புராணங்களில் பெரியது ஸ்கந்தபுராணம் என்பார்கள். இதை அடிப்படையாகக் கொண்டுதான் கவி காளிதாசன் குமாரசம்பவத்தை அருளினாரா? காளிதாசனின் படைப்புகள், இலக்கிய ரசம் மிகுந்தவையாக இருப்பதுடன், வாழ்வின் அடிப்படை தர்மத்தையும் போதிக்கும் பொக்கிஷங்களாகத் திகழ்வன எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

குமார சம்பவத்தின் சிறப்பான விஷயங்களை, அதில் கவி காளிதாசன் மேற்கோள்காட்டும் தர்மசாஸ்திரத்தின் அறிவுரைகளை தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

- வேல்முருகன், கோவில்பட்டி

சம்ஸ்கிருத இலக்கியங்கள் அத்தனையும் அறத்தோடு இணைந்துதான் இருக்கும். காளிதாசனின் படைப்புகள் ரசிகர்களுக்கு மட்டுமே விருந்தல்ல; எல்லோருக்குமான வாழ்க்கை வழிகாட்டி.

சிறு வயதில் கல்வி, இளமையில் இன்பம், முதுமையில் வைராக்கியம், வாழ்க்கையின் எல்லையை எட்டும்போது யோகத்தினால் உடலைத் துறந்து பரம்பொருளுடன் இணைதல் (சைசனவஅப்யஸ்தலித்யானாம்)- இப்படி வாழ்ந்தார்கள் ரகுவம்சத்து அரசர்கள் என்று குறிப்பிடுவார் காளிதாசன். பரிணாம வளர்ச்சிக்கு உகந்த முறையில் மனிதனின் செயல்பாடுகளை வாழ்க்கையுடன் இணைத்து தந்த தர்மசாஸ்திர அறிவுரையின் விளக்கவுரையாக மிளிர்கிறது அவரது படைப்பு.

பிரம்மசர்யம், கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், ஸன்யாசம் என்ற ஆச்ரமங்கள் மனிதனால் படைக்கப்பட்டவை அல்ல. உடலும், உள்ளமும் ஒருசேர வளரும் தறுவாயில் ஏற்படும் தகுதியின் அடிப்படையில், அவனை ஒழுக்கத்துடன் இணைத்து பிறவிப்பயனை எட்டவைக்க, வேதம் வகுத்த வழியில் இயற்கையோடு இணைந்து வாழும் பாங்கை தர்மசாஸ்திரம் விளக்கும்.

மாருதி கடலைக் கடந்து இலங்கையை அடைந்தான் என்பதை விளக்க, 'வைராக்கியம் பெற்றவன் ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்பதுபோல கரையை அடைந்தான்’ என்கிறார் (மாருதி: ஸாகரம் தீர்ண: ஸம்ஸார கிவநிர்மம:). எதிலும் பற்றற்ற நிலை வைராக்கியம். அது தோன்றினால் மட்டுமே சம்சார சாகரத்தை கடக்க இயலும். ப்ரம்ம விசாரத்துக்கு வைராக்கியம் வேண்டும் என்கிறார் ஆதிசங்கரர் (இஹாமுத்ர போகவிராக:). மறுபிறவியற்ற நிலையைத் தொட வைராக்கியம் வேண்டும். ஆசைகளுடன் ஆண்டவனை அணுகும் முறை வைராக்கியத்துக்கு அடையாளம் அல்ல. பற்றற்ற நிலையை எட்டாத உள்ளத்தில் பரமன் குடியேற மாட்டான்.

தேவலோகத்தை ஆள்பவன் இந்திரன். அவனை வேள்வி வழியாக திருப்திப்படுத்தினால், அவன் மழை பொழியச் செய்து பயிர்வளம் மூலம் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு உயிர் அளிப்பான். நம் அரசர்கள் தேவர்களுக்கு வேள்விகள் வாயிலாக உணவளித்து உதவுவார்கள். இந்திரன் தேவலோகத்தில் இருந்துகொண்டு பூமியை செழிப்பாக்குகிறான். திலீபன் இங்கிருந்து கொண்டு வேள்விகள் மூலம் இந்திரலோகத்தை வாழ வைக்கிறான். இப்படி பண்டம் மாற்று முறையில் இருவரும் செயல்பட்டு உலகத்தை வாழவைக்கிறார்கள் என்கிறார் காளிதாசன் (துதோஹ காம்ஸயந்நாய...).

இசைக்கு ஒன்று, நாட்டியத்துக்கு ஒன்று, சுவைக்கு ஒன்று என மூன்று நாடகங்களை அறிமுகம் செய்திருக்கிறார் அவர். மக்கள் சம்ஸ் கிருத மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்ததால்தான், இந்த நாடகங்கள் அரங்கேறி உலக ப்ரசித்தி பெற்றன. நாடகத்தை ரசிக்கும் தறுவாயில், நம் மனத்தில் அறத்தை பதியவைத்து விடும் அவரது படைப்புகள். ரகுவம்சம், குமாரஸம்பவம் ஆகிய காப்பியங்கள் சிறு வயது குழந்தை பருவத்தை பிருந்தாவனமாக மாற்றிவிடும். பிஞ்சு உள்ளங்களில் ஒழுக்கத்தை விதைத்து அறத்தில் பிடிப்பை உறுதி செய்துவிடும்.

ரிதுசம்ஹாரத்தில் ஆறு பருவ காலங்களின் விளக்கவுரை அமைந்திருக்கும். சுகாதாரம், ஆன்ம பலம் இரண்டையும் ஒருசேர வளர்க்கும் தகுதியை ஊட்டிவிடும். பழைமை என்பதால் எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்ற முடிவு தவறு; புதுமை என்பதால் அவையெல்லாம் தள்ளுபடி செய்யவேண்டியவையும் அல்ல. அறிஞர்கள் ஆராய்ந்து நல்லவற்றை ஏற்பார்கள். ஆராயாமல் பிறர் சொல்வதை ஏற்பவர்கள் புத்திசாலிகள் அல்ல. (புராணம் இத்யேவ நஸாதுஸர்வம்...).

ஸனாதனமும், 'நான் சொல்கிறேன் ஏற்றுக்கொள்’ என்று எதையும் நம்மில் திணிக்காது. தான் சொல்வதை ஆராய்ந்து அறிந்து உணர்ந்து முடிவை ஏற்றுக்கொள்ளச் சொல்லும். தத்துவத்தை உணர்ந்து செயல்படுபவனுக்கு பலன் சுலபமாகிவிடும். சிந்தனையைத் தூண்டிவிட்டு செயல்பட்டு உணர வைப்பது அதன் இயல்பு.

'அறிஞன் நல்லவன்; அவன் உனக்கு பகையாக இருந்தாலும் ஏற்றுக்கொள். பொல்லாதவன், போக்கிரியாக இருக்கும் ஒருவன் உனக்கு பங்காளியாகவோ, நண்பனாகவோ இருந்தாலும் அவனைத் துறந்துவிடு’ என்று சொல்வார் காளிதாசன். மருந்து கசக்கும். அதை உண்ணுவதற்கு பிரியம் இருக்காது. ஆனாலும் அதை ஏற்றுக்கொண்டால் பிணி அகலும் என்பதால், ஏற்றுக்கொள்வோம். விரலில் பாம்பு தீண்டிவிட்டது. விஷம் பரவி உடலை பாதிக்கும். விரல் நமக்குப் பிரியமானது; உடலுறுப்பு. ஆனாலும் அந்த விரலை இழக்க தயங்கமாட்டோம் என்ற விளக்கவுரையை மனத்தில் பதியவைப்பார்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை... 'கேள்வி - பதில்’ வாயிலாக காளிதாசனின் முழுத்திறமையை விளக்க இயலாது. அது, கட்டுரையாக மாறிவிடும். அது நடைமுறைக்கு ஒத்துவராது. உலகவியலில் அவன் சிந்தனையின் தரத்தை கோடிட்டுக் காட்ட இயலும். ஆகவே, குருவைத் தேடிச் சென்று மற்றவற்றை தெரிந்துகொள்வது சிறப்பு.

பெரும்பாலான திருமணங்களில், உபாத்யாயர் சொல்லும் மந்திரங்களை மணமகன் திருப்பிச் சொல்வது இல்லை. அந்த மந்திரங்கள் எவ்வளவு அர்த்தம் பொதிந்தவை என்பதும் மணமகனுக்குத் தெரிவதில்லை. உபாத்யாயர் அடிக்கடிச் சொல்லும் 'மம’ என்ற வார்த்தையைக்கூட மணமகன் சொல்வது இல்லை.

ஆக, மணமகன் - மணமகளுக்கு, விவாஹத்துக்கு முன்னரே விவாஹ மந்திரங்களை தெளிவாக அறியும்படி கற்றுத் தருவது பெற்றோரின் கடமை என்றே எண்ணுகிறேன். சீர்வரிசைகளைக் கொட்டிக் கொடுத்து பெருமை தேடுவதை விட, இதுபோன்ற அத்தியாவசிய விஷயங்களை இளையோருக்கு அளிப்பது முக்கியம் அல்லவா? இதுகுறித்து தங்களின் அறிவுரையையும் வேண்டுகிறேன்.

- என். கணபதி, சென்னை-125

விவாஹத்தில் மாப்பிள்ளை வரவேற்பு (ரிஸப்ஷன்), சீர்வரிசைகள், கச்சேரிகள், கதாகாலஷேபங்கள், ஆடியோ- வீடியோக்கள், தாலிக்கட்டு முன் உபாத்யாயரின் சொற்பொழிவு, விவாஹத்தின் சிறப்பை விளக்கும் சிறு துண்டுபிரசுரங்கள், வரன் மேடையில் நின்று கொண்டு தாலியை இரண்டு கைகளாலும் உயர்த்திக் காட்டி வந்தவர்கள் பார்வைக்கு உட்படுத்துதல், வீடியோப் பெருமக்கள், சீரான வீடியோ அமைவதற்காக... அக்னி பகவானை சுற்றிலும் வலம் வந்து, அங்கிருக்கும் பாத்திரங்களை (பாத்ரஸாதனம்) தனது பாதத்தால் இடம் மாற்றுதல், வேதவித்துக்கள் அமர்ந்திருக்க...

அவர்களின் முகத்துக்கு நேரே தங்களின் பின்புறத்தைக் காட்டி மறைத்தல், தாலி கட்டி முடித்ததும் முண்டியடித்துக் கொண்டு தம்பதியை வாழ்த்த பூக்களை வாரிச் சொரிதல், உபாத்யாயரும் சூழலைப் புரிந்துகொண்டு (தேவையில்லாதச் சச்சரவைத் தவிர்க்க) எல்லோருக்கும் சாதகமாக ஒத்துழைத்தல், 'நேரம் ஆகிறதே’ என்கிற ஏக்கம் ஸம்பந்திகளுக்கு வராமல் இருக்க முடிந்த அளவு சடங்கை சுருக்கிக்கொள்ளுதல்... போன்ற நடைமுறைகள் சில கல்யாணங்களில் தென்படுவது உண்டு.

தற்காலச்சூழலில் சடங்கை முடிப்பதற்கே போதுமான கால அவகாசம் கிடைக்காத வேளையில், திருமாங்கல்யத்துக்கு விரிவான பூஜையும், சூத்தாதி ஜபங்களும் அமர்க்களப்படுவதும் உண்டு சில கல்யாணங்களில். மணமகனும் தான் கட்டும் தாலிக்கு பூஜை செய்வதில் பெருமை பெற்று, ஜபத்திலும் பங்குகொண்டு நிறைவு பெறுவான்.

'கணவனாகிய நான் உன் கைத்தலம் பற்றுகிறேன். தற்போது இறுக்கமான நம் இரு மனங்களும் முதுமையிலும், செழிப்பாகவும் பசுமையாகவும் இருக்க வேண்டும்’ எனும் வேண்டுதல் பாணிக்ரஹண மந்திரத்தில் இருக்கும். வரன் சொல்லாமல் விட்டுவிட்டால் உபாத்யாயர் சொன்னதாக ஆகும். அதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு. 'நான் உன் கையைப் பிடிக்கிறேன்’ - என்று இருப்பதால் வரன் சொல்லவேண்டியது கட்டாயமாகிறது. உத்வாஹத்தில் ஓதப்பட்டு, அக்னியில் நெய்வழி வழிபடும் ஹோமங்களிலும் வரன் சொல்ல வேண்டிய கட்டாயம் உண்டு.

விவாஹத்தில் நிகழும் தவறுகளுக்கு எல்லோருக்கும் பங்கு உண்டு. தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் அத்தனைபேரும் செயல்படுவது நமது துரதிர்ஷ்டம். போதுமான அளவு பணத்தை ஈட்டித்தரும் உபாத்யாய பணியானது, ஐ.டி. துறைக்குச் சமமாக உயர்ந்திருக்கிறது. நாமும் நம் குழந்தைகள் திருமணத்துக்கு நிறைய பணம் செலவு செய்கிறோம். பொருளாதாரத்திலும் திறமையிலும் நிறைவுபெற்ற உபாத்யாயர்கள் நிரம்ப இருக்கிறார்கள். முறைப்படியும் சாஸ்திர சம்பிரதாயப்படியும் விவாஹம் நடந்தேற வேண்டும் என்கிற ஆர்வம் எல்லோரிடமும் மேலோங்கி இருக்கிறது. அப்படி இருந்தும், விவாஹம் முழு சிறப்பை அடையாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

ஒருவேளை கல்யாணத்தில் 'கட்டுச்சாதக் கூடைக்காக’ மறுநாள் வரை காத்திருந்து, சத்திர வாடகையை ஒருநாள் கூடுதலாக அளிப்பதன் மர்மம் இன்றுவரை தெரியவில்லை. அரசாங்கம் பதிவுத் திருமணத்தைக் கட்டாயம் ஆக்கியதால் நமது சம்பிரதாயத் திருமணம் தப்பித்துக்கொண்டது. கலப்பு திருமணங்களிலும் சாஸ்திர-சம்பிரதாயங்கள் புகுந்துவிட்டன. பெருகிவரும் விவாகரத்துக்களில் சிலவற்றுக்கு சம்பிரதாய திருமணத்தின் குறையும் காரணம் என்பதை ஒட்டுமொத்தமாக மறுக்க இயலாது. ரிதுசாந்தி முறைப்படி செயல்பட முடியாமல், ஹோட்டலில் அரங்கேறுவதும் அதிகரித்து வருகிறது.

கைநழுவிப்போன ஒரு விஷயத்தை சரிசெய்யும் முயற்சி பலன் அளிக்காது. லோகாயத வாழ்க்கையில் பற்று, ஆன்மிக வாழ்க்கையில் பற்றற்ற நிலை நீடிக்கும் வரை நாம் பொறுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். வேதம், சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவற்றில் பற்று ஏற்பட்டு, லோகாயத்தில் பற்று அகலும்போது, நாம் விரும்பியதை அடைந்து மகிழ்வோம். தவறு செய்தாலும், தவற்றை சுட்டிக்காட்டினால் எல்லோருக்கும் கோபம் வரும்; பகை முற்றும். அதனால், வாயைத் திறக்க இயலாது.

அறவழி காட்டும் ஆசான்கள் நாசுக்காக செயல்பட்டு, தமது பெருமைக்குக் களங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். வாயைத் திறப்பவனையும் அடக்கி, மௌனத்தைக் கடைப்பிடிக்க உபதேசிப்பார்கள். இல்லையேல் தனிமைப்படுத்தப்படுவான்; ரகசிய உத்தரவால் அவன் செல்லாக் காசாக்கப்படுவான். ஸ்ரீமந் நாராயணன் அந்தர்யாமியாக எல்லோர் மனதிலும் உட்புகுந்து குறைகளை அகற்றி நல்லவர்களாக மாற்றினால்தான் உண்டு. அது விரைவில் அரங்கேறும். கவலைப்பட வேண்டாம்.

பணம் ஈட்டும் கல்வியைக் கற்பதற்கே நேரம் போதாத வேளையில், கல்யாணத்துக்கு முன்பு மந்திரத்தைக் கற்றுக்கொள்வது நடக்காத ஒன்று. நாமெல்லாம் இப்படித்தான் நடக்காத ஒன்றை மனக்கோட்டை கட்டி தீர்வு கண்டதாக பெருமிதம் அடைவோம். முற்றின கலியின் முகம் இது. 'லோகா; ஸமஸ்தா: ஸீகினோபவந்து’ என்று கடவுளை வேண்டினால் தீர்வு கிடைக்கும். தீர்வு இல்லாத ஒன்று உலகத்தில் இல்லை. நாம் நம்பிக்கையோடு ஒட்டுமொத்தமாக கடவுளை வழிபடுவோம். ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன், கருணாமூர்த்தியாகிய அவர் மனமிரங்கி, நம் மனம்குளிர அருள்புரிவார்.

- பதில்கள் தொடரும்...