. சி.வபெருமானின் தாண்டவ சபைகள் ஐந்து. அவற்றுள், பதஞ்சலி மற்றும் புலிக்கால் முனிவர்களுக்காக தென்னாடுடைய சிவனார், முனிதாண்டவம் ஆடிய 4-வது அம்பலமே திருநெல்வேலி- தாமிர சபை. இதன் மேற்கூரை முழுக்க தாமிரத் தகடுகளால் வேயப்பட்டிருக்க... தாமிரத்தை சிவமாகவும், சபையை சக்தியாகவும் சிறப்பித்துக் கூறுவார்கள் பெரியோர்கள்!.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது அருள்மிகு நெல்லையப்பர் ஆலயம். இறையனாருக்கு அமுது படைக்கத் தேவையான நெல்மணிகளை காயவைத்திருந்தார் அடியவர் ஒருவர். அப்போது பெய்த பெருமழையில் நெல் நனையாதவாறு, இறைவன் வேலி அமைத்துக் காத்ததால், இவ்வூருக்கு திருநெல்வேலி என்று திருப்பெயர்.

ஆலயத்தின் உள் பிராகாரத்தில்- நெல்லையப்பர் சந்நிதிக்குப் பின்புறம், சிவகாமியம்மையுடன் சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீசந்தன சபாபதி. பனித்த சடையுடன் ஆனந்தக் கோலத்தில் இவர் அருள்வது, இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு. வெளிப் பிராகாரத்திலும் பெரியதொரு நடராஜர் காட்சி தருகிறார். மார்கழியில் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. திருவாதிரைத் திருநாளன்று காலையில் தீர்த்தவாரியும், பசு தீபாராதனையும் (கோ பூஜையும்) நடைபெறும். பிறகு, அரியணையில் அருளும் ஸ்ரீநெல்லையப்பர்- ஸ்ரீகாந்திமதி தலைமையில் அறுபத்துமூவரும், சைவ நால்வரும், அகத்தியரும் எழுந்தருள... தாமிர சபையில் நிகழும் ஸ்ரீநடராஜரின் தாண்டவ வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த தாண்டவத்தை ஸ்ரீசிவகாமியம்மை மறைந்திருந்து பார்க்கும் வைபவம், இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம். தொடர்ந்து, ஸ்ரீசந்தன சபாபதியின் திருத்தேர் வீதியுலாவும் நிகழும்.

அன்று இரவு, ஸ்வாமிக்கு நடைபெறும் 21 வகை சிறப்பு அபிஷேகங்களும், வில்வார்ச்சனையும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத நிகழ்வு. மேலும், திருவாதிரை தினத்தில் பச்சை வஸ்திரம், பச்சை எலுமிச்சைக் காய் மற்றும் பச்சை இலை மாலை சாற்றி, களி நைவேத்தியம் செய்து ஸ்ரீநடராஜரை வழிபட, நம் மனக்கசப்புகள் யாவும் நீங்கும்; வாழ்வு வளம் பெறும். அன்று நெய் தீபம் ஏற்றிவைத்து ஸ்வாமியை வழிபட, வியாபாரம் விருத்தியாகும்; மாணவர்கள் கல்வி-ஞானத்தில் சிறப்படைவர் என்பது ஐதீகம்.

தைப்பூச நாளில், ஸ்வாமி கௌரிதாண்டவம் ஆடி, சிவகாமி அம்மைக்கு அருளும் சௌந்தர்ய சபையும் இங்கே உண்டு!

- ச.காளிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்