Published:Updated:

"கேட்டதைத் தந்தான் ஸ்ரீஐயப்பன்!"

புதுக்கோட்டை சாமியின் அனுபவம்

"கேட்டதைத் தந்தான் ஸ்ரீஐயப்பன்!"

புதுக்கோட்டை சாமியின் அனுபவம்

Published:Updated:
##~##

'சின்ன வயசுல கோயில் குளம்னு போவேனே தவிர, பெரிய பக்தியெல்லாம் இல்லாமத்தான் இருந்தேன். 'நீ எனக்கு இதைக் குடு; நான் உனக்கு இதைப் பண்றேன்’னு பேரம் பேசி, சாமி கும்பிட்டவன் நான். ஆனா, இன்னிக்கு ஸ்ரீஐயப்ப ஸ்வாமியோட திருநாமத்தை வார்த்தைக்கு வார்த்தை உச்சரிக்கிற பக்திமான் நான்!'' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் பொன்.கந்தசாமி. புதுக்கோட்டையில் வசிக்கும் இவருக்கு வயது 68. நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

 ''கல்யாணமாகி நாலு வருஷமாகியும் குழந்தை பாக்கியம் மட்டும் தட்டிக்கிட்டே போச்சு. வேண்டாத கடவுள் இல்லை; பார்க்காத வைத்தியம் கிடையாது. அப்பத்தான் என் நண்பர் ஒருத்தர், 'ஐயப்ப ஸ்வாமிகிட்ட உன் பிரார்த்தனையைச் சொல்லு. 'எனக்குக் குழந்தை பாக்கியம் கொடு. அடுத்த வருஷமே மாலை போட்டு, விரதமிருந்து சபரிமலைக்கு வந்து உன்னைப் பார்க்கறேன்’னு வேண்டிக்கோ. நிச்சயம் நல்லது நடக்கும்’னு சொன்னார். நானும் அப்படியே வேண்டிக் கிட்டேன். என்ன ஆச்சரியம்... அந்த வருஷமே பெண் குழந்தை பொறந்துது. அந்த நிமிஷத்துலேருந்து ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு பக்தனாகிட்டேன்!'' என்று நெக்குருகிச் சொல்கிறார் கந்தசாமி.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"கேட்டதைத் தந்தான் ஸ்ரீஐயப்பன்!"

''முதல் வருஷ சபரிமலை பயண அனுபவத்தை மறக்கவே முடியாது என்னால! நண்பர்களோடு சேர்ந்துதான் போனேன். ஆனாலும், மலைல நிறைய இடங்கள் எனக்குப் புரிபடவே இல்லை. ஒரு கட்டத்துல, நண்பர்கள் கூட்டத்தை விட்டுட்டுப் பிரிஞ்சுட்டேன். எங்கே போக, எப்படிப் போகன்னு ஒண்ணுமே புரியலை. திகைச்சுப் போய் நின்னேன். கண்ணுலேருந்து கரகரன்னு தண்ணியே வந்துருச்சு எனக்கு.

அப்ப சாமி ஒருத்தர் வந்து, 'வாங்க, நாம சேர்ந்து போகலாம்’னு சொல்லி, என்னை அழைச்சுக்கிட்டுப் போனாரு. விறுவிறுன்னு அவர் முன்னால நடக்க, நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். அருமையா, கண் குளிர ஸ்வாமி தரிசனம் கிடைச்சுது. 'நல்லா தரிசனம் பண்ணினீங் களா சாமி?’ன்னு கேட்டார் அவர். ரெண்டு நிமிஷம் கழிச்சு திரும்பிப் பார்த்தா, அவரைக் காணோம். உடம்பே சிலிர்த்துப் போச்சு! எல்லாமே ஐயப்பனின் பேரருள். வேற என்ன சொல்றது?'' எனக் கண்ணீருடன் சொல்கிறார் கந்தசாமி.

''விரத காலங்களைத் தவிர்த்து, மத்த காலங்கள்ல புகை பிடிப்பேன்; மது அருந்துவேன். இந்த ரெண்டு பழக்கத்து லேர்ந்தும் முற்றிலுமாக விடுபட்டு, வெளியே வந்ததுக்கு ஐயப்ப ஸ்வாமியோட அருள் தான் காரணம். அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்துல உறுப்பினரா சேர்ந்து, அன்ன தானப் பணிகள்ல ஈடுபட ஆரம்பிச்சது லேருந்து, எல்லாக் கெட்டப் பழக்கங்களும் என்னை விட்டுப் போயிருச்சு.  

என் பொண்ணுக்குக் கல்யாணமாகி குழந்தையே இல்லாம இருந்துச்சு. 'அப்பா ஐயப்பா... உன்னைப் போல ஒரு பேரக் குழந்தையைக் கொடு எனக்கு’ன்னு வேண்டிக்கிட்டு சபரிமலைக்குப் போனேன். அடுத்த வருஷம்... நான் நினைச்சபடி பேரனும் பொறந்துட்டான். இந்த உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும் சபரிமலைக்குப் போயிக்கிட்டே இருப்பேன். இனி, ஐயனோட தரிசனம் ஒண்ணே போதும் எனக்கு!'' என நா தழுதழுக்கச் சொல்கிறார் கந்தசாமி ஐயா.

- க.அபிநயா
படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism