Published:Updated:

தர்ம சாஸ்தாவுக்கு 108 நாட்கள் சிறப்பு ஹோமம்!

தர்ம சாஸ்தாவுக்கு 108 நாட்கள் சிறப்பு ஹோமம்!

தர்ம சாஸ்தாவுக்கு 108 நாட்கள் சிறப்பு ஹோமம்!

தர்ம சாஸ்தாவுக்கு 108 நாட்கள் சிறப்பு ஹோமம்!

Published:Updated:
##~##

''காரைக்கால் அம்மையின் கதை தெரியுமா உங்களுக்கு? அவர் சிவ பக்தி நிறைந்தவர். அவரின் கணவர் பரமதத்தன் பெரும் வணிகர். ஒருநாள், அவர்களின் வீட்டுக்குச் சிவனடியார் ஒருவர் வந்தார். அவரை வரவேற்று உபசரித்து, அமுது படைத்த அம்மையார் மாங்கனிகளில் ஒன்றை சிவனடியாருக்குப் படைத்தார். பசியாறிய சிவனடியார் மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றார்.

 அடுத்து, கணவர் வந்தார். அவருக்கும் உணவு படைத்தார் அந்த மாதரசி. மீதமிருந்த மாங்கனியை பரிமாறினாள். அதன் சுவையில் மகிழ்ந்த கணவன், 'இரண்டாவது மாங்கனி ஒன்று இருக்கிறதுதானே... அதையும் கொண்டு வா!’ என்றார். செய்வதறியாது தவித்த காரைக்கால் அம்மையார் சிவனாரைத் தொழுதாள். மறுகணம், அவளின் திருக்கரங்களில் அதிமதுரமான மாங்கனி வந்து விழுந்தது. அது எப்படி? அவள் கரம் நீட்டி வேண்டியதும் மாங்கனி கிடைத்தது எப்படி?'' - அருமையானதொரு மாலைப் பொழுதில், அற்புதமாக உரையாற்றிக் கொண்டிருந்தார், ஸ்ரீதாமோதர தீட்சிதர்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில், ஸ்ரீகாமாட்சி மண்டலி டிரஸ்ட் சார்பில், ஸ்ரீதர்ம சாஸ்தாவுக்கு, தொடர்ந்து 108 நாட்கள் சிறப்பு பூஜை; விசேஷ ஹோமங்கள்; மாலையில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

அதையட்டி இங்கே, சபரிமலை சந்நிதானத்தைப் போலவே மிகப் பிரமாண்ட மாக செட் போட்டிருந்த விதமும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் அழகுத் திருமேனியும் கண்டு சிலிர்த்தனர், பக்தர்கள்.

'

தர்ம சாஸ்தாவுக்கு 108 நாட்கள் சிறப்பு ஹோமம்!

'கார்த்திகை துவங்கியதும் இங்கே வந்தால், தினமும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் அற்புதமான திருமுகத்தை தரிசிக்கலாம். சபரிமலைக்குச் செல்ல இயலாதவர்கள், இங்கு வந்து ஸ்வாமி தரிசனம் பண்ணினால், சபரிகிரிவாசனையே தரிசித்த நிறைவு நிச்சயம் ஏற்படும்'' எனப் பெருமையுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள். இங்கே... ஸ்ரீகாமாட்சி அம்பாளும் சிறப்புறத் தரிசனம் தருகிறாள். பௌர்ணமியில் ஸ்ரீசண்டி ஹோமம் நடைபெறும்போது, ஏராளமான பெண்கள் வந்து ஹோமத்தில் கலந்துகொண்டு அம்பிகையை தரிசித்துச் செல்கின்றனர்.

சரி... ஸ்ரீதாமோதர தீட்சிதர் நிகழ்த்திய 'சிவலீலா’ உபந்யாசத்துக்கு வருவோமா?

''காரைக்கால் அம்மையார் வேண்டியதும் அவருக்கு மாங்கனி கிடைத்தது எப்படி? அவருக்கு இறையருள் உடனடியாக ஸித்திக்க காரணம் என்ன?!

இங்கே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 'தான் மட்டும் சாப்பிட்டால் போதும் என, மாம்பழத்தை மனைவியும் சாப்பிட வேண்டுமே என்று சிறிதும் நினைக்காத கணவர். 'நமக்கு இருக்கிறதோ இல்லையோ, கணவர் சாப்பிடுகிறாரே... அதுவே ஆனந்தம்!’ என்று நினைத்துச் செயல்படும் மனைவி. கணவனோ மனைவியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போனால், வாழ்வில் சந்தோஷமும் இருக்கும்; கடவுளின் அருளுக்கும் பாத்திரமாகலாம்!

தவிர, காரைக்கால் அம்மையார் தனக்காக, தான் சாப்பிடுவதற்காகக் கடவுளைப் பிரார்த்திக்கவில்லை. தன் கணவருக்காக வேண்டினாள். பிறருக்காக வேண்டுகிறபோது, அந்தப் பிரார்த்தனைக்கான சக்தி பன்மடங்காக அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தனக்காக எதையும் எதிர்பார்க்காமல், அடுத்தவருக்காகச் சரணடையும்போது, சந்தோஷமாக அரவணைத்து அருள்புரிவான் இறைவன்!'' என்று தாமோதர தீட்சிதர் சொல்லி முடிக்க... மக்களின் கரவொலி, விண்ணைத் தொட்டது.  

அதையடுத்து, ஸ்ரீதர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இன்னொரு விஷயம்... ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு முன்னே நெய், விபூதி மற்றும் கங்காதீர்த்தம் என மூன்று கலசங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் ஆரத்தி வழிபாடு உண்டு. 108 நாட்கள் சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நிறைவுற்றதும், இந்தக் கலசங்கள் சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமிக்கு அபிஷேகிக்கப்படுமாம்!

- கட்டுரை, படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism