'ஆடல்வல்லான் என்று பேரெடுத்திருந்தாலும் நீங்கள் இப்போது ஆடியது, தப்பாட்டம். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் நடனப் போட்டியில், இப்படியா ஆடுவது? இப்படி ஆடினால்தான் உங்களால் ஜெயிக்க முடியுமா?'' என்று கணவனிடம் கோபித்துக்கொண்டு குமுறினாள் உமையவள். தோற்றுப் போய்விட்ட அவமானத்தால் தலைகுனிந்தவள், அங்கிருந்து மெள்ள நகர்ந்து வெளியேறினாள்.

எங்கே போவது என்றே தெரியாமல், பயணித்தாள் ஸ்ரீபார்வதிதேவி. அப்போது அவளை வழியில் மறித்த ஸ்ரீபிரம்மா, ''கோபம் வேண்டாம் தேவி! சிவனாரிடமே சென்றுவிடுங்கள்'' என்று சொல்ல... ''முதலில் என் கோபம் தணிய வேண்டும். அதற்கு எந்தச் சத்தமும் இல்லாத அமைதியான சூழலும் தனிமையும் தேவை. உரல் சத்தமோ உலக்கைச் சத்தமோ இல்லாத இடத்தில் தவம் செய்ய விரும்புகிறேன். அப்படியரு இடம் எங்கே இருக்கிறது, சொல்லுங்கள்?'' என்று கேட்டாள் தேவி.

காவிரியும், காவிரியில் இருந்து பிரிந்த கொள்ளிடமும் ஓடுகிற இடத்தைச் சொல்லி, ''அங்கே உள்ள வயல்வெளியில் தவம் செய்யுங்கள்!'' என்று அருளிச் சென்றார் பிரம்மதேவன். அதன்படி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து, அந்த வயல்கள் சூழ்ந்த பகுதிக்கு வந்தாள் தேவி. நெல்லின் மணமும் மண்ணின் வாசமும் சூழ்ந்திருக்க, அங்கே தன் கோபம் தணிவதற்காகக் கடும் தவத்தில் மூழ்கினாள். அந்த இடம் பிடித்துப் போகவே, அங்கேயே தங்கி தன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது எனத் திருவுளம் கொண்டாள்.

திருச்சி, பிச்சாண்டார் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், வயல்கள் சூழ்ந்த பகுதியில், சப்தகன்னியரில் ஒருத்தியாகக் கோயில்கொண்டிருக்கிறாள் தேவி. இங்கே அம்பிகையின் திருநாமம் - ஈசம்பலத்தம்மன்! 'எங்களுக்குக் காவல்தெய்வமா இருந்து, எங்களையும் எங்களோட நிலங்களையும் காப்பாத்திட்டு வர்றது, ஈசம்பலத்தம்மன்தான்’ எனப் பெருமிதத்துடன் சொல்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

கருவறையில் சப்தகன்னியரும் காட்சி தருகின்றனர். தை, பங்குனி மற்றும் ஆடி ஆகிய மாதங்களில் இங்கே அம்மனுக்கு விழா எடுத்துக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர், பக்தர்கள். குறிப்பாக, தை மாதத்தில் விவசாயிகளும் அவர்கள்தம் குடும்பத்தாரும் வந்து, நெல்மணிகளை விளையச் செய்த அம்மனுக்குப் பொங்கல் படையலிட்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

பொங்கல் நன்னாளில் சப்தகன்னியருக்கு மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி, பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்துகொண்டு பிரார்த்திக்க... மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்!

அதேபோல், விதை நெல்லை சந்நிதியில் வணங்கிய பிறகு வயல்களில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், பக்தர்கள். அமோக விளைச்சலை எட்டிய பிறகு, விளைந்து நிற்கிற கதிர், கரும்பு, தானியம் ஆகியவற்றை எடுத்து வந்து, காணிக்கையாக அம்மனுக்குச் செலுத்துகின்றனர்.

திருமணத் தடையால் அவதிப்படுவோர், அம்மனுக்கு மாலை சார்த்துவதாக வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீகருப்பண்ண சுவாமி, ஸ்ரீகாத்தவராயன்,

குமுட்டி துமுட்டி சுவாமிகள் ஆகியோரும் சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.

ஈசம்பலத்தம்மனை வணங்கினால், வயலும் செழிக்கும்; வாழ்க்கையும் சிறக்கும்!

- பி.விவேக் ஆனந்த்

படங்கள்: தே.தீட்ஷித்