'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்பார்கள் பெரியோர்கள். தந்தைக்கும் தந்தையாக, அடியார்க்கும் அடியாராக... அந்த சுப்ரமண்ய தெய்வம் செய்த அருளாடல்கள் ஏராளம்!

திருச்சீரலைவாய், திருச்செந்தில், ஜயந்திபுரம் என்றெல்லாம் போற்றப்படும் திருச்செந்தூரில் சுமார் 300 வருடங்களுக்கு முன்பு ஓர் அருளாடல் நிகழ்ந்தது. ஒருநாள், திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள் என்னும் ஒடுக்கத்தம்பிரான் ஸ்வாமிகளின் கனவில் தோன்றி, திருப்பணி செய்ய அழைத்தாராம் முருகக்கடவுள்.

அதன்படி, தேசிகமூர்த்தி சுவாமிகளும் கோயிலின் திருப்பணி மண்டபத்தில் தங்கியிருந்து, ராஜகோபுரத்தைக் கட்டியதாகக் கூறுகிறது தல வரலாறு. கோபுரத் திருப்பணியின்போது, ஒருமுறை பணியாட்களுக்குக் கூலி கொடுக்கப் பணம் இல்லாத நிலை! ஸ்வாமிகள் முருகனை மனத்தில் இருத்தி, பணியாட்களுக்கு இலைவிபூதிப் பொட்டலத்தைக் கொடுத்து, 'தூண்டுகை விநாயகர் கோயிலுக்கு அருகில் சென்று பொட்டலத்தைத் திறந்து பாருங்கள்’ என்று கூறி அனுப்பினாராம். வேலையாட்களும் அவ்வாறே செய்ய... அன்று அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ற கூலித்தொகை, பொட்டலத்துக்குள் இருந்ததாம். இவ்வாறு பலமுறை நிகழ்ந்துள்ளது.

திருக்கோபுரத்தின் 6-ஆம் நிலை வந்தபோது, இந்த அற்புதம் நின்றுபோனது. ஸ்வாமிகள் கலங்கித் தவித்தார். மீண்டும் அவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அருகிலுள்ள காயல்பட்டினம் எனும் ஊரில் வசிக்கும் வள்ளல் சீதக்காதியிடம் சென்று, பொருளுதவி கேட்கும்படி பணித்தார். அதன்படியே வள்ளல் சீதக்காதிக்கு ஓலை அனுப்பினார் ஸ்வாமிகள். உடனே, ஒரு மூட்டை உப்பை காணிக்கையாக அனுப்பி வைத்தார் வள்ளல். அந்த மூட்டையை தேசிகமூர்த்தியார் பிரித்துப் பார்த்ததும், உப்பு தங்கக் காசுகளாக மாறியிருந்தது. அதைக் கொண்டு திருப்பணிகள் தொடர்ந்தன.

தவிர, சுமார் நான்கடி உயரம் உள்ள செம்பினால் ஆன ஒரு வேலில், திருச்செந்தூர் கோயில் திருப்பணி செய்து முடிக்க யாசகம் தருமாறு சாட்சாத் முருகப்பெருமானே கேட்பதாக வாசகங்களைப் பொறித்து, அதை வீரபாகு என்பவரிடம் கொடுத்து, திருப்பணிக்குப் பொருள் யாசகம் பெற்று வரும்படி அனுப்பிவைத்தார் ஸ்வாமிகள் (ஸ்ரீமுருகப்பெருமானே வாசகம் பொறித்த வேலாயுதத்தைத் தந்தருளியதாகவும் சிலர் கூறுவார்கள்).

வீரபாகுவும் அந்த வேலாயுதத்துடன் சென்று பக்தகோடிகளிடம் திருப்பணிக்குப் பொருள் பெற்றுவந்தார். திருப்பணியும் விரைவில் நிறைவேறியது. மிகப் பழைமை வாய்ந்த அந்த வேலாயுதம், இன்றைக்கும் திருச்செந்தூர் கீழரதவீதியில் உள்ள திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை திருஆதீன மடத்தில் பாதுகாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீசெந்திலாண்டவரைத் தரிசிக்க திருச்செந்தூர் செல்லும் அன்பர்கள், அப்படியே மடத்துக்கும் சென்று அற்புதமான அந்த வேலாயுதத்தையும் தரிசித்து வரலாம்.

- ச.காளிராஜ்

படங்கள்: ஏ.சிதம்பரம்