிப்பாக்கம் கோயில் ஐயப்ப சொரூபம்தான் என் மனக் கண் முன்னால அடிக்கடி வந்து போச்சு. சிலிர்த்துப் போயிட்டேன். எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்த ஐயப்ப சாமிக்கு அன்னிலேருந்து நான் அடிமையாவே ஆயிட்டேன்!'' என நா தழுதழுக்கச் சொல்கிறார் சுப்ரமணி எனும் பக்தர்.

இந்தக் கோயிலில் பறை எடுப்பு உத்ஸவக் காலம் அனுஷ்டிக்கப்படுகிறது. அப்போது, கோயிலைச் சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று, வீட்டுக்கு வீடு பத்து ரூபாயும் தானியங்களும் வாங்கி வருவார்களாம். இதனால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

இன்னொரு விஷயம்... கோயில் சார்பில் வருடந்தோறும் ஏழை மாணவர்களுக்கு புத்தகங்களும் மருத்துவ முகாம்களும் நடைபெறுகின்றன.

- கட்டுரை, படங்கள்: செ.கிரிசாந்