மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##
மி
துனம்- உபய ராசி. சரமும் ஸ்திரமும் சம பங்கில் கலந்தது. ரிஷபம்- ஸ்திர ராசி. அதை ஒட்டிய பகுதி ஸ்திரம்; பிற்பகுதி சரம். கர்க்கடகம் சரமானதால், அதனுடன் இணைந்த பகுதி சரமாயிற்று.

ராசிச் சக்கரத்தில் 60 முதல் 90 வரை இருக்கும் பகுதி மிதுன ராசியில் அடக்கம். ஆண்-பெண் இருவரது இணைப்புக்கு மிதுனம் என்ற பெயர் உண்டு. ஆண்-பெண் இருவரது இணைப்பு இதில் உண்டு. கதை ஏந்திய ஆணும் வீணையை ஏந்திய பெண்ணும் இதில் இருப்பர். வீரம் மிகுந்த புருஷனும், குரல் வளம் பொருந்திய ஸ்திரீயும் மிதுனத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டு. இலக்கணத்துக்கு ஒப்பான வடிவங்களைத் தாங்கி இருப்பார்கள். பெண்மையும் ஆண்மையும் சம அளவில் மிளிரும் ராசி இது.

இணையின் சேர்க்கையில் இன்பம் இருக்கும்; தனிமையில் இருக்காது (ஏகாசீ நரமதெ). சேர்ந்து வாழும் இயல்பும் சுகாதாரத்தில் எச்சரிக்கையோடு செயல்படும் எண்ணமும் இருக்கும். உபய ராசியின் இயல்பானது, ஒரு செயலில் இரண்டு பலன்களை எதிர்பார்க்கும். இருபொருளில் பேசும் திறன்

இருக்கும். ஒரு கல் இரண்டு மாங்காய் என்ற இலக்கு இருக்கும். இவரது செயல்பாடு விருப்பத்துக்கு இணங்க மாறிக் கொண்டிருக்கும். ஒரே தருணத்தில் பல வேளைகளில் கண்ணோட்டம் இருக்கும். வேலை அல்லது தொழில் பல வழிகளில் மாறி மாறி இருப்பது, விருப்பமாக மாறிவிடும். தீராத பிரச்னை களைத் தீர்த்து வைப்பதில் ஆர்வம் இருக்கும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

லக்னத்துக்கு அதாவது மிதுன ராசிக்கு அதிபதி புதன். மிருக சீர்ஷத்தின் பிற்பகுதியும், திருவாதிரையும், புனர்பூசத்தின் முக்கால் பங்கும் இந்த ராசியில் அடங்கும். செவ்வாயும் (மிருகசீரிஷம்), ராகுவும் (திருவாதிரை), குருவும் (புனர்பூசம்) நட்சத்திரம் வாயிலாக ராசிக்கு அனுகூலம் செய்வர். ராசிச் சக்கரத் தின் முதல் கோண ராசி இது. அதாவது சக்கரத்தின் நான்கு மூலைகளில் முதல்

மூலையில் மிதுனம் அமைந்திருக்கும்.இங்கு எந்த கிரகமும் உச்சமாகவோ, நீசமா கவோ இருக்காது. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் முக்கோண ராசிகள். இதில் அடங்கிய நட்சத்திர பாதங்களுக்கு, தசா காலம் ஒன்றாக இருக்கும். சுக்கிரனும் (5-ல்), சனியும் (9-ல்) பல வழிகளில் நன்மையை செய்யக் காத்திருப்பர். உழைப்பில் செல்வம் பெருகி செல்வச்சீமானாக விளங்குவர். செல்வாக்கு மிகுந்த இவர்களில் இன்பத்தை அனுபவிக்கும் திறனும் நிரம்பியிருக்கும். 5-க்கு உடைய சுக்கிரன் விரயத்துக்கும் (12) அதிபதியாதலால், பொருளாதாரம் மேல்-கீழாக தடுமாற்றத்தைச் சந்திக்கும். கும்பத்துக்கு உடைய சனி பாக்கியாதிபதி (9). ஆதலால், உழைப்பில் பொருளாதார வீழ்ச்சியை நிறைவு செய்வர். சுலபமான வழியில் அடைய வேண்டியதை அதிகமான உழைப்பை அளித்துப் பெறுவர். சேமிப்பில் இருக்கும் ஆர்வம், செலவு செய்வதில் சுணக்கமுறும்.

சுக்கிரனும் சனியும் பலம்பொருந்தி இருந்தால், தொழிலில் முன்னேறி சமுதாய அங்கீகாரம் பெறுவர். தரத்திலும் அந்தஸ்திலும் உயர்வு இருந்தாலும் உழைப்பாளியாகக் காட்டிக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். புதக்ஷேத்ரமாக (மிதுனம்) இருப்பதால் விஷயத்தை அலசி ஆராய்வதிலும், வாதப்ரதி வாதங்களிலும் திறமை இருக்கும். புதிய பொருட்களிலும் புதுப் புது தொழில்களிலும் ஈர்ப்பு இருக்கும். எச்சரிக்கையுடன் - தாமரை இலைத் தண்ணீர் போல், பட்டும் படாமலும் பழகும் பாங்கும், பொருளீட்ட பல வழிகளைத் தேர்ந்தெடுக்கும் துணிவும் இருக்கும். புது தொழில் முறையை தோற்றுவிக்கும் திறன் இருக்காது. பலரது கண்டுபிடிப்பில் இணைந்து, தனது லாபத்தைப் பெருக்க முற்படுவது உண்டு. ஆராய்ச்சியில் கலந்து கொண்டாலும் ஆழமாகச் சென்று இலக்கை எட்டிப்பிடிக்கும் திறன் இருக்காது. தன்னைச் சார்ந்தவர்களிடம் வலுவான நட்பு இருக்காது. ஆனாலும் கசப்பை வரவழைக்காமல் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் உண்டு. எதையும் வியாபார நோக்குடன் பார்த்து சுயநலத்தைப் பூர்த்தி செய்ய விரும்பும். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர் எண்ணிக்கை குறைவே.

ராசிநாதன் புதன் தனது வீடான கன்னியில் உச்சம் பெறுவது தனிச் சிறப்பு. மூலத்ரிகோண மும், ஸ்வக்ஷேத்ரமும் இணைந்திருப்பது. வீடு-வாகனம் போன்றவற்றை முழுமை யாக அனுபவிக்கும் யோகம் இருக்கும். புதன், கர்மத்தில் (10-ல் மீனத்தில்) நீசம் பெற்று இருந்தாலும், பூர்வபுண்ய ஸ்தானாதி பதியின் (5- சுக்கிரனின்) உச்ச ராசியாக இருப்பதால், பொருளாதாரத்திலும், தொழிலிலும், கல்வியிலும் அகண்ட இடைவெளி ஏற்படாமல் இருக்கும். 5-ஆம் பாவாதிபதி சுக்கிரனின் (துலா) ராசியில், பாக்யாதிபதி சனி உச்சம் பெற்று இருக்கும் ராசியானபடி யால், 'தொழில் துறையிலும் வேலையிலும் சங்கடத்தை ஏற்படுத்தாது எதிரிடையான மற்ற கிரகங்களின் தாக்கத்தில் தரம் தாழ்ந்தாலும், அடிமட்டத்துக்குப் போகாமல் திரும்பவும் துளிர்விட்டு செழிப்புடன் வளரும். 2-க்கு (கடகம்) உடைய சந்திரன் 12-ல் (வ்ருஷபம்) உச்சம் பெறும் ராசியாக இருப்பதால், சேமிப்பின் இழப்பில் துயரத்தைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கும்.இரண்டு- ஜல ராசி, சந்திரனும் ஜல கிரகம். ஜலம் சஞ்சலமானது. சந்திரனும் தேய்ந்தும் வளர்ந்தும் இருப்பவன். அவன் மனதுக்குக்காரகன். மனம் எப்போதும் சஞ்சலம்தான். ராசி- சர ராசி. இப்படி சஞ்சலத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் இருப்பதால், தொழில் துறையிலும் பொருளாதாரத்திலும் நெருடலைச் சந்தித்த பிறகே வளர்ச்சியை எட்ட இயலும். எந்த விஷயத்திலும் தீர்மானம் எடுப்பதற்குமுன், சிந்தனை செயல்படும் போது... விபரீத விளைவுகளின் சிந்தனை முன்னால் வந்து முடிவு எடுப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தும்.

பூர்வ புண்ய (5) ஸ்தானாதிபதியான சுக்கிரனின் ராசியாக '12-வது’ (வ்ருஷபம்) இருப்பதால், இடையூறு அகன்று மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும். 8-க்கும் 9-க்கும் உடைய சனி உச்சம் பெற்றிருந்தால், வாழ்வின் தரம் மேம்பட்டு, அமைதிப் பூங்காவாக மாறும். சனி 8-ல் ஆயுளை நீட்டிப்பார்; அழிக்கமாட்டார் (விபரீதம்சனே: ஸ்ம்ருதம்). 8-ஆம் பாவத்தின் அதிபதி சனி, பாவாதிபதி பாவத்தில் இருந்தால், பாவ புஷ்டி என்று சொல்லும் ஜோதிடம். 8-ல் இருப்பது கெடுதல் இல்லை. 9-ல் செழிப்புண்டு.

மிதுன ராசிக்கு உச்சம், ஸ்வக்ஷேத்ரம்-  இவற்றில் சனியின் பங்கு பெருமையளிக்கும். ஆன்மகாரகன் (சூரியன்) மூன்றுக்கு அதிபதியாக இருந்தாலும் '8-ன்’ 8-ல் இருப்பதால் (அதாவது மிதுனத்துக்கு மகரம் எட்டு. மகரத்துக்கு சிம்மம் 8), அது ஆயுஸ்தானம். ஆதலால் எதிரிடையான பலனை அளிக்க மாட்டான் (அஷ்டமஹி ஆயுஷ: ஸ்தானம். அஷ்டமாத் அஷ்ட மம்சயத்). சூரியன் துலாத்தில் நீசம் பெற்று இருந்தால், தொழிலிலும் பொருளாதாரத்திலும் செல்வாக்கு குறைந்து மன அமைதியை இழக்க நேரிடும். நீசனாக இருந்து உச்சத்தைப் (மேஷத்தை) பார்ப்பதால் பொருளாதார வீழ்ச்சியில் மனம் தளர்ந்த நிலையை தோற்று விப்பான். உச்சத்தை நோக்கி நகரும் சூரியன் தனது உச்ச வீட்டைப் பார்ப்பதாலும், பலம் குன்றியவனாக இருந்தாலும் அடித்தளத்தை அசைக்காமல் காப்பாற்றுவான். உச்சனாக இருந்து நீசத்தைப் பார்ப்பது விபரீத விளைவுகளுக்கு வழிகோலும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

நீசனாக இருந்து உச்சத்தைப் பார்ப்பது,  உச்ச வீட்டின் பலனை இழக்க வழி வகுக்காது. நீச வீட்டின் தன்மையை அழித்தா லும், உச்ச வீட்டின் பெருமையில் இழந்ததைப் பெற்று மகிழ வழி வகுக்கும்.

மிதுன நவாம்சக தசைகள் ஆரம்பத்தில் செவ்வாய், ராகு, குருவாக இருக்கும். இது துலா, கும்ப நவாம்சகங்களுக்கும் பொருந்தும். முதல் இரண்டு நவாம்சகங்களில் செவ்வாயின் தசை ஆரம்பம். அடுத்த நாலில் ராகுவும்; அடுத்த மூன்றில் குருவும் ஆரம்பமாகும். ஆயுளில் மூன்றில் ஒரு பங்கில்... முதல் பங்கில், இந்த மூவரும் தங்களது தசைகள் வாயிலாக, பூர்வபுண்யத்தில் செயல்படத் தயாராக இருக்கும் புண்ணியம் அல்லது பாபத்தை நடைமுறைப்படுத்துவர். 30, 60, அறுபதுக்கு மேல் மீதமிருக்கும் ஆயுள் என்று வாழ்நாளை மூன்றாகப் பிரித்துக் கூறுவர் ஆயுர்வேத மருத்துவர் (பால்யம் வய: யௌவனம் வய: வார்த்தகம் வய:). 6-க்கும் 11-க்கும் உடைய செவ்வாயின் தசை, அனுபவிக்க வேண்டிய துயரத்தை அறிமுகம் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால், உபசய ஸ்தானத்தில் இருந்து பலம் பெற்றால், அவர் துயரத்துக்கு பதிலாக நன்மையை வெளிப்படுத்த முற்படுவார். கிரகம் இருக்கும் இடத்தை வைத்து அவர் தரத்தை அளந்து, நல்லது- கெட்டதை கணித்து, கர்ம வினையின் உருவத்தை உணரலாம். ஷோடச பலங்களை ஆராய்ந்து பலனை இறுதியாக்க வேண்டும். நிஸர்கபாபியான செவ்வாய், மற்ற கிரகங்களின் தாக்கத்தில் பலனை மாற்றி அமைக்க இயலும். ஒருவருக்கு செவ்வாய் பாலாரிஷ்டத்தை அளிக்கும். இன்னொருவருக்கு தாய்-தந்தையை இழக்கவைக்கும். வேறொருவரை அநாதையாக மாற்றும். வேறு சிலரை தாலாட்டில் திளைக்கச் செய்து, மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும். வேறு சிலருக்கு, ஆரம்பத்தில் மூன்றரை வருடத்தில், தாய்-தந்தையை பொருளாதாரத் தில் உயர்த்தி, பெரிய மனுஷனாக்கி விளங்க வைக்கும்.

ராகுவும் நிஸர்கபாபி. ஆனால் அவருக்கு வீடு இல்லை. சொந்த வீடு இல்லாதவருக்கு புகுந்த வீடெல்லாம் அவரது வீடாகி விடும். அவருக்கு தனியாக பலன் அளிக்கும் தகுதியும் இல்லை. அவர் இருக்கும் வீட்டுக்கு உடையவரின் தரத்தை ஓட்டி பலனை வெளியிடுவார்.ஆகையால், நல்லதும் கெட்டதும் அவர் அமர்ந்த ராசிநாதனைப் பொறுத்தது. 18 வருஷங்கள் முழுமையாக இருக்கும். நீண்ட காலம் கெட்ட ராகுவின் தசை அவனது பால்யத்தை அலைக் கழிக்கும். அமர்ந்த ராசிநாதனின் தன்மையில் பெருமை அளிக்கவும் செய்வார்.

இருபத்து ஒன்றரை வயதுக்குப் பிறகு (அதாவது மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் சார்ந்தவருக்கு), குரு தசை ஆரம்பமாகும். பால்யத்தில் எட்டரை வருடங்கள் குருவின் பங்கு இருக்கும். 7-க்கும், 10-க்கும் உடைய குரு பலவானாக இருந்தால், இளமையின் ஆரம்பம் இன்பமயமாகத் திகழும். 7-ஆம் பாவம் களத்திரத்தையும், மாரகத்தையும் சொல்லும். அவன் தகுதி, களத்திர வரவை செழிப்பாக்குமா அல்பாயுசில் மடியவைக்குமா என்பது... அவர் அமர்ந்த ராசிநாதன், லக்னாதிபதியின் தொடர்பு மற்றும் சோடஷ பலத்தை ஆராயும்போது தெரிய வரும்.

பொதுவாக ஆரம்ப கால பால்யம் இவர்கள் மூன்று பேரின் செயல்பாட்டில் நிர்ணயிக்கப் படும். இளமையும், முதுமையும் செழிப்பாக இருக்க இடமுண்டு. உண்மையில், பால்ய காலம் விளையாட்டில் கடந்து போவதால் துயரம் அல்லது மகிழ்ச்சியின் தாக்கம் பெரிய மாறுதலை ஏற்படுத்தாது. இளமையில் புத்தி பக்குவத்தை அடைந்து, சிந்தனை வளம் பெருக வாய்ப்பு இருப்பதாலும், முதுமையில் அனுபவமும் சேர்ந்துகொள்வதால், முதுமை பேரானந்தத்தில் முழுக வாய்ப்பு உண்டு.

சனி, புதன், கேது, சுக்கிரன் தசைகள் படிப்படியாக செயல்படும். பாக்யாதிபதி சனி இளமையின் பிற்பகுதியையும் முதுமையின் ஆரம்பத்தையும் தொடுவதால், மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. பிறகு முதுமையை முழுமையாக வியாபிக் கும் புதன் லக்னாதிபதியாக இருப்பதால், முதுமை துயர் தொடாமல் சென்று விடும். தசைகளின் புக்தியிலும் அந்தரத்தி லும் 9 கிரகங்களின் பங்கு சிறு சிறு மாற்றத்துக்குக் காரணமாக அமைந்தாலும், ஒட்டுமொத்தமான மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் இருக்கும். நல்லது அல்லது கெட்டது வாழ்க்கை முழுதும் தொடர்ந்து பலனளிக்காது. மாறி மாறித்தான் பலன் இருக்கும் என்பதை நிர்ணயம் செய்வதில்...  தசைகளிலும், புக்தியி லும், அந்தரத்திலும் 9 கிரகங்களுடைய பங்கும் பலன் அளிப்பதில் சேர்வதால், எவரும் நீண்ட துயரத்தையும் நீண்ட மகிழ்ச்சியையும் அனுபவிக்கமாட்டார்கள் என்று காளிதாசன் கூறுவான் (கஸ்யை காந்தம் ஸுகமுபதைம் துக்க மேகாந்ததோவா).

மிதுனம் மனித ராசி; நாகரீக ராசி முதிர்ச்சி அடைந்த ஆண் - பெண்ணை மிதுன அடையாளம் சுட்டிக்காட்டும். மனம் சுக - துக்கங்களை உணரும் தன்மையை அடைந்து, இணைப்பில் சுகத்தை எட்டும் சிந்தனை அவர்களில் தென்படும். புதனை வழிபடுவதுடன், சுக்கிரனையும் சனியையும் வழிபடலாம். முக்கோண ராசிகள் பிறந்த லக்னத்துக்கு ஒப்பாகும். ஆகையால் அடிப்படைத் தகுதிகளை இறுதி செய்யும் இந்த மூவரையும் வழிபடுவது சிறப்பு. பும் புதாயநம: சும் சுக்ராயநம: சம் சனைச்சராயநம: என்ற மந்திரத்தை வழிபாட்டில் பயன்படுத்தலாம். தலைவிதியை அழிக்க முடியாது என்ற சிந்தனை இருந்தாலும், துன்பத்தைச் சந்திக்கும் வேளையில், அவர்களது நினைவு எளிதாக துன்பத்தைத் தாண்ட உதவும். புதன், சுக்கிரன், சனி ஆகியோரின் மூலமந்திரத்தையும் பயன்படுத்தலாம். அன்றாட வாழ்வில் சந்திக்கும் துயரத்தை, எளிதில் தாண்ட இந்த வழிபாடு வரப்பிரசாதம் ஆகும்.

- வழிபடுவோம்