கோயம்புத்தூர் ராமநகரில் உள்ள ஸ்ரீஐயப்பன் பூஜா சங்க மண்டபம், கடந்த 20.11.12 அன்று, வழக்கத்தைவிட அதிகமான எண்ணிக்கையில் பெண்களால் நிரம்பி வழிந்தது. ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு உகந்த கார்த்திகை மாத வேளையில், அவன் குடிகொண்டிருக்கும் இடத்தில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து வழங்கும் திருவிளக்கு பூஜை அன்றைக்குத்தான் நடந்தேறியது. சக்தி விகடனின் நூறாவது விளக்கு பூஜை இது!

கோவை, ஈரோடு, சேலம், மேட்டுப் பாளையம் எனப் பல ஊர்களில் இருந்தும் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர், வாசகிகள். அவர்கள் அனைவருக்கும் தேங்காய், பூ, பழம், குங்குமம், மஞ்சள், வெற்றிலை, பாக்கு, எண்ணெய் ஆகியவை அடங்கிய சக்தி விகடன் பெயரிடப்பட்ட பை வழங்கப்பட்டது. பிறகு, வேத கோஷம் முழங்கியதும் திருவிளக்கு பூஜை துவங்கியது.

'பலமுறை கலந்துக்க நினைச்சும், தட்டிப்போயிகிட்டே இருந்துச்சு. சக்திவிகடனோட நூறாவது விளக்கு பூஜைல கலந்துக்கணும்னு கடவுள் எழுதிட்டார்னு நினைக்கிறேன். தீய சக்திகள் அழியணும்; எல்லாரும் நல்லாருக்கணும். இதான் என் பிரார்த்தனை!'' என்று நெக்குருகிச் சொன்னார் வாசகி கார்த்திகா.

'இது, நான் கலந்துக்கற ஆறாவது விளக்கு பூஜை. என்னோட பிறந்த வீடு - புகுந்த வீடு ரெண்டுமே செழிப்பா இருக்கணும்; எல்லாருமே சந்தோஷமா இருக்கணும்'' என்று குதூகலத்துடன் தெரிவித்தார் ரம்யா பாலாஜி.

'சக்திவிகடன் நூறாவது விளக்குபூஜைல கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சது, பெரும் புண்ணியம். என் மருமகளுக்கு ஆஸ்திரேலியா போறதுக்கு விசா கிடைக்காம தள்ளிப் போயிக்கிட்டே இருக்கு. சீக்கிரமே விசா கிடைக்கணுங்கறதுதான் என் பிரார்த்தனை!'' என்றார் வாசகி விஜயலட்சுமி விஜயகுமார்.

'இதுவரைக்கும் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கிட்ட விளக்கு பூஜைல, இப்ப நானும் கலந்துக்கிட்டிருக்கேங்கறதை நினைக்கும்போதே சிலிர்ப்பா இருக்கு. சக்திவிகடனோட தொண்டு, மேன்மேலும் வளரணும்.'' என்றார் வாசகி மஞ்சுளா சுரேஷ்.

'கணவரோட தொழில் ஓஹோன்னு வளரணும்'' என்று வாசகி ஆனந்தி, 'நானும் என் சம்பந்தியுமா பூஜைல கலந்துக்கிட்டதே மனசுக்கு நிறைவா இருந்துச்சு. வியாபாரம் சிறந்து விளங்கணும். அதான் எங்க பிரார்த்தனை'' என்று வாசகி விஜயலட்சுமி, 'பாரம்பரியம் மிக்க விகடன் நிறுவனம் நடத்தற நூறாவது திருவிளக்கு பூஜைல கலந்துக்கிட்ட உடனேயே, மனசுல இருந்த அத்தனை துக்கங்களும் பறந்துட்டது மாதிரி உள்ளுணர்வு சொல்லுது'' என்று வாசகி ராதிகா ஆகியோர் தெரிவித்தனர்.

'ஜோதி மயமான இறைவா, தீபங்கள் அணிவகுக்கும் இந்நாளில், நூறு, ஆயிரமாக, லட்சமாக, கோடியாக... சுடர்விட்டு, இருள் அகல சக்தி கொடு!'' என்று கோவை வாசகி ஷர்மிளா மகேந்திரன் நூறாவது திருவிளக்கு பூஜையையட்டி, சக்தி விகடனுக்கு வாழ்த்துமடல் தந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த மகிழ்ச்சியும் நிறைவும் வாசகர்கள் எல்லோருக்குள்ளும் பரவட்டும்!

- மு.மதன்
படங்கள்: சித்தார்த்