ஒரு காலத்தில் புளிய மரங்களும், வன்னி மரங் களும், ஆல மரங்களும் வில்வ மரங்களும் நிறைந்திருந்த வனமாகத் திகழ்ந்தது ஆலத்தூர். இந்த ஊரின் எல்லையில் இருந்தபடி, எந்தத் தீயசக்திகளையும் உள்ளே விடாமல் தடுத்துக் காத்தருள்கிறார் வீரனார் ஐயனார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து வடசேரி செல்லும் சாலையில், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலத்தூர்.பிரதான சாலையில் நுழைவாயில் வளைவு இருக்க, அந்த வழியே சுமார் 1 கி.மீ. பயணித்தால், வீரனார் ஐயனார் ஆலயத்தை அடையலாம். கிழக்குப் பார்த்த நிலையில், தன்னை நாடி வந்தோரின் வாழ்வில் விடியலை ஏற்படுத்துவதற்குத் தரிசனம் தருகிறார், வீரனார் ஐயனார்.

''விதை நெல்லை எடுத்துட்டு வந்து ஐயனார்கிட்ட வெச்சு வேண்டிக்கிட்டுப் போய் நிலத்துல விதைச்சா, அந்த முறை விளைச்சல் செழிச்சுக் கிடக்கும். அதேபோல, நோய்வாய்ப்பட்ட குழந்தையை இவர் காலடியில் போட்டு வேண்டிக்கிட்டா, அந்தக் குழந்தையின் நோய் அடியோடு காணாம போயிடும். பூரண ஆரோக்கியத்தோடு அந்தக் குழந்தை சிரிச்சு விளையாட ஆரம்பிச்சிடும்!'' என்று பூரிப்பும் நிறைவுமாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீபூர்ண- ஸ்ரீபுஷ்கலையுடன் ஸ்ரீஐயனார் கல் விக்கிரகத் திருமேனியராகத் திருக்காட்சி தர, கையில் கதையும் அரிவாளுமாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் வீரனார் ஐயனார். மேலும் தூண்டில்காரன், மதுரை வீரன், அகோர வீரன், நொண்டி வீரன் ஆகியோர் சுதைச் சிற்பங்களாகத் தரிசனம் தருகின்றனர்.

ஆலயத்தில், கையில் குழந்தையுடன் ஸ்ரீவிசாலாட்சி அம்மன், சிரசு மட்டுமே கொண்ட தொட்டிச்சி அம்மன், கிழக்குப் பார்த்தபடி தரிசனம் தரும் ஸ்ரீகாலபைரவரின் சுதைச் சிற்பத் திருமேனி, ஐயனாரின் யானை வாகனம் என அழகுறத் திகழ்கிறது ஆலயம்.

இந்த ஆலயம் திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடை திறந்திருக்கும். மற்றபடி தீபாவளி, பொங்கல், சித்திரைப் பிறப்பு முதலான பண்டிகை நாட்களிலும் காலை 8 முதல் மாலை 4 மணி வரை நடை திறந்திருக்குமாம்.

ஆனால் என்ன... கோயில் நடை திறந்திருக்கிறதோ இல்லையோ... 'ஐயனாரப்பா... எங்களுக்கு நல்ல வழி

காட்டிட்டே!’ என்று சொல்லுகிற விதமாக, பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, கோயில் வாசலிலேயே பொங்கல் வைத்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

அதேபோல், அந்த வருடம் மழை நன்றாகப் பெய்யவேண்டும் என்றும், திருமணமாகிப் பல வருடங்களாகியும் பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லையே என்றும் ஏங்குவோர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து, ஐயனாரைத் தரிசித்து அவருக்குப் பொங்கல் படையலிடுகிறார்கள். பிறகு, அங்கிருக்கும் பக்தர்களுக்கு அதைப் பிரசாதமாக வழங்குகிறார்கள். இந்தப் படையல் மற்றும் அன்னதானத்தால், மழை தப்பாமல் பெய்யும்; பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவர் என்றும் சொல்கின்றனர் பக்தர்கள்.

சித்திரை மாதத்தில் வீரனார் ஐயனார் கோயிலில் நடைபெறும் எட்டு நாள் திருவிழா, சுற்று வட்டாரங்களில் பிரசித்தம். இந்த நாளில் தினமும் சிறப்பு பூஜை, அக்னிச் சட்டி எடுத்தல், பால் காவடி எடுத்தல், கிடா வெட்டுதல் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவது கண்கொள்ளாக் காட்சி. தங்கள் குறைகளை... வீடு- மனை சம்பந்தமான பிரச்னைகளை, பண மோசடி, நம்பிக்கை மோசடி போன்ற அவலங்களை வீரனார் ஐயனாரிடம் வந்து முறையிட்டால் போதும்... வீட்டுப் பிரச்னைகள் விரைவில் தீரும்; கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விவசாயிகள் சிலர், ஐயனார் கோயில் விபூதிப் பிரசாதத்தை எடுத்துச் சென்று தங்கள் நிலத்தில் தூவிவிட்டுப் பின்பு விதைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

- ஆர்.கே.மயூரி

படங்கள்: ஜெ.ராம்குமார்