இப்போது நாம் திபெத்தின் சாகா நகரில் இருந்து பயணத்தை தொடங்குகிறோம். இங்கிருந்து சுமார் 160 கி.மீ. தொலைவு பயணித்தால், நியூ டாங்பா நகரை சென்றடையலாம். செல்லும் வழியில் மலைத் தொடர்கள் மிகவும் ரம்மியமாகக் காட்சி தருவதால், யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் ஆங்காங்கே வாகனங்களில் இருந்து இறங்கி நின்று, தாங்கள் விரும்பியபடி புகைப்படம் எடுத்துக்கொள்வதைக் காணமுடிகிறது.

நியூ டாங்பா சிறு நகரம்தான். யாத்ரீகர்களுக்காக தங்கும் விடுதிகள் இங்கு உள்ளன. சிறுசிறு அறைகளில் 6 பேர் வரை தங்க வேண்டியிருக் கிறது. கடல் மட்டத்தில் இருந்து 14,500 அடி உயரத்தில் இந்த நகரம் இருப்பதால், குளிர் மிகமிக அதிகம்.

இந்த கடும் குளிருக்கு இதமாக சூடா ஒரு கப் காபியோ, டீயோ அல்லது வெந்நீரோ குடிக்க வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அந்த நேரங்களில், நாம் கேட்டவற்றைத் தந்து அன்போடு நம்மை கவனித்துக்கொள்கிறார்கள், நம்முடன் கூடவே பயணிக்கும் நேபாள் உதவியாளர்களான 'செர்ஃபா’க்கள்.

நியூ டாங்பாவில் இருந்து சுமார் 350 கி.மீ. தொலைவு பயணித்தால்தான், மானசரோவரை சென்றடைய முடியும். அங்கிருந்துதான், கயிலை மலையானின் முதல் தரிசனம் நமக்குக் கிட்டும். அதுவரை, பொறுமையாய் பயணிப்போம்...