Published:Updated:

ஞானம் அருள்வார் ஸ்ரீதத்தாத்ரேயர்!

ஞானம் அருள்வார் ஸ்ரீதத்தாத்ரேயர்!

ஞானம் அருள்வார் ஸ்ரீதத்தாத்ரேயர்!

ஞானம் அருள்வார் ஸ்ரீதத்தாத்ரேயர்!

Published:Updated:
ஞானம் அருள்வார் ஸ்ரீதத்தாத்ரேயர்!
ஞானம் அருள்வார் ஸ்ரீதத்தாத்ரேயர்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

னுசூயாதேவி- புராண காலத்துப் பதிவிரதை பெண்மணிகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருப்பவள். மும்மூர்த்திகளின் பத்தினி தேவியர்களாலும் வேகவைக்க முடியாத இரும்புக் கடலையை வேகவைத்து, தனது பத்தினித் தன்மையின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய மாதரசி!

இவளின் பதிவிரதா சக்தியை சோதிக்க எண்ணிய முப்பெரும்தேவியர், தங்களின் பதிமார்களை அனுசூயாவின் ஆஸ்ரமத்துக்கு அனுப்பி வைத்தார்கள். பி¬க்ஷக்கு ஏகி வந்த அதிதிகளைப் போல் தங்களை உருமாற்றம் செய்துகொண்ட மும்மூர்த்திகளும் அங்கே வந்து சேர்ந்தார்கள். தங்களுக்கு பி¬க்ஷ இடவந்த அனுசூயாவிடம், ''குழந்தை இல்லாத வீட்டில் பி¬க்ஷ ஏற்கமாட்டோம். குழந்தை இருந்தால் மட்டுமே ஏற்போம்'' என்றனர் மும்மூர்த்தியர். குழந்தை இல்லாத அனுசூயாதேவி அவர்களையே குழந்தைகளாக்கினாள்.

ஆமாம்... நீராடும் பொருட்டு மந்தாகினி நதிக்குச் சென்றிருந்த தன்னுடைய கணவரான அத்ரி மகரிஷியை மனத்தில் இருத்தி, வணங்கினாள். அவருக்குப் பாதசேவை செய்தபோது உபயோகித்த சரணாம்ருதத்தை (பாதம் அலம்பிய நீர்) சிறிதளவு எடுத்து மும்மூர்த்திகளின் மேல் தெளித்தாள்.

அடுத்த கணம், மும்மூர்த்திகளும் மூன்று பச்சிளம் சிசுக்களாக மாறினார்கள். மூவரையும் தன் புத்திரர்களாகவே பாவித்து, தாய்ப்பாலூட்டி, பி¬க்ஷ தர்மத்தையும் காப்பாற்றினாள் அனுசூயா.

இதற்கிடையில், தங்களது பதிகளைக் காணாது தவித்த முப்பெரும் தேவியர், நாரத முனிவர் வாயிலாக, நடந்த விவரங்களை அறிந்து, அதிர்ந்தனர். அக்கணமே அனுசூயாவின் குடிலுக்கு வந்தனர். பி¬க்ஷ கேட்டு வந்த தங்களின் பதிகளை மீண்டும் சுய ரூபத்துக்கு மாற்றி, தங்களுடன் அனுப்பிவைக்குமாறு பதி பி¬க்ஷ வேண்டி நின்றார்கள்.

அந்த நேரத்தில், குடிலுக்குத் திரும்பிய அத்ரி மகரிஷியின் பாதங்களில், மூன்று சிசுக்களையும் கிடத்தினாள் அனுசூயா. நடந்தது என்ன என்பதை அவள் சொல்வதற்கு முன்பாகவே தனது ஞான திருஷ்டியில் அறிந்துகொண்ட மகரிஷி, அந்த சிசுக்களின் மீது கமண்டல நீரைத் தெளித்தார். அக்கணமே, அவர்கள் மும்மூர்த்திகளாக முன்பிருந்த நிலைக்குத் திரும்பினர்.

தேவியர் சமேத மும்மூர்த்திகள், அனுசூயாவின் பதிவிரதா தன்மையையும், அத்ரி மகரிஷியின் தவ வலிமையையும் பாராட்டி அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, 'மும்மூர்த்திகளாகிய நீங்கள் மூவரும் எங்களுக்குப் புத்திரர்களாகப் பிறக்கவேண்டும்’ என்று வரம் கேட்டார்கள் முனிவர் தம்பதியர். மும்மூர்த்திகளும் அப்படியே அருளி மறைந்தனர்.

ஞானம் அருள்வார் ஸ்ரீதத்தாத்ரேயர்!

அந்த வரத்தின்படி மார்கழி மாதம், பௌர்ணமி தினத்தன்று, மிருகசீரிட நட்சத்திரத்தில் ஸ்ரீதத்தாத்ரேயர், மும்மூர்த்திகளின் அம்சமாக அவதாரம் செய்தார். ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் மூன்று திருவதனங்களுடனும், ஆறு திருக்கரங்களுடனும் அவர் தோன்றினார். நிர்குண உபாசகர்களுக்கு எல்லாம் சத்குருவாக விளங்கும் ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதாரம் நிகழ்ந்த அற்புதத் திருத்தலம்... சித்ரகூடம்! இங்கே... மந்தாகினி நதிக்கரையோரம் அமைந்துள்ளது சதி அனுசூயா கோயில். இதை, ஸ்ரீபரமஹம்ஸ ஆஷ்ரம் என்றும் அழைக்கிறார்கள்.

பூமித்தாயை பசுவாகவும், நான்கு வேதங்களை நான்கு நாய்களாகவும் தன்னுடன் கொண்டவர் ஸ்ரீதத்தாத்ரேயர். அவருடைய திருக்கரங்கள் ஆறும், நமக்குப் பல போதனைகளைத் தெரியப்படுத்துகின்றன.

அவரது திருக்கரத்தில் உள்ள திரிசூலம்... வாழ்க்கையானது சத்வ, ரஜோ, தமோ குணங்கள் கொண்டதையும், சுதர்சன சக்கரம்... இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் காலச் சக்கரத்தையும், சங்கு... 'ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் மேன்மையையும், தமருகம்... உறங்கும் ஆத்மாக்களை ஆன்மிக வழியில் செயல்படுத்துவதற்காக ஒலிக்கும் கருவியையும் உணர்த்துகிறது.

இதேபோல், ஜப மாலையானது, வீடு பேற்றை அடைய பகவான் நாமத்தை ஸ்மரணை செய்யவேண்டும் என்பதையும், கமண்டலமானது நாம் பருகுவதற்கு உண்டான புனிதமான அறிவுத்தேன் நிறைந்த பெட்டகம் என்பதையும் உணர்த்துகிறது.

ஸ்ரீதத்தாத்ரேயரை பூஜித்து வந்தால், தீயசக்தி களின் தொல்லைகள் விலகும்; மலட்டுத்தன்மை நீங்கி, புத்திர பாக்கியம் உண்டாகும்; மனத்தை ஞானமார்க்கத்தில் திருப்புவதற்கு தத்தாத்ரேயரை வழிபடுவது சிறந்தது.

இவரின் அவதார க்ஷேத்திரமான சித்ரகூடத் துக்குச் சென்றால்... அத்ரி மகரிஷி, அனுசூயா தேவிக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவதைக் காணமுடிகிறது.

14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்ட ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, பல காலம் சித்ரகூடத்தில்தான் கழித்தார். அப்போது பதிவிரதா தர்மத்தை ஸ்ரீசீதாதேவிக்கு அனுசூயாதேவி போதித்தாள்.

இவ்வளவு சிறப்புமிக்க சித்ரகூடத்துக்கு நாமும் ஒரு முறையேனும் சென்று வருவோமே!

எங்கே இருக்கிறது சித்ரகூடம்?

ஞானம் அருள்வார் ஸ்ரீதத்தாத்ரேயர்!

த்தியப் பிரதேசத்துக்கும், உத்தரப்பிரதேசத்துக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் சித்ரகூடம் அமைந்துள்ளது. அலகாபாத் சென்று, அங்கிருந்து சுமார் 116 கி.மீ. பயணிக்க வேண்டும். இங்கே பார்க்க- தரிசிக்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

சதி அனுசூயா கோயில் (அத்ரி, அனுசூயா குடில் இருந்த இடம்), ராம் காட் (ராம் படித்துறை), ஜானகி குண்ட் ( ஜானகி குண்டம்), குப்த் கோதாவரி (குப்த கோதாவரி), ஸ்பாடிக் சிலா (ஸ்படிக பாறை, ஸ்ரீராமர் சம்பந்தப்பட்ட இடம்), காமத் கிரி கோயில் (விஷ்ணு கோயில்), காம்தாஜி கோயில் (ஸ்ரீராமர் கோயில்), ஹனுமான் தாரா (ஸ்ரீஅனுமார் கோயில்) என அந்தப் பட்டியல் நீள்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism