சிம்மராசியின் அதிபதி சூரியன். அவன் கிரக நாயகன், ஆத்ம காரகன், ஒளிப்பிழம்பு, உலகத்தின் ஒளிவிளக்கு. சந்திரன் உட்பட அத்தனை கிரகங்களுக்கும் ஒளியின் வழியாக உயிரூட்டுபவன். வறட்சிக்கும், மழைக்கும் அவனே காரணம். உலகின் இயக்கம் அவன் வசம். அவனது தோற்றத்தால், உயிரினங்கள் உணர்வு பெற்று எழுகின்றன; செயல்படுகின்றன. அவன் மறையும்போது அவை அத்தனையும் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றன.

'முத்தொழிலிலும் சூரியன் தென்படுவதால், பரம்பொருளின் மறுவடிவ மாகத் திகழ்கிறான்’ என்று புராணம் கூறும் (விரிஞ்சி நாராயண சங்கராத்மனே). ஸ்திர ராசி. செடி-கொடிகளும், மரங்களும் நிறைந்த ஆரண்யக ராசி. இதன் வடிவம் சிங்கம். இது, விலங்கினத்தின் அரசன்; சூரியன் கிரகங்களின் அரசன்.

பிடரி மயிர் சூழ்ந்த பரந்த முகம், கம்பீர நடை சிங்கத்துக்கு உரியது. அது, குகையில் இளைப்பாறும். எழுந்ததும் குகைக்கு வெளியே வந்து சோம்பல் முறித்துப் பசியாற்ற, அதன் கண்கள் இரையைத் தேடும். தொலைவில் தென்படும் மான் கண்ணில் படும். சிங்கத்தின் கண்களை சந்தித்த மான் நகர முடியாமல் துவண்டுவிடும். எளிதாக உணவு எட்டிவிடும். உண்ட மிச்சத்தை விட்டுவிட்டுக் குகைக்கு திரும்பிவிடும். இது சிங்கத்தின் இயல்பு. அளவுக்கு அதிகமான ஆசை இல்லை. சேமிக்கும் எண்ணம் இல்லை. தேவைக்கு அதிகமானதைப் பிறருக்கு அளிப்பதிலும் தயக்கம் இல்லை.

பசித்தாலும் புல்லைத் தின்னாது. உணவுக் கட்டுப்பாடு உண்டு. உருவத்தில் பெரிதான யானையை வீரத்தால் அடக்கிவிடும். காட்டு எல்லையைத் தாண்டி நாட்டுக்குள் வராது. எதிர்ப்பைச் சந்திக்காத வாழ்க்கை. காடே அதன் வீடு. அத்தனை விலங்கினங்களும் அதன் வசம். பயமோ, பரபரப்போ தோன்றாத மனம். இவை அத்தனையும் சிம்ம ராசியில் பிறந்தவர்களிடம்

தென்படலாம் என்கிறது ஜோதிடம். சுயமரியாதைக்கு முதலிடம். குள்ளநரி வேஷம் இருக்காது. பிறர் பாணியைப் பின்பற்றும் எண்ணம் உதயம் ஆகாது. சிறந்த உணவில் திருப்தி இருக்கும். தேவையில்லாமல் பிறரைச் சீண்டித் துன்புறுத்தும் எண்ணம் இருக்காது. திறந்த புத்தகமான சிறந்த வாழ்க்கை. பதவி இவனைத் தேடி வர வேண்டும். சேவையில் தேவையைப் பூர்த்தி செய்யப் பிடிக்காது. பசியைத் தாங்கிக்கொள்ள இயலும். துயரம் அவனைத் துவளச் செய்யாது. பொறுமையும் வீரமும் கம்பீரமும் அவனை

விட்டு விலகாது. சமுதாயத்தில் அந்தஸ்தும் அங்கீகாரமும் தேடிவரும். பதவி மெதப்பு அவனைப் பற்றாது. சூழலைப் புரிந்துகொண்டு நாகரிகமாகச் செயல்படும் பாங்கு உண்டு. ஆசையை நிறைவேற்ற தரம் தாழ்ந்த செயலில் இறங்கமாட்டான். உயிர் பிரிய நேர்ந்தாலும் மானத்தைக் காப்பான். விலங்கினங்களில் முதல்வனான சிங்கம் போன்று, இவன் மனிதரில் முதல்வனாகத் திகழ்வான் என்று, சிம்மத்தின் இயல்புகள் அந்த ராசியில் பிறந்தவனிடமும் தென்பட வாய்ப்பு உண்டு என ஜோதிடம் சுட்டிக்காட்டும். மற்ற விலங்கினங்களுடன் எப்போதும் போராட்டத்துடன் வாழ வேண் டிய கட்டாயம். உரிமையைப் பெற பிறரைத் துன்புறுத்த தயங்கமாட்டான். சுயநலம்

பாதிப்புக்கு உள்ளானால், சட்டத்தையும் மீறிச் செயல்பட்டு வெற்றிபெற முனைவான். எங்கும் எதிலும் தன்னை முன்னவனாகவும் சிறந்தவனா கவும் காட்டிக்கொள்ள முற்படுவான்.

யானைக்கும் அடிசறுக்கும். சிங்கமானது மானைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று துவண்டு போவதும் உண்டு. முதிர்ச்சி அடைந்து வலுவிழந்த நிலையில், நாயும் சீண்டிப் பார்க்கும். வலுவிழந்தால் சமுதாயம்

தனிமைப்படுத்தும், செல்வாக்கு செல்லாக் காசாகும். அன்றாட வாழ்க்கையே போராட்டத் தில் தத்தளிக்கும். தெரியாத விஷயங்களில் தெளிவு பெற்றவனாகக் காட்டிக்கொண்டு வயிற்றுப்பிழைப்பை நிலைக்க வைப்பதில் பகீரத பிரயத்தனம் செய்யவேண்டிய கட்டாயத்

துக்குத் தள்ளப்படுவான். அவனது பெருமைகள் விலைபோகாது. அவனது உரைகளைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். எதிலும் தோல்வி, எங்கும் போராட்டம் என்ற நிலையும்

அவனை வாட்டும். அதிலிருந்து விடுபட ஈடுபடும் முயற்சிகள் வலுவாக இருந்தாலும், இவனுக்கு பலனளிக்காதவாறு மாறிவிடும். சமுதாய அங்கீகாரமும் ஏட்டுச் சுரைக்காயாக மாறிவிடும். இப்படியும் இந்த ராசிக்காரர்களில் அனுபவம் இருக்கும். குருவும் செவ்வாயும் வலுவிழந்தால், இதுபோன்ற விபரீத விளைவுகளைச் சந்திக்க வைக்கும் என்கிறது ஜோதிடம்.

ராசிபுருஷனின் 5-வது இடம் சிம்மம்.அதன் ஐந்து தனுசு (அதாவது, ராசிபுருஷனின் 9-வது இடம் தனுசு); குருவின் ஆதிக்கம். குருவும் சிஷ்யனும் த்ரிகோண ராசியில் இணைந்திருப்பதால், சூரியனுக்குப் பெருமை சேர்ந்துவிட்டது. ராசிநாதனுக்கு மேஷத்தில் உச்சம் பெறும் தகுதி உண்டு. அது ஐந்தின் ஐந்து, அது பூர்வபுண்ய பாக்கியத்தின் அளவை சுட்டிக்காட்டும். உச்சம் பெற்ற மேஷ ராசி, குருவின் த்ரிகோண ராசியாக இருப்பது. குருவின் அருள் குறையாமல் கிட்டிவிடும். பொருளாதாரம், ஆரோக்கியம் (ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்), வாழ்வில் தன்னிறைவை எட்ட இயலும்.

4-வது கேந்திரத்துக்கும், 9-வது த்ரிகோணத் துக்கும் அதிபதியான செவ்வாய் யோககாரக னாக மாறி, தருணம் வரும் வேளையில் நன்மை களை உணரவைத்து மகிழ்விப்பான். எந்த கிரகத்துக்கும் இங்கு உச்சமோ நீசமோ இருக்காது.

அதன் தாக்கத்தின் இழப்பு, ராசிநாதனின் ஆளுமையை உயர்த்திக்காட்டும். சுதந்திரமாக செயல்பட வைக்கும். கிரக நாயகன் சுதந்திரமாக இருப்பதும் சிறப்பு. ஆத்மகாரகன் பாக்கியத்தில் உச்சம் பெறுவதால், தன்னம்பிக்கையை வலுப்படுத்தி செயல்பாட்டில் சுணக்கம் இல்லாமல் வீறுநடை போட்டு வெற்றிபெறச் செய்வான். யோககாரகனான செவ்வாயும் (ரஜோ குணம்) சுறுசுறுப்பு, உற்சாகம் ஆகிய

வற்றை இணைத்துப் பரிமளிக்கச் செய்யும். பூர்வபுண்ய ஸ்தானாதிபதி குருவருளும் முழுமையாக இருக்கும்போது, வாழ்விலும் சமுதாயத்திலும் பெயர்பெற்று விளங்கவைக்கும். போதுமான அளவு வாழ்வை சுவைக்க இயலா மல் போனாலும், மக்கள் மனதில் இடம்பிடித்து சிரஞ்ஜீவியாகத் திகழ வாய்ப்பு உண்டு.

ராசிபுருஷனின் 4-வது கேந்திரத்துடனும் 5-வது த்ரிகோணத்துடனும் இணையும் சந்திப்பு (கடக - சிம்ம ராசி), ராசியின் நுழை வாயில். ஆன்மகாரகனும் மனதுக்குக் காரகனும் நுழைவாயிலில் தென்படுவர். ஐந்து அறிவு புலன்கள், ஐந்து செயல் புலன்கள் உடம்பில் ஒட்டிக்கொண்டு முழுத் தகுதியோடு

விளங்கினாலும், அவர்கள் இருவரின் தொடர்பு இல்லாமல் இயங்க இயலாது (ஆன்மா மனஸா ஸம்யுஜ்யதெ மன இந்திரியேண...). உடலின் ஒட்டுமொத்தமான இயக்கத்துக்கு அவ்விருவரின்

பங்கு வேண்டும். அவர்கள் இணைந்து செயல்பட, அடுத்தடுத்த ராசியில் இடம்பெற்று இருக்கிறார்கள். அமாவாசையில் இருவரும் ஒன்றிவிடுவார்கள். பௌர்ணமியில் விலகி இருந்தாலும், சூரிய கிரணத்தின் பாய்ச்சலில் வலுப்பெற்று சந்திரன் விளங்குவான். ஆக, அருகில் இருந்தாலும் எட்டி இருந்தாலும் இருவரின் தொடர்பு முறியாமல் இருக்கும். ஐந்து தாராக்ரஹங்கள், இவ்விருவரிலும் இணைந்து செயல்படும் திறமையை வளர்த்துக்கொள்கின்றன.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் பின்னால் இருக்கும் ராசிகளில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய ஐவரும் வரிசைக் கிரமமாக இணைந்திருப்பது பொருள் படைத்தது. சூரியனும் சந்திரனும் பலமிழந் தால், ஐவரின் பலம் சரிந்துவிடும். சூரியனோடும் சந்திரனோடும் இணைந்த ஐந்து கிரகங்கள், இடமாகவும் வலமாகவும் ஒன்றுசேரும்போது, ராசி சக்கர வடிவில் தென்படுகிறது.

சந்திரன் சர ராசி, ஜல ராசி- தேய்ந்தும் வளர்ந்தும் இருப்பவன். சூரியன் ஸ்திர ராசி, ஸ்தல ராசி- என்றும் தேய்மானம் தொடாமல் ஒளிப்பிழம்பாக மிளிர்பவன். பரம்பொருளை ஒளிப்பிழம்பாக அடையாளம் காட்டும் வேதம். அதை பூர்ணம்- நிறைவு என்றும்

சுட்டிக்காட்டும். ஆன்மா நிறைவை எட்டியவன், ஒளிமயமானவன் (த்யேய:

ஸதாஸவித்ரு...). ஜலத்திலும் ஸ்தலத்திலும் வாழும் உயிரினங்கள் அத்தனையும் இவ்விருவரின் இணைப்பில் (வெட்ப- தட்பம்) பரிணாம வளர்ச்சிபெற்றுப் பரிமளிக்கும். ஆறு பருவகாலங்களைத் தோற்றுவிப்பதில் சந்திரனுக்கு (தட்பம்) பங்கு உண்டு என்கிறது வேதம் (சந்திரமா:ஷட்ஹோதா ஸரிதூன் கல்பயாதி). ஆன்மாவும் ஒன்று. மனமும்

அப்படியே. ஆகையால் இருவருக்கும் ராசி சக்கரத்தில் ஒரு வீடுதான் இருக்கும். இந்திரியங்கள் இரண்டிரண்டாக இருப்பதால், அவற்றுக்கு அதாவது தாரா க்ரஹங்களுக்கு இரு வீடுகள் பொருந்தும். இந்த ஐவர் இருவரில் இணைந்தாலும்... இரண்டு கண்கள் ஒரு பார்வை, இரண்டு காதுகள் ஒரு கேள்வி, இரண்டு பாதங்கள் ஒரு நடை, இரண்டு ராசிகள் ஒரு பலன்தான் இருக்கும். பலம் பெறுவதற்கு ஆன்ம காரகனோடு (சூரியன்) இணைப்பு. பயனை உருவாக்க மனத்துடன் (சந்திரனுடன்) இணைப்பு கட்டாயம் தேவைப்படுகிறது.

மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் 9 நவாம்சகங்களில் பரவியிருக்கும். முதல் நான்கு நவாம்சகங்களில் கேதுவும், அடுத்த நான்கு நவாம்சகங்களில் சுக்கிரனும், கடைசி நவாம்சகத்தில் சூரியனும் தனது தசாகாலங்களை நடைமுறைப்படுத்துவர். இந்த மூவரும் இளமையின் மையப் பகுதி வரையிலும் ஏற்படும் பரிணாம வளர்ச்சிக்கு ஒத்துழைப்பவர்கள். 3-க்கும், 10-க்கும் உடைய சுக்கிரன் பாராமுகமாக மாறுவதால், சிறுவயதில் பாலாரிஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். சுக்ர தசை- சுக்ர புக்தி முடிந்தவுடன் செழிப்பான, வளமான வளர்ச்சியை அளிப்பான். சூரியன் இளமையில் பெருமையையும், பலத்தையும், தன்னம்பிக்கை யையும் தந்து சொந்தக்காலில் நிற்கும் தகுதியையும் அளிப்பான். அதன் செழிப்பு முதுமையைப் பயனுள்ளதாக்கிவிடும். பலம் குன்றிய சுக்கிரனும் சூரியனும் இன்னல்களில் சிக்கித் தவித்து வெளிவரச் செய்து, உயர்வை எட்டவைப்பார்கள்.

மனித உடல் போன்ற உருவ அமைப்பு ராசி சக்கரத்துக்கு உண்டு. உலகத்தின் உடம்பு ராசிச் சக்கரம் எனலாம். சுவையை அறிந்து சுவைக்கவும், செயலை அறிந்து செயல்படவும் தாரா க்ரஹங்களின் திறமை அவசியம் வேண்டும். புலன்கள் செயல்படாத ஆன்மாவும், மனசும் இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும். அதேபோன்று ஆன்மாவும் மனசும் இணையாத புலன்களும் வெற்றுவேட்டு! இந்த இணைப்புதான் ராசிச் சக்கரத்தின் உயிர். ஜோதிடம் உண்மை; அதற்குச் சான்று சூரியனும் சந்திரனும் என்று வரையறுக்கும் (ப்ரத்யக்ஷம் ஜோதிடம் சாஸ்திரம் சந்திராக்கௌ யத்ர ஸாக்ஷிணௌ). உலகின் கால அளவுக்கு அளவுகோலான இந்த இருவரும், நமது கால அளவில் தென்படும் மாற்றத்துக்கும் அளவுகோலாக செயல்படுவதில், பொருத்தம் உண்டு.

தனுசிலும் மேஷத்திலும் இருக்கும் நவாம்சகங் களில் இதே தசா வரிசைகள் தென்படும். நட்சத்திர மாறுதலில் தென்படும் தகுதியோடு இணைந்து பலத்தில் மாற்றம் இருந்தாலும், அடிப்படை தசைகளில் ஒற்றுமை இருக்கும். அதற்கு ராசிநாதனின் மாற்றம், பலன் மாற்றத் துக்குக் காரணமாக மாறிவிடும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் பின் ராசிகளின் கிரக வரிசைகள் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உகந்த வகையில் அமைந்திருக்கும். புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி... கல்வி வாயிலாக புத்தி வளர்ந்து, பொருளாதாரத்தில் செழிப்புற்று, முதுமையில் தெளிவை எட்டி, கடைசியில் பூத உடலைத் துறந்து, பரம்பொருளோடு இணைவதை வரிசைக்கிரமம் சுட்டிக் காட்டும்.

தெளிவுக்கு குருவும், ஆயுளை முடிவுக்குக் கொண்டு வர சனியும் கடைசியில் வருவதைக் கவனிக்க வேண்டும். உயிர் துறக்கும் வேளை வந்துவிட்டால், தாரகக்கிரஹம் செயல்படாமல் இருந்தாலும் சனி விழித்துக்கொண்டு சடுதியில் செயல்பட்டு உயிரைப் பறித்துவிடுவான் என்ற விளக்கம் ஜோதிடத்தில் உண்டு (நிஹந்தா பாபக்ருத் சனி:). கடவுள் அல்லது இயற்கை அளித்த முழு ஆயுளையும் பெற்று வாழும் தகுதியை (வயதை) நிர்ணயம் செய்ய, கிரகங்கள் தங்களின் வரிசையை பரிணாம வளர்ச்சிக்கு உகந்தபடி அமைத்துக்கொண்டிருக்கின்றன. கிரகங்கள் நம்மை அனுக்ரஹம் செய்கின்றன; நிக்ரஹம் செய்யவில்லை.

'ஸும் ஸ¨ர்யாய நம:’ என்று சூரியனை வணங்க வேண்டும். 5-க்கு உடைய குருவும், பூர்வ புண்யத்தை வரையறுப்பதால் வணக்கத் துக்கு உரியவர். அதுபோன்று யோககாரகனான செவ்வாயும் வாழ்க்கை வளத்தை பெருக்குவதால் வழிபட வேண்டியவர் ஆகிறார். 'கும் குரவே நம; கும் குஜாய நம:’ என்று பணிவிடையில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

செயல்பட உற்சாகம் வேண்டும்; செயலில் ஈடுபாடு இருக்க வேண்டும்; தன்னம்பிக்கையும் வேண்டும். அப்போது வெற்றி நிச்சயம். இவற்றை இந்த மூவரும் முழுமையாக அளிப் பவர்கள். இகலோக சுகத்தையும், ஆன்மிக ஆனந்தத்தையும் ஈட்டித் தருவதில் இந்த மூவரின் பங்கு வேண்டும்.

உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் கிரகங்களின் வழிபாடு, இன்ப மயமான வாழ்க்கையை உறுதி செய்யும். தவறான விளக்கங்களில் மதிமயங்கி திசை திரும்பினால், மகிழ்ச்சியை இழந்து தவிக்க நேரிடும்.

- வழிபடுவோம்...