சபரிமலை நாயகனே சரணம்!

##~## |
சபரிமலையில் வீற்றிருப்பது போலவே அழகிய திருமேனியில் காட்சி தரும் ஸ்ரீஐயப்பனைத் தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். கார்த்திகை மாதம் துவங்கிவிட்டால், தொடர்ந்து 48 நாட்களும் இங்கே தினமும் விசேஷ பூஜைகளும் பஜனைகளும் சிறப்புற நடைபெறுகின்றன.
காலை 5 மணிக்கு நடை திறக்கும்போதும், இரவு 10 மணிக்கு நடை சார்த்துகிற போதும் ஐயன் ஐயப்ப ஸ்வாமியைத் தரிசிக்க வருகிற பக்தர்கள் ஏராளம். அதேபோல் இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க, மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
'கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில், கேரள முறைப்படி வாத்தியங்கள் முழங்க, புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் ஸ்வாமி திருவீதியுலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்’ எனப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.
இந்த ஆலயத்துக்குத் தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் வந்து, நீராஞ்சன தீபமேற்றி வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண யோகம் கூடி வரும்; குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்; தொழிலில் முன்னேற்றம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஜனவரி 1-ஆம் தேதி, ஆங்கிலப் புத்தாண்டு அன்று, ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு சொர்ண அலங்காரம் செய்வது வழக்கம். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்கின்றனர் பக்தர்கள்.
- ச.பா.முத்துக்குமார்
படங்கள்: எஸ்.கேசவசுதன்