கோவா கியமா வலியை நிலம் கொண்டாய்!

தேவா சுரம்செற் றவனே! திருமாலே!

நாவாய் உறைகின்ற என்நா ரணநம்பீ!

ஆவா! 'அடியான் இவன்’ என்று அருளாயே!

- நம்மாழ்வார் (9-ஆம் பத்து; 8-ஆம் திருவாய்மொழி)

பொருள்: மூவுலகங்களுக்கும் அரசனாகிய மாவலியிடம் சென்று மூவடி மண் நிலத்தை இரந்துகொண்டவனே! தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களை அழித்தவனே! திருமாலே! திருநாவாயில் எழுந்தருளி இருக்கின்ற என் நம்பியாகிய நாராயணனே! 'அந்தோ! அந்தோ! இவன் அடியான்’ என்று திருவுளம் கொண்டு திருவருள் புரிவாயே!

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், திரூர் நகரிலிருந்து தெற்கே 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாவாய் என்னும் திருத்தலம். பாரதப்புழா என்னும் அழகான, அகண்டு விரிந்த நதி இந்த ஆலயத்தைத் தொட்டுக்கொண்டு ஓடுவது ரம்மியமாக இருக்கிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாமகத் திருவிழா, தமிழ்நாட்டைப் போல இங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று இங்குள்ள மகாவிஷ்ணு ஆலயத்தைக் குறிப்பிடுகிறார்கள். புனரமைப்பு வேலைகள் அவ்வப்போது இந்த ஆலயத்தில் நடந்துவந்தபோதிலும், 1300 ஆண்டுகளுக்கு முன் பெருந்தச்சன் என்ற புகழ்வாய்ந்த சிற்பியால் ஆலயம் புதுப்பொலிவு பெற்றதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில், குறிப்பிட்ட சில தினங்களில் மூலவரின் திருமேனி மீது சூரியனின் கதிர்கள் விழுவது அற்புதக் காட்சி!

ஸ்ரீமத் பாகவதத்தில் 'பிரதீசி’ என்று குறிப்பிடப்படும் இங்கே பாயும் தட்சிண கங்கா (பாரதப் புழா) வட

இந்தியாவில் ஜீவ நதியாக ஓடும் கங்கை நதிக்கு இணையானதாகக் குறிப்பிடப்படுகிறது. திருநாவாயின் வடகரையில் மகாவிஷ்ணுவான ஸ்ரீநவமுகுந்தர் ஆலயமும், தென் கரையில் சிவன், பிரம்மா ஆகியோரது ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. எனவே, திரிமூர்த்தி சங்கமமான இந்தத் தலத்தில் செய்யப்படும் 'பித்ரு கர்மா’ மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

மலையாள மொழிக்கு 'ஓட்டன் துள்ளல்’ என்ற கலை வடிவத்தை அளித்த பெருமைக்கு உரியவர் குஞ்சன் நம்பியார். சமுதாயச் சீர்கேடுகள், கொடுமைகள், அநீதிகள், தேவையற்ற மதச் சடங்குகள் போன்றவற்றைக் கிண்டல் செய்து இந்தக் கலை வடிவத்தில் விமர்சிப்பார். அப்படிப்பட்ட குஞ்சன் நம்பியார் பாரதப்புழாவின் கரையில் வசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புனித நதியை ஒட்டி ஆலத்தியூர் நம்பி, புலமந்தோல் நம்பூதிரி போன்ற உயர்ந்த மருத்துவ வல்லுநர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார் கள். புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞரும் 'நாராய ணீயம்’ நூலின் ஆசிரியருமான மேப்பத்தூர் நாராயண பட்டதிரி, பிரபல ஜோதிடரான தலக்குளத்து பட்டத்திரி மற்றும் அவரின் சீடர்கள், ஆலயங்களை வழிநடத்தும் தந்திரிகள் பலர் பாரதப்புழா நதிக்கரையில் உருவாகி, கேரளத்துக்குப் பெருமை சேர்த்தவர்களே!

ஒருமுறை அயோத்தியை ஆண்ட ஹிரிஷபா என்ற மன்னனுக்கு 9 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுக்கு இருந்த அதீத ஆன்மிகத் திறமையால் 'நவ யோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர். இவர்கள் ஊர் ஊராக யாத்திரை வந்தபோது, காந்தகி நதிக்கரைக்கு வந்தனர். அங்கே, மூத்த யோகியான கவி என்பவர் மகாவிஷ்ணுவின் சாளக்ராமக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார். அப்போது, 'இதை, மனித குல மேன்மைக்காக புனிதமான இடம் ஒன்றில் பிரதிஷ்டை செய்க!'' என்று ஓர் அசரீரி ஒலித்தது. அதன்படி, அதை அவர் பாரதப் புழா நதியின் வடக்குக்கரையில் ஒரு இடத்தில் நிறுவினார். ஆனால், அந்தச் சாளக்ராமம் மண்ணில் புதையுண்டு மறைந்து போயிற்று.

அதையடுத்து, நவயோகிகளில் அடுத்துள்ள 7 சகோதரர்கள் வெவ்வேறு சாளக்ராமங் களைத் தேடிக் கண்டெடுத்து வந்து நிறுவ, அவையும் மண்ணில் புதையுண்டு மறைந்தன. இறுதித் தம்பியான கரபஜானனும் அங்கே சாளக்ராமத்துடன் வந்து சேர்ந்தான். மண்ணுலகில் வாழ்ந்து மறைந்தவர்கள் மோட்சம் பெறுவதற்கான சடங்குகளையும், யாகங்களையும், பூஜைகளையும் செய்தான். பிறகு, ஒன்பது யோகிகளும் இணைந்து மனித குல மேம்பாட்டுக்காக யாகங்கள் செய்து மகா விஷ்ணுவைத் துதித்தனர். அதன் பலனாக, சாளக்ராமம் புதைந்து போகாமல், நிலையாக நின்று ஒளிர்ந்தது. அவ்வாறு அது ஒளிர்ந்த இடம் 'திருநவயோகி’ என்று பெயர்பெற்றது. காலப்போக்கில், அதுவே 'திருநாவாயா’ என்று அழைக்கப்பட்டது. இங்கு வந்து தம் பாடல்களால் மங்களாசாசனம் செய்த நம்மாழ்வார், இத்தலத்தை 'திருநாவாய்’ என்று குறிப்பிட, இந்தப் பெயரே இப்போது விளங்கி வருகிறது.

நவ யோகிகள் இங்கு நிறுவிய மூலவர் ஸ்ரீநவமுகுந்தப் பெருமாள் என்று அழைக்கப் படலானார். இந்த விக்கிரகம் நிறுவப்பட்டது துவாபர யுகத்தில் என்று புராணம் கூறுகிறது. கேரள திவ்ய தேசங்களிலேயே இங்குதான் தாயாரான ஸ்ரீமகாலட்சுமிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. மலர்மங்கை நாச்சியார், சிறுதேவி ஆகிய பெயர்களிலும் தாயார் அழைக்கப்படுகிறார்.தவிர, ஸ்ரீஆதி கணேசர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீபார்வதி, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீமார்க்கண்டேயர், கங்கா, யமுனா ஆகியோரது விக்கிரகங்களும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சாஸ்தாவும் தனிச் சந்நிதியில் அருள்கிறார்.

இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் விஷ்ணுவின் தீவிர பக்தன். வயது முதிர்ந்ததும் மகனிடம் ராஜ்ய பரிபாலனத்தை ஒப்படைத்துவிட்டு, மலையாத்ரி மலைக்குச் சென்று தவம் செய்தான். அப்போது அங்கு வந்த அகத்திய முனிவரை அவன் கவனிக்கவில்லை. தன்னை அவன் அவமதித்துவிட்டதாகக் கோபம் கொண்ட முனிவர், அவனை ஒரு யானையாக உருமாறும்படி சபித்தார். மன்னன் அவரைத் துதித்துப் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்ட, 'பலகாலம் கழித்து மகாவிஷ்ணு உன்முன் தோன்றுவார். அப்போது உனக்கு சாபவிமோசனம் கிட்டும்'' என்று கூறினார் அகத்திய முனிவர்.

யானையாக உருமாறிய இந்திரத்யும்னன் காடுகளில் அலைந்து திரிந்தான். இறுதியாக ஸ்ரீநவமுகுந்தர்

ஆலய பகுதிக்கு வந்தான். தினமும் பாரதப்புழா நதியில் நீராடி, விஷ்ணுவை வழிபட்ட அவனை ஒரு முதலை பற்றித் தாக்கியது. தன்னைக் காப்பாற்றும்படி விஷ்ணுவை நோக்கிக் குரல் கொடுத்தான் அவன். ஸ்ரீநவமுகுந்தப் பெருமாள் தன் பக்தனைக் காக்க ஓடோடி வந்தார். தன் சுதர்சன சக்கரத்தால் முதலையைக் கொன்று அவனைக் காத்தார். இந்திரத்யும்னனைத் தன் வலது பக்கத்தில் அமர அனுமதித்தார். இந்தக் கோயில் கருவறையில் இக்காட்சியை இன்றும் பக்தர்கள் காணலாம்.

ஸ்ரீஆதிகணேசர் தினமும் அதிகாலையில் எழுந்து அருகில் உள்ள குளத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்து, பெருமாளுக்கு அர்ப்பணித்து வந்தார். ஒரு அக்ஷய திருதியை நாளில் அவருக்கு முன்னதாக யாரோ தாமரை மலர்களைப் பறித்துச்

சென்றுவிட்டதால், மலர் கிடைக்காமல் மனம் வருந்தினார் கணேசர். ஸ்ரீநவமுகுந்தப் பெருமாள் அவர்முன் தோன்றி, ஸ்ரீமகாலட்சுமிதான் மலர்களைப் பறித்தவள் என்றும், இனி அவ்வாறு செய்யமாட்டாள் என்றும் கூறி, மகாலட்சுமியைத் தன் இடப்புறம் அமர்த்திக்கொண்டார். சகல ஐஸ்வரியங்களுக்கும் அதிபதியான ஸ்ரீதனலட்சுமியே ஸ்ரீமகாலட்சுமி என்பதால், இங்கு வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு ஏராள செல்வத்தை அருளுவார் பெருமாள் என்பது நம்பிக்கை.

இந்துக்களுக்கு பித்ரு தர்ப்பணம் என்பது ஒரு கடமையாகவே வேதத்தில் குறிப்பிடப்

பட்டுள்ளது. அவதார புருஷரான ஸ்ரீபரசுராமர் ஆயிரக்கணக்கில் மன்னர்களைக் கொன்று குவித்த தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கு வந்து தர்ப்பணம் செய்தான் என்கிறது புராணம். இதனால், பித்ரு கர்மா செய்யும் இடங்களில் மிகவும் புனிதமான இடமாக திருநாவாய்

திகழ்கிறது. ஆலயத்தை ஒட்டிய பாரதப்புழா நதிக் கரையின் படிக்கட்டுகளில் ஏராளமானோர் வரிசையாக அமர்ந்து பித்ரு தர்ப்பணம் செய்வதைக் காணலாம்.

ஆலயத்தின் செயல் அலுவலர் ஹரிதாஸ் நம்மிடம் பேசும்போது, ''மலபார் தேவஸம் போர்டு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஆலயத்தின் நடை, அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு மூடப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7.30-க்கு சாத்தப்படும். பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றுவதும், தாமரை புஷ்பம் சமர்ப்பிப்பதும், பால் பாயசம் படைப்பதும் இங்கு விசேஷம்! ஏப்ரல் மாதம் விஷ§ உத்ஸவம் நடைபெறும். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நவம்பர்- டிசம்பர் மாதங்களில் 41 நாட்கள் பெருமாளுக்கு 'பஞ்ச கவ்ய’ அபிஷேகம் நடக்கும். இங்கு வரும் பக்தர்களில் ஏராளமானோர் 'பித்ரு தர்ப்பணம்’ செய்கிறார்கள். இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்குக் குறைவில்லாத ஐஸ்வரியமும், பித்ருக் களின் பரிபூர்ண ஆசியும் கிட்டும் என்பது ஐதீகம்.

இந்திரத்யும்னன் அழைத்ததும் ஓடிவந்து காத்த ஸ்ரீநவமுகுந்தப் பெருமாள், நாம் மனதார வேண்டி வழிபட்டாலும் ஓடிவந்து உதவுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை!' என்றார்.

படங்கள்: வி.ராஜேஷ்