கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது நகர மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம். இந்தப் பள்ளிக்கூடத்துக்கு அருகில் கோயில் கொண்டிருக்கிறார் யானையடி அய்யனார்.

அய்யனார், சாஸ்தா, ஐயப்பன் என்றெல்லாம் மருவி வந்ததை அறிவோம்தானே? இந்தத் தலத்தில், ஸ்ரீபூரணா- ஸ்ரீபுஷ்கலா தேவியுடன் அருள்பாலிக்கிறார் யானையடி அய்யனார். இந்த யானையடி அய்யனாரே, கேரள மாநிலம் அச்சன்கோவிலில் கோயில் கொண்டிருக்கிறாராம்.

வெளியில் இருந்து பார்க்கிறபோது தமிழகக் கோயில் போலவும், உள்ளே நுழைந்ததும் கேரளக் கட்டமைப்புடன் திகழ்கிறது ஆலயம். ஸ்ரீஐயப்ப பக்தர்களின் விருப்பப்படி, இங்கே பதினெட்டுப் படிகளுடன் கூடிய ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமிக்கு சந்நிதி அமைக்கப்பட்டது.

கார்த்திகை மாதப் பிறப்பன்று கும்பகோணம், சுவாமிமலை, ஆடுதுறை, நாச்சியார்கோவில் முதலான பல ஊர்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து, ஸ்ரீஐயப்ப சந்நிதியில் நின்று, மாலை அணிந்து விரதத்தைத் துவக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், இந்தச் சந்நிதியில் இருந்தபடி இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்குச் செல்லும் வழக்கமும் வந்ததாகச் சொல்கின்றனர் பக்தர்கள்.

யானையடி அய்யனார் சந்நிதியின் வலது புறம் ஸ்ரீவிநாயகரும், இடது புறம் ஸ்ரீமுருகப்பெருமானும் காட்சி தருகின்றனர். சப்த கன்னியர், ஸ்ரீசண்டிதேவி, மதுரைவீரன் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உள்ளன. ஆனாலும், இங்கே ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு சபரிமலையில் உள்ளது போலவே பூஜைகள் நடைபெறுகின்றன. 48 நாட்கள் மண்டல பூஜை, மகர ஜோதி நடைதிறப்பு, சிறப்பு பூஜைகள் என விமரிசையாக நடைபெறுகின்றன.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் யானையடி அய்யனார் கோயிலுக்கு வந்து, நெய்விளக்கேற்றி ஸ்ரீஐயப்ப ஸ்வாமியைப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர், பக்தர்கள். அதற்கு நேர்த்திக்கடனாக, அடுத்த வருடமே மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு, சபரிமலை செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

கருணாமூர்த்தியாம் ஸ்ரீஹரிஹரசுதனை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமியை கார்த்திகை மாதத்தில் வந்து கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்தால் போதும்... அவர்கள் வீட்டில் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார் கோயிலின் தியாகராஜ குருக்கள்.

ஸ்ரீஐயனை நாடுங்கள்; அவனருளைப் பெறுங்கள்!
ஓம் ஸ்ரீஸ்வாமியே சரணம் ஐயப்பா!

- மு.சா.கௌதமன்
படங்கள்: செ.சிவபாலன்