'வாமயாமளி யாசிவா

வாசியானிலை வானவா

வானவாபல நாயவா

வாயறாவண யாமவா...

கோயிலின் உட்புறம் செல்லும் நுழைவு வாயிலில், வலப்பக்கத் தூண்ல இப்படி எழுதியிருக்கு பார்த்தியா? என்ன அர்த்தம்னு புரியுதா? 'இட பாகத்தில் நீலவண்ணம் பெற்ற அம்பிகையைக் கொண்ட சிவபெருமானே, காளை வாகனத்தைக் கொண்டவரே, ஆநிலையப்பரான தேவரே, உயர்ந்ததான முதன்மை ஸ்தானத்தைப் பெற்றவரே, அஞ்ஞான இருளைக் கடந்தவரே, அழகு மிக்கவரே, நள்ளிருளில் நடம் பயின்று ஆடும் நாதரே... மோட்ச வீட்டின் வாயிலை எனக்குத் தந்தருள்வீராக!’ன்னு அர்த்தம்'' என்று விளக்கினார் தாத்தா.

''அப்புறம்... கருவறை கோஷ்டத்துல அர்த்தநாரீஸ்வர ரோட திருமேனியைப் பாரேன். சிவசக்தியில் துவங்கி சிவசக்தியிலேயே நிறைவுறுவது மாதிரியான அமைப்புல இருக்கு, இந்தக் கோயில். உள்ளே கருவறையில், சுயம்பு மூர்த்தமாக, புற்றிடங்கொண்ட ஈசன். பிரம்மா மற்றும் காமதேனுவில் துவங்கி விபண்டகன் வரைக்கும் வழிபட்டு அருள் பெற்றதா ஸ்தல புராணம் சொல்லுது. லிங்க மூர்த்தம் லேசா சாஞ்சிருக்கற மாதிரி இருக்கு பார்! பங்குனியில் சூரியன் தன் கதிர்களால வணங்கும்போது, அதற்கு ஏதுவாக சாய்ஞ்சு கொடுக்கிறாராம் சிவனார். இன்னொரு காரணம்... கருவூர்ச் சித்தர் பிரானுக்கு சூட்சுமமாக அருகில் இடம் கொடுத்திருக்கிறாராம் ஈசன். தவிர, காமதேனுவின் குளம்பு லிங்கத் திருமேனி பட்டதால் உண்டான சின்ன தழும்பு, குழி போல இருக்கு; அதையும் பார்!'' என்று முழுவதுமாகச் சொல்லச் சொல்ல... சிவலிங்கத் திருமேனியை வைத்த கண் வாங்காமல் பார்த் துக்கொண்டே இருந்தான் பேரன்.

''அம்பாள் ஸ்ரீகிருபாநாயகி மட்டும் என்ன? அலங்காரவல்லின்னு திருநாமம் உண்டு, அவளுக்கு. அம்பிகையின் பீடத்தில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கு. கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் அம்பிகையை வணங்கினால், நமக்கு விடிவு காலம் நிச்சயம்னு சொல்றாங்க. அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி ஆகிய நாட்கள்ல, சந்திரபலம் இங்கே சந்நிதில நிறைஞ்சிருக்குமாம். அந்த நாட்கள்ல அம்பாளை வணங்கி வழிபட்டா, மனோபலம் கூடும்னு பக்தர்கள் சொல்றாங்க!

அதேபோல இன்னொரு அம்பாளின் திரு நாமம்- ஸ்ரீசௌந்தரநாயகி. பிற்காலத்தில், இந்த அம்பிகையின் விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். மானுடப் பெண்ணாக வந்து, ஈசனை வணங்கியவள்

இவள்தான்! தெற்குப் பார்த்தபடி காட்சி தரும் இவளை வணங்கினால், ஞானமும் யோகமும் கிடைக்கும்கறது ஐதீகம். கரூவூர்னு சொல்லப்படுற கரூருக்குப் பக்கத்துல அப்பிப் பாளையம்னு ஒரு கிராமம் இருக்கு. அங்கே வேட்டுவர் இனத்தைச் சேர்ந்த தனவந்தர், கிராம நிர்வாக அலுவலராகவும் இருந்தார். அவருக்கு வடிவுடையாள்னு மகள் இருந்தாள். பேச்சிலும் செயலிலும் அப்படியரு நிதானம் அவளுக்கு! சதாசர்வகாலமும் சதாசிவத்தையே நினைக்க ஆரம்பிச்சா. ஒருகட்டத்துல, 'பசுபதீஸ் வரரைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படு றேம்பா’ன்னு சொன்னாள். முன்ன தாக, மகள் விருப்பப்படி, சந்தனக் கட்டையால் சிவலிங்கமும் செய்து கொடுத்தார்.

அதைக் கொண்டு, தினமும் பூஜித்து வந்தாள் வடிவுடையாள். எவரேனும் கேட்டால், 'நான் பசுபதீஸ்வரரைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்’ என்றாள். அதைக் கேட்டு அவளைப் பைத்தியம்னு ஊர் கேலி பேசிற்று. பெத்தவங்க துடிச்சுப் போயிட்டாங்க. அவங்க கனவுல வந்த ஈசன், 'பங்குனி உத்திரத் திருவிழாவின் ஏழாம் நாள், எங்களுக்குத் திருமணம் நடைபெறும்’னு சொன்னார். அதிர்ந்து போயிட்டாங்க அவங்க. அதன்படியே கல்யாணமும் நடந்தது. இன்னிக்கும் பங்குனி மாச விழாவுல, பசுபதீஸ்வரர் அப்பிப் பாளையத்துக்குப் போறதும், மறு நாள் கரூர்ல வடிவுடையாளோட கல்யாண வைபவம் நடக்கறதும் திருவிழாவா கொண்டாடப்படுது!'' என்று தாத்தா சொல்ல...

''அந்தத் திருவிழாவைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. ஒரு தடவை என்னைக் கூட்டிட்டு வாங்க தாத்தா’ என்று கோரிக்கை வைத்தான் பேரன். ''வந்துட்டாப் போச்சு!'' என்றார் தாத்தா உற்சாகமாக. ''மயிலின் மீது ஏறிய நிலையில, அழகு ததும்பக் காட்சி தரும் ஸ்ரீஆறுமுகப் பெருமானை அருணகிரிநாதர் பாடியிருக்கார்.

வராக முனிவர் வன்னிமரத்தால் லிங்கத் திருமேனியை நிறுவி, கடும் தவம் இருந்தார். அதில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்து, 'இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என சிவயோகத்தின் எட்டு நிலைகளும் ஸித்திக்கப் பெறுவாய்!’னு அருள் வழங்கினார். வராக மலை, பன்றி மலை, யோககிரின்னு அந்தப் பகுதி அழைக்கப்பட்டதாச் சொல்லுது ஸ்தல புராணம்'' என்ற தாத்தா, தொடர்ந்து...

''யோகேஸ்வரம் துவங்கி முக்கூடல் வரை, ஆற்றின் இரண்டு பக்கமும் நிறையவே கோயில்கள் உண்டு. பிரம்மா, விஷ்ணு, காமதேனு, வராக முனிவர்னு வழிபட்ட தலங்கள் எல்லாத்துலயுமே பல சிறப்புகள் இருக்கு. அத்திரி, அகத்தியர், பரத்வாஜர், வியாசர், சுகர், காசிபர், கோசிகர், வசிட்டர், பிருகு, துர்வாசர், வாமதேவர், ததீசி, கண்ணுவர், சாமதேற்கியர், சாபாலி, சாண்டில்யர், உரோமபாதர், உபமன்னியர், சங்கணர், பராசரர், கவுதமர், சுதீக்கணர், மிருகண்டு, மார்க்கண்டர், விபாண்டகர், சனகர், சனாந்தகர், சனந்தரர், சனத்குமாரர், நாரதர்னு எண்ணற்ற முனிவர் பெருமக்களும் தவமிருந்து வழிபட்ட அற்புதமான தலம் இது! ஸ்ரீபிரம்மா, இங்கே சிவனாருக்குக் கோயில் அமைத்ததோட மட்டுமில்லாம, தென்கிழக்கில் காளிதேவிக்கும் ஒரு கோயில் அமைத்தார். பிறகு, அந்த அம்மனுக்கு ஸ்ரீவஞ்சியம்மன்னு பேரு மாறிடுச்சு. அப்புறம், பிரம்மா ஓர் அய்யனார் கோயிலும் கட்டினார்னு சொல்லுது ஸ்தல புராணம்!'' என்றார் தாத்தா.

''பிரம்மனின் வேள்விக்காக வந்த வியாச முனிவருக்கு, இந்தத் தலம் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. சிவனார்கிட்ட வேண்டினார். 'நதியின் வடகரையில், தவச்சாலை அமைத்து, தவம் இருங்கள்’னு சொல்லி அருளினார் சிவபெருமான். அதன்படியே தங்கி, தவமிருந்த வியாசருக்கும் அருள்பாலித்தாராம் சிவபெருமான்! இப்படி இந்தத் தலத்தைப் பத்திச் சொல்லிக் கிட்டே போகலாம்டா கண்ணா!'' என்று தாத்தா சொல்ல, ஆலயத்தையே பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் பேரன்.

- தரிசிப்போம்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்