மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி, தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தனர் அல்லவா? அப்போது, மந்தாரமலை நிலைகுலைந்து

சரிய... பெருமாள் கூர்மமாக அவதரித்து, அந்த மலையைத் தன் முதுகில் தாங்கிய கதை நமக்குத் தெரியும்.

அதன் பிறகு 1000 வருடங்கள் கழித்துதான் ஸ்ரீதன்வந்திரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளித்தோன்றினார். அந்த அமிர்தத்தை அடைய தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் 12 வருடங்கள் (தேவர்கள் கணக்குப்படி 12 பகல்; 12 இரவு) யுத்தம் நிகழ்ந்தது. இறுதியில் அமிர்த கலசம் கருடனின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

அவர், அந்தக் கலசத்தைச் சுமந்து சென்றபோது, அதிலிருந்து அமிர்தத் துளிகள் நான்கு இடங்களில் விழுந்தன. அந்தத் தலங்கள்:

அலகாபாத், ஹரித்துவார், நாசிக், உஜ்ஜயினி (வேறு சில தலங்களில் விழுந்ததாகவும் அந்தந்தத் தல புராணங்களில் குறிப்புகள் உண்டு). இதையட்டி, இந்தத் தலங்களில் கும்பமேளா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையிலும், நாசிக்கில் கோதாவரிக் கரையிலும், உஜ்ஜயினியில் க்ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நிகழும். இந்தத் தலங்களில், 'தீர்த்த ராஜா’ எனப் போற்றப்படும் திரிவேணி சங்கமத்தில் மட்டும்தான் 12 வருடங்களுக்கு ஒருமுறை மஹா கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது. 2001-ஆம் ஆண்டுக்கு பிறகு, இதோ... இந்த வருடம் (2013) மஹா கும்பமேளாவை எதிர்நோக்கி உள்ளது திரிவேணி சங்கமம். அதுகுறித்த சில தகவல்கள் இங்கே உங்களுக்காக...

விழா நடைபெறும் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 25-ஆம் தேதி வரை திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணியம் என்கின்றன புராணங்கள். அதிலும் குறிப்பாக ஜனவரி- 14, 27; பிப்ரவரி- 10, 15, 17, 25 ஆகிய நாட்களில் நீராடுவதால் புண்ணியம் பன்மடங்கு பெருகும் என்று 'அக்காராக்கள்’ எனப்படும் சந்நியாஸிகளால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நாட்களில் ஜனவரி 14 மற்றும் பிப்ரவரி 10, 15 ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே திரிவேணி சங்கமத்தில் சந்நியாஸிகள் நீராடுவார்கள். இதை 'ஷாஹி ஸ்நான்’ என்று கூறுவர்.

2001-ல் நிகழ்ந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள 60 மில்லியன் பக்தர்கள், அலகாபாத்துக்கு வந்திருந்தனர். இந்த வருடம் 80 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹா கும்பமேளாவுக்குக் கூடாரம் அமைக் கும் பணிக்காக, 'அக்காரா’ சந்நியாஸிகள் நல்ல நாளில் யாகம் வளர்த்து, பூமி பூஜை செய்திருக்கிறார்கள். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பூமி பூஜையில் சுமார் 1600 சந்நியாசிகளும், பல்வேறு மடங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அலகாபாத் நகரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் இருக்கிறது திரிவேணி சங்கமம். விழாவின்போது, 'கும்ப கிராமம்’ என்று வர்ணிக்கப்படும் சங்கமக் கரைக்குச் சென்று ஸ்நானம் செய்வது எளிதான காரியம் அல்ல. பல கி.மீ. தூரத்துக்குப் பாதையைத் திருப்பிவிட்டிருப்பார்கள். 24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அதேபோன்று, மேளாவின்போது திரிவேணியில் சங்கம இடத்துக்குச் செல்ல படகு வசதி இருக்காது; கரையில்தான் குளிக்க வேண்டும்.

தீர்த்தஸ்நானம் என்பது நமது தீராத பாவங் களையும் போக்கும் வல்லமை கொண்டது. அதிலும், திரிவேணி சங்கமத்தில் அமிர்தத் தன்மை நிறைந்திருக்கும் காலமாக ஞானநூல்கள் சிறப்பிக்கும். மஹாகும்பமேளாவின்போது, அதில் புனித நீராடுவது, பெரும் புண்ணியத்தைச் சேர்க்கும்.

மகா கும்பமேளாவுக்காக அலகாபாத் செல்லும் பக்தர்கள், அப்படியே அங்குள்ள அலகாபாத் கோட்டை, அதனுள் இருக்கும் 'பாதாள புரி’ கோயில் (அக்ஷயவடம்), ஸ்ரீபாதாள ஆஞ்நேயர் கோயில், ஸ்ரீஆதிசங்கரர் மடம், அசோகர் ஸ்தூபி, ஜவஹர்லால் நேரு குடும்பத்தினர் வசித்த ஸ்வராஜ் பவன் ஆகியவற்றையும் பார்த்து வரலாம்.