Published:Updated:

’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே!’

’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே!’

’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே!’

’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே!’

Published:Updated:
’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே!’
’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே!’
’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அப்பா சோமுதான் முதன்முதலா ஐயப்பன் கோயிலுக்குப் போயிட்டு வந்தார். 'அற்புதமான ஐயப்ப மகிமையை பாட்டா எழுதித் தரேன். நீ அழகாப் பாடிடு’ன்னு சொல்லி வீரமணி சித்தப்பாகிட்டச் சொன்னார். அப்படி ஆரம்பிச்சதுதான் 'பள்ளிக்கட்டுச் சபரிமலைக்கு...’ பாட்டு. இன்னிக்கி வரைக்கும் அந்தப் பாட்டுக்கு இருக்கிற மவுசே தனி!'' என்று அப்பாவையும் சித்தப்பாவையும் பெருமையுடன் நினைவுகூர்கிறார் வீரமணி ராஜூ.

''அப்பல்லாம் சபரிமலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் ரொம்ப ரொம்பக் குறைவுதான். கொலம்பியா ஸ்டூடியோல வேலை பார்த்துக்கிட்டிருந்த அப்பாவும் சித்தப்பாவும் பாடின இந்தப் பாட்டுதான் அநேகமா ஐயப்ப ஸ்வாமிக்காக தமிழ்ல பாடின முதல்பாட்டுன்னு நினைக்கிறேன். இதுக்கு அடுத்தாப்ல, மெள்ள மெள்ள தமிழ்நாட்டுலேருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் அதிகரிச்சுக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு, பாடலோட துள்ளலான வரிகளும், வீரமணி சித்தப்பாவோவோட கணீர்க்குரலும்தான் மிக முக்கியமான காரணங்கள்'' என்கிறார் வீரமணி ராஜூ.

''இந்தப் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் நான். மாலை போட்டு விரதம் இருக்கறதுல ஆரம்பிச்சு, மலைக்குப் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வர்றது வரைக்குமான இந்தப் பாட்டை கண் மூடிக் கேட்டாப் போதும்... கிட்டத்தட்ட சபரிமலைக்கே போய், ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமியைத் தரிசனம் பண்ணிட்டு வந்த மாதிரி ஒரு நிறைவு கிடைச்சிடும். இப்பக்கூட மேடைல, 'பள்ளிக்கட்டு பாடுங்க சாமி’ன்னு, இந்தப் பாட்டைப் பாடச் சொல்லித்தான் நிறைய பக்தர்கள் கேக்கறாங்க!'' எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார் வீரமணி ராஜு.

##~##
''அதுக்குப் பிறகு எத்தனையோ பாடல்கள்; எல்லாமே ஐயப்ப ஸ்வாமியின் பெருமையைச் சொல்ற பாடல்கள். எங்கே கச்சேரி நடந்தாலும் என்னையும் அழைச்சிட்டுப் போயிடுவாங்க. பாட்டு, ஐயப்ப ஸ்வாமி கதை, கைத்தட்டல்னு கேட்டே வளர்ந்தேன். அப்புறம், வீட்லயும் பள்ளிக்கூடத்துலயும் அந்தப் பாட்டையே பாடிக்கிட்டிருப்பேன். 90-வது வருஷம்... பதினைஞ்சு கச்சேரிகள் புக்காகியிருந்த வேளையில, வீரமணி ஐயா இறந்துட்டாங்க. அப்ப புக் பண்ணியிருந்த அன்பர்கள் எல்லாம், 'இனிமே நீங்கதான் எங்களுக்கு வீரமணி ஐயா. அந்தக் கச்சேரி சொன்ன தேதில, சொன்னபடி நடக்கட்டும்னு என்னைக் கூட்டிட்டுப் போய் பாட வைச்சாங்க. அன்னிலேருந்து, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது மாதிரி நடந்துக்கிட்டிருக்கு வாழ்க்கை. நான் வெறும் கருவி; அவ்வளவுதான்! என்னை வழிநடத்துறதும் வாழ வைக்கறதும் அந்த சபரிகிரிவாசன்தான்'' என்று நெக்குருகிப் பேசுகிறார் வீரமணி ராஜூ.

''வருஷம் தவறாம சபரிமலைக்குப் போக ஆரம்பிச்சது அதன் பிறகுதான். ஆனா, அதுக்கு ஒரு காரணம் இருக்கு. வீரமணி ஐயா இருக்கும்போது, ஒருமுறை கச்சேரி நடந்துக் கிட்டிருந்துச்சு. உற்சாகமும் துள்ளலுமா அவர் பாடினதைக் கேட்டாலே, ஆடாதவங்களும் ஆட ஆரம்பிச்சிடுவாங்க. அப்ப ஒருத்தருக்கு அருள் வந்து ஆட ஆரம்பிச்சவர், விறுவிறுன்னு மேடைக்கு வந்து, வீரமணி ஐயாகிட்ட போனார். யாரும் எதிர்பார்க்காத நேரத்துல பொளேர்னு ஐயாவை அறைஞ்சார். நான் உட்பட எல்லாரும் மிரண்டே போயிட்டோம். 'இங்கே உக்கார்ந்து பாட்டுப் பாடினா சரியாப் போச்சா? என்னைப் பாக்க மலைக்கு வாங்கடா!’னு சொல்லிட்டு அவர் மயங்கி விழுந்தார். 'இது ஐயப்ப ஸ்வாமியின் கட்டளை’னு சொல்லிட்டு வீரமணி ஐயா எங்களை அந்த வருஷமே சபரிமலைக்கு மாலை போட்டு, விரதம் இருக்க வைச்சு, கூட்டிட்டுப் போனார். அன்னிலேருந்து வருஷம் தவறாம மலைக்குப் போயிட்டிருக்கேன். கடைசி மூச்சு வரைக்கும் போவேன்!'' என்று கண்ணீர் மல்கச் சொன்னவர், தொடர்ந்தார்...  

''ஒருமுறை, மலை முழுக்க மக்கள் வெள்ளம். பயங்கரக் கூட்டம். எல்லாரும் ஊர்ந்து ஊர்ந்துதான் நகரணுங்கற நிலைமை. 'நாம வேற எதாவது வழியில போயிடுவோம், வாங்க! நமக்குத் தெரியாத பாதையா?’னு என் கூட வந்த மூணு சாமிகளையும் கூட்டிக்கிட்டு, ஒத்தையடிப் பாதையில அப்படியே போக ஆரம்பிச்சோம். கொஞ்ச தூரம் கடந்ததும், ஒத்தையடிப் பாதை முடிஞ்சு, அடர்ந்த காடு! பாதையும் தெரியலை; அங்கே யாரும் பயணம் பண்ணவும் இல்லை. திரும்பிப் போயிடலாம்னா... இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. பாதை புரிபடலை. 'எனக்குத் தெரியாத வழியான்னு ஆணவமா, கர்வமா, அலட்டலா நினைச்சது தப்புதான் ஐயப்பா. எங்களைக் காப்பாத்துப்பா!’னு மானசிகமா வேண்டிக்கிட்டு, அப்படியே விழுந்து நமஸ்கரிச்சு, கோஷம் போட்டோம்.

’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே!’

அடுத்த ரெண்டாவது நிமிஷம்... அங்கே ஒரு கழுதை வந்துச்சு. எங்களை உத்துப் பாத்துட்டு, நாங்க வந்த திசைல நடக்க ஆரம்பிச்சுது. அப்பப்ப... திரும்பித் திரும்பி எங்களைப் பாத்துக்கிட்டே போச்சு. அது பின்னாடியே போனோம். கடைசியில, எங்கே வழி மாறினோமோ அதே இடத்துக்கு வந்து நின்னோம். அங்கே இருந்த கடைக்காரர், 'எங்கே போனீங்க சாமீ? ஏதோ பக்கத்துல மரத்தடில உக்கார்ந்திருப்பீங்கன்னு பார்த்தா உள்ளுக்குள்ளே பயங்கரமான காட்டுக்குள்ளே போயிட்டீங்களோ? அங்கே மிருகங்கள் நடமாட்டம் அதிகமாச்சே... எப்படி வழி கண்டு பிடிச்சுத் திரும்பி வந்தீங்க?’ன்னு கேட்டார். கழுதையைப் பின் தொடர்ந்து வந்த விஷயத்தைச் சொல்லிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தா... அந்தக் கழுதையைக் காணோம்!

'இங்கே, கழுதையெல்லாம் கிடையாதுங்க. தவிர, மிருக நடமாட்டம் உள்ள பகுதிப் பக்கம், கழுதை எட்டிக் கூடப் பாக்காது. வந்தது... ஐயப்ப சாமிதான்!’ன்னு சொன்னதும் சிலிர்த்துப் போனோம். இது மாதிரி அறியாமைல செய்ற ஒவ்வொரு நிகழ்வின்போதும் ஏதோவொரு படிப்பினையை, எவர் ரூபமாகவோ வந்து தந்துருக்கான் ஸ்ரீஐயப்பன்.

அவ்வளவு ஏன்... 90-ஆம் வருஷம், வீடு வாங்க ரொம்பவே அல்லாடிட்டிருந்தேன். அந்த முறை சபரிமலைக்குப் போகும்போது, இருமுடியில ஒரு ரூபாயைக் கட்டிக்கிட்டேன். 'நீதாம்பா எனக்கொரு வீடு தரணும்’னு மனசார வேண்டிக்கிட்டேன். சபரிமலைல முடிஞ்சு வைச்ச காசை, உண்டியல்ல போட்டுட்டு, வீட்டுக்குத் திரும்பின அன்னிக்கி, ஏழெட்டு மாசமா இழுத்தடிச்சிட்டிருந்த பேங்க் லோன் கிடைச்சு, அதுக்கான செக் தொகை கைக்கு வந்துது. நாம என்ன கேட்டாலும் தர்ற குருசாமியும் அவனே; தகப்பன் சாமியும் அவன்தான்!'' என்று நெகிழ்ந்து சொல்லியபடி, நெஞ்சில் கைவைத்து, சரண கோஷம் முழங்கும்போது, வீரமணிராஜூவின் முகத்தில் ஒளிர்ந்தது பரவசமும் நிறைவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism