'பல காலமாகத் தம் அறையிலேயே உணவருந்தி வந்த சுவாமிஜி, அன்று குருபாயிக்களுடனும் மற்ற சீடர்களுடனும் சேர்ந்து உணவருந்தினார். அதன்பின், தமது சீடர்களுடன் சற்றே உரையாடிவிட்டு, மடத்து நூல் நிலையத்திலிருந்து கொண்டு வந்திருந்த சுக்ல யஜுர் வேதத்தின் ஒரு பகுதியைப் படிக்கும்படி கூறினார். இடையிடையே சில பகுதிகளுக்கு விளக்கங்கள் அளித்தார். பிற்பகல் 1 மணி அளவில் எல்லா பிரம்மசாரிகளுக்கும் வடமொழி இலக்கண வகுப்பு எடுத்தார். மடத்தில் வேதங்களைப் படிப்பதற்காக ஒரு கல்லூரி தொடங்கவேண்டும் என்ற தமது விருப்பத்தைக் கூறினார். மாலையில் இரண்டு மணி நேரம் நடைப்பயிற்சி! இரவு பூஜை முடிந்தவுடன், தமது அறையில் ஒரு மணி நேரம் தியானம்! பின்னர், தரையில் விரித்திருந்த படுக்கையில் கால்களை நீட்டிப் படுத்தார். அவரது கைகள் நடுங்குவதை அருகிலிருந்த சீடர்கள் கண்டனர். பின்னர், இருமுறை ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். அதுவே சுவாமிஜிக்கு நிறைவாயிற்று!’

ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடான 'விவேகானந்த சரித்திர’த்தில் விவரிக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் முக்தி நாளைப் படிக்கும்போது உடம்பு சிலிர்க்கிறது; நெஞ்சு நெகிழ்கிறது! வேதங்களை சுவாமி விவேகானந்தர் எவ்வளவு உயர்வாக மதித்தார், எவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. அதிலும், அவரது இறுதிநாளின் போது அவர் விரும்பிப் படித்தது 'சுக்ல யஜுர் வேதம்’ என்றறியும் போது, அந்த வேதத்தை அவர் எவ்வளவு மகத்தானதாக மதித்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

அத்தகைய பெருமை வாய்ந்த சுக்ல யஜுர் வேதத்தை உலகுக்கு அளித்த மகரிஷி யாக்ஞவல்கியர்.

இந்து சமயத்தின் சிந்தனைகளும் தத்துவங்களும், தர்மநெறிகளும் ஒழுக்கங்களும், நாம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சம்ஸ்காரங்களும், வேதகாலத்தில் இருந்த முனிவர்களும் ரிஷிகளும் தங்களின் தவத்தாலும் ஞான திருஷ்டியாலும் கண்டுணர்ந்து உபதேசங்களாக உரைக்கப்பட்டவைதாம்.

அப்படி உரைக்கப்பட்ட உபதேசங்களில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் சுக்ல யஜுர் வேதத்தை, யோகீஸ்வரர் என்றழைக்கப்பட்ட மகரிஷி யாக்ஞவல்கியர்தான் யாத்தருளினார்.

வேதவியாசரைவிடவும் யாக்ஞவல்கியர் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். வேதங்களில் உரைக்கப்பட்ட யாக்ஞவல்கியரின் தத்துவங்களுக்கு வேதவியாசர் விளக்கங்கள் அளித்துள்ளார். அவற்றில் பிருஹதாரண்யக உபநிஷத் மிக உத்தமமானதாகும். அந்தப் பழைமையான உபநிஷத்தையும், ஈசாவாஸ்ய உபநிஷத்தையும் மற்றும் ஏராளமான வேத கர்மாக்களுக்கான மந்திர உபதேசங்களையும் உள்ளடக்கிய சுக்ல யஜுர் வேதத்தைக் கண்டுணர்த்தியவர் யாக்ஞவல்கிய முனிவர்தான் என்பதை அறியும்போது, இந்து மதத்தின் வேரான உபநிஷத்துகளையும் வேதங்களையும் மக்களுக்குக் கொண்டுசென்ற இந்த முனிபுங்கவர் எத்தனைப் பெரிய ஆற்றல் மிக்கவர் என்பதைக் கண்டுகொள்ளமுடிகிறது.

பாரத நாட்டின் வடக்குப் பகுதியில் இருந்த சமத்காரபுரம் என்னும் நகரில் வாழ்ந்து வந்த அந்தண தம்பதிக்கு, இறையருளால் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமந் நாராயணன் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது, அவரது நாபிக்கமலத்தில் அக்கரு உருவானதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. அந்தக் குழந்தைக்குப் பெற்றோர் இட்ட பெயர் 'பிரம்மரதன்’. உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட்டு, முறையாக குழந்தைக்கு வேதங்கள் கற்பிக்கப்பட்டன. வேத சாஸ்திரங்களில் சிறந்தவனான் குழந்தை. அவனை 'தேவரதன்’ என்றும், 'வாஜசானி’ என்றும் கல்வியில் சிறந்த பெரியோர்கள் உயர்வாக அழைத்தனர்.

அருகில் இருந்த நகரமான வர்த்தமானபுரத்தில், சகலர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவருக்கு சுனந்தா என்ற புதல்வியும், வைசம்பாயனர் என்ற புதல்வனும் இருந்தனர். வைசம்பாயனரும் வேதங்களில் சிறந்தவராகத் திகழ்ந்தார். அவர் 'சகல்யர்’ என்று அழைக்கப்பட்டார்.

சரஸ்வதியின் அம்சமான சுனந்தாவை பிரம்மரதன் மணந்துகொண்டார். பல காலம் ஆகியும் இவர்களுக்குப் புத்திர பாக்கியம் அமையவில்லை. எனவே, ஸ்ரீமந் நாராயணனை மனதில் தியானித்து தவம் செய்தார் பிரம்மரதன். நாராயணன் அவர்முன் தோன்றி, கேட்ட வரம் தர மனம் இரங்க, 'எல்லாக் கலைகளிலும் வல்லவனாகவும், மிகச் சிறந்த ஞானம் படைத்தவனாகவும், நற்குணங்கள் கொண்டவனாகவும் ஒரு பிள்ளை பிறக்க அருள் புரியவேண்டும்’ என்று பிரம்மரதன் கேட்க, நாராயணன் தானே வந்து அவதரிப்பதாக வரம் தந்து மறைந்தார்.

நாளடைவில் சுனந்தாதேவி கர்ப்பம் தரித்தாள். ஆனால், பிரசவம் ஆகவில்லை. உரிய காலத்தையும் தாண்டி நாள்கள் பல கடந்து, மாதங்கள் கழிந்து, வருடங்களும் ஆயின. பிரசவம் மட்டும் நிகழவே இல்லை. கர்ப்பத்துள் இருக்கும் சிசுவிடமே காரணம் கேட்க, 'ஸ்ரீமந் நாராயணனின் அனுக்கிரகம் கிட்டினால் மட்டுமே நான் அவதரிப்பேன்’ என்று குரல் கேட்டது. பிரம்மரதன் இது குறித்து

மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்து வேண்ட, ஐந்து ஆண்டு கர்ப்பவாசத்துக்குப் பின்பு மகாவிஷ்ணுவின் அருளால் குழந்தை நல்லபடியாகப் பிறந்தது.

சதபிஷா நட்சத்திரமும் தனுர் லக்னமும் கூடிய சுப நாளில் ஸ்ரீமந் நாராயணன் அவதரித்தார். இதுவே யாக்ஞவல்கியரின் அவதார தினம்!

அன்று மரங்கள் பூத்துக் குலுங்கின. சுனைகளிலிருந்து வரும் நீர் சுவை மிகுந்ததாக இனித்தது. பூமியெங்கும் ஒரு சந்தோஷ சூழல் நிலவியது. பின்னாளில் தன்னிடமே வேதம் கற்கப்போகும் ஒரு சத்புத்திரன் அவதரித்துவிட்டான் என்ற மகிழ்ச்சியினால், சூரிய பகவானும் தனது பிரகாசத்தை அதிகமாகவே பூமியின்மீது பொழிந்தார்.

பெரியோர்கள் அந்தக் குழந்தைக்கு 'ஸானந்தர்’ என்று பெயரிட்டனர். மகரிஷிகள் மகிழ்ந்து 'யாக்ஞவல்கியர்’ என்று அழைத்தனர். ஸ்ரீமந் நாராயணனின் அம்சமான அந்தக் குழந்தைக்குத் தகுந்த குருவைத் தேடினார் தந்தை பிரம்மரதர். பிருகஸ்பதியே சரியான குருவாக அமைவார் என்று நினைத்த மாத்திரத்தில், அவரே தோன்றினார். பிரம்மரதரின் வேண்டுகோளுக்கிணங்கி நான்கு வேதங்களையும், சகல கலைகளையும், சாஸ்திரங்களையும் குழந்தைக்குக் கற்பித்து, உபநயனமும் செய்துவைத்தார்.

பின்னர், விருத்த வியாசரிடம் வேதாத்யயனம் செய்துகொண்டார் யாக்ஞவல்கியர். ரிக் வேதத்தையும், யஜுர் வேதத்தின் 59 பகுதிகளை கற்றுக்கொண்டார். வைசம்பாயனரிடமும் கற்றார். வேதத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கற்ற பின்பு, பதினைந்து பகுதிகள் மிஞ்சியிருந்தன. அவை சூரிய பகவானுக்கு மட்டுமே தெரியும் என்பதால், யாக்ஞவல்கியர் காயத்ரி தேவியை உபாசனை செய்து தவமிருந்தார். காயத்ரிதேவி, சூரிய பகவான் மூலம் மீதமுள்ள பகுதிகளையும் கற்றுக்கொள்ள வழிசெய்து உதவினாள்.

கடுமையான சோதனைகளுக்குப் பின்பு, யாக்ஞவல்கியரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்ட சூரிய பகவான், தன்னைத் தவிர வேறு எவருமே அறியாத யஜுர் வேதத்தின் சில பகுதிகளைக் கற்றுக் கொடுத்தார். இப்படிக் கற்ற வேதத்தை மந்த்ரபாகம், ப்ராம்ஹண பாகம் என முறைப்படி பாகுபாடு செய்து, யாக்ஞவல்கியர் பிரித்து வைத்தார். இப்படி அவரால் உபதேசிக்கப்பட்ட யஜுர்வேதம் 'சுக்ல யஜுர் வேதம்’ என வழங்கப்படலாயிற்று.

சூரியனிடமிருந்து பெற்ற சுக்ல யஜுர் வேதத்தைப் பரப்பும் நோக்குடன், கோதவரிக் கரையில் ஆஸ்ரமம் அமைத்து தன் பணிகளைத் தொடர்ந்தார் யாக்ஞவல்கியர். கொஞ்சம் கொஞ்சமாக சீடர்களின் எண்ணிக்கை பெருகி, அந்த இடமே 'யாக்ஞவல்கியபுரம்’ என்பதாக வளரலாயிற்று. யாக்ஞவல்கியரின் சீடர்களில் கண்வர், மாத்யந்தினர், ஜாபாலி, பௌதிசபேயர், காலவர், மார்க்கண்டேயர் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். குரு கற்றுத் தந்த பதினைந்து சாகைகளுக்கும் சீடர்கள் விளக்கவுரை எழுதினர். அவை வாஜசநேய, மத்யாந்தின, கண்வ என அந்தந்த சீடர்களின் பெயர்களாலேயே வழங்கப்படலாயின.

பின்னர், யாக்ஞவல்கியர் ஆச்வலாயனர் என்ற ரிஷியின் புத்திரியையும், பிரம்மதேவரின் மானஸ கன்னிகையான கார்கியையும் மணந்து, புத்திரப் பேறுகள் அடைந்து, ஆஸ்ரமம் அமைத்து, மேலும் பல சீடர்களுக்கு சுக்ல யஜுர் வேதத்தை உபதேசித்து வரலானார்.

வைசம்பாயனரிடம் கல்வி பயின்ற காலத்தில், அவர் ஒருநாள் தமது சீடர்களை அழைத்து, 'நாம் அனைவரும் சற்றும் பயமின்றி யாகங்கள் செய்யவும், சுகமாக யக்ஞங்கள் புரியவும், மிதிலா நகரை ஆண்டு வரும் ஜனக மகாராஜாவே காரணம். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் அவரது அரண்மனைக்குச் சென்று, மந்திராட்சதை தந்து, அவரை ஆசீர்வதித்து வரவேண்டும்'' என்று ஆணையிட்டார். அதன்படியே, அனைத்து சீடர்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராகச் சென்று, ஜனக மகாராஜாவை ஆசீர்வதித்துவிட்டுத் திரும்பினர். யாக்ஞவல்கியரின் முறை வந்தது. அவரும் அரண்மனை சென்றார். ஆனால், அரசன் அங்கு இல்லாமல் போகவே, கோபத்தில் மந்திராட்சதையை மண்டபத்தில் இறைத்துவிட்டு வந்துவிட்டார்.

ஜனக மகாராஜா திரும்பி வந்தபோது, அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. யாக்ஞவல்கியரின் ஸ்பரிசம் பெற்ற அட்சதை விழுந்த இடங்களெல்லாம் பூத்துக் குலுங்கியிருந்தன. புஷ்பவனமாகத் திகழ்ந்த அந்தச் சூழல் ராஜாவின் மனத்துக்குக் குதூகலத்தை அளித்தது. யாக்ஞவல்கியரின் மீது அவருக்கு அலாதியான பற்று எழுந்தது. 'இனிமேல் அனுதினமும் அவரே வந்து, எனக்கு மந்திராட்சதை செய்வித்து ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று ஜனகமகாராஜா தமது விருப்பத்தை வைசம்பாயனரிடம் தெரிவிக்க, அவரும் அவ்வண்ணமே தனது சீடரையும் கேட்டுக்கொண்டார். ஆனால், முதலில் செய்த ஏற்பாட்டின்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சீடருக்கும் வாய்ப்பளிப்பதுதான் முறை என்று எடுத்துச் சொல்லி, இப்படி தான் சொல்வதால் குருவின் வார்த்தையை மீறியதாக எண்ணக்கூடாது என்றும் பணிவோடு எடுத்துரைத்து, சக சீடர்களுக்கும் சம வாய்ப்பளித்தார் யாக்ஞவல்கியர்.

இவர் பிற்காலத்தில் மிதிலாபுரிக்குச் சென்று, ஜனக மகாராஜாவுக்கு பிரம்மவித்தையைப் போதித்தார். அப்போது, ஜனக்புரி ஆஸ்ரமத்தை நிர்வகித்து வந்தவர் 'கண்வர்’ என்ற முனிவர். இவர் பின்னர் சகுந்தலையின் வளர்ப்புத் தந்தையாகவும் ஆனார். இந்த முனிவரை யாக்ஞவல்கியர் தனது பிரதம சீடராக சேர்த்துக் கொண்டார்.

யாக்ஞவல்கியர் இல்லறத்தில் இருந்து கொண்டே, தமது சீடர்களுக்கு சுக்ல யஜுர் வேதத்தையும், மற்ற வேதங்களையும் கற்றுக்கொடுத்தார். அத்துடன், 'யாக்ஞவல்கிய ஸ்ம்ருதி’ என்ற நூலையும் தொகுத்தார். இந்த நூல்தான் இன்றைக்கு வழங்கப்படும் இந்துச் சட்டம், நீதிமன்றச் செயல்பாடுகள், சட்ட நிர்வாகம், உடலமைப்பு பற்றிய அறிவியல் போன்றவற்றை விவரிப்பதில் ஆதி நூலாகத் திகழ்கிறது.

இவை பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசிய கௌடில்யரின் 'அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலும் இதற்குக் காலத்தால் பிற்பட்டதுதான். ஆகவே, இன்றைய அரசியல் சட்டத்துக்கு ஆதாரமாகத் திகழ்வது யாக்ஞவல்கியரின் உபதேசங்களும் தத்துவங்களும்தான் என்றால், அது மறுக்கமுடியாத உண்மை!

எல்லாவற்றுக்கும் மேலாக... ஜனக மகாராஜாவின் அரண்மனையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று, யாக்ஞவல்கியரின் பெருமையைத் தெளிவாகத் தெரிவிக்கும்படி அமைந்திருக்கிறது.

- அடுத்த இதழிலும் தரிசிப்போம்...