குருக்ஷேத்திரம்- புண்ணிய பாரதத்தின் அறநெறிகளுக்கெல்லாம் கருவறை இந்தத் தலம். 'தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே...’ என பகவான் ஸ்ரீகிருஷ்ணனே சிறப்பித்த திருத்தலம். 'உற்றார் உறவுகளை எல்லாம் அழித்துவிட்டு, அதனால் கிடைக்கும் மண்ணும் அரசும் தேவையா?!’ என அர்ஜுனன் கலங்கி நின்றபோது... அவனது கலக்கம் நீக்கி, அறத்தை விளக்கி, அதர்மத்தை அழிக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தி, பகவானே குருவாக நின்று உபதேசித்த க்ஷேத்திரம்!

இது, டில்லிக்கு வடக்கில் சுமார் 160 கி.மீ. தொலைவில், ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. குருக்ஷேத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த உலகுக்கும் கீதை எனும் பாடம் தந்த அந்த உன்னத தலத்தை நாமும் தரிசிக்கலாம், வாருங்கள்...

பிரம்மசரோவரில் மகாதேவன்!

சுமார் 3,600 அடி நீளம்; 1,200 அடி அகலம்; 15 அடி ஆழம் கொண்ட புண்ணிய தீர்த்தம் பிரம்மசரோவர். ஒரே தருணத்தில் 5 லட்சம் பேர் புண்ணிய நீராட முடியுமாம்! நடுவே மிக அழகான ஸ்ரீசர்வேஸ்வர மகாதேவனின் திருக்கோயில்.