Published:Updated:

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்

Published:Updated:

ப்போது நாம் டாங்பா நகரில் இருந்து ஹோர்சு என்னும் இடத்துக்குப் பயணிக்கிறோம். சுமார் 350 கி.மீ. பயணித்தால் ஹோர்சுவை அடையலாம். உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளுள் ஒன்றான மானசரோவர் ஏரிக்கரையில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்குள்ள காவல் தெய்வத்தை வணங்கிவிட்டு, சிறிது தொலைவு பயணித்தால் பிரமாண்ட மானசரோவரை அடையலாம். 110 கி.மீ. சுற்றளவு, 300 அடி ஆழம், கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரம் என்று, நம்மை வியக்க வைக்கும் மானசரோவரின் தண்ணீர், பளிங்கு போல் அத்தனை சுத்தம்! இதில் நீராடுவது பெரும் புண்ணியம்.

பனிமுடி தரிசனம்

படத்தை க்ளிக் செய்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்னை பார்வதிதேவியின் அம்சமாக போற்றப்படும் மானசரோவர் ஏரி, வருடத்தில் 7 மாதங்கள் (அக்டோபர் முதல் ஏப்ரல் வரை) உறைபனியாக இருக்கும். மற்ற மாதங்களில்தான் இதில் நீராட முடியும். அதுவும், குளிர் மிகமிக அதிகம் இருக்கும்.

பிரம்மமுகூர்த்தம் என்கிற அதிகாலை வேளையில் இங்கே உலக மகா அதிசயம் ஒன்று தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அப்போது, வானுலகில் உள்ள தேவர்கள் கீழிறங்கி மானசரோவர் ஏரியில் நீராடி கயிலைமலையானை தரிசிப்பதாக நம்பிக்கை. அந்த நேரத்தில் தங்கப் பிழம்பாய் கிளம்பும் பேரொளி நம்மை அதிசயிக்க வைக்கிறது. இன்னொரு அதிசய தகவல்... அதிகாலை 2.30 மணிக்கெல்லாம் இங்கே பொழுது விடிந்துவிடும்!

மானசரோவரில் புனித நீராடும் பக்தர்கள், அந்த ஏரிக்கரையில் கிடைக்கும் கற்களை லிங்கமாகக் கருதி பூஜிப்பதுடன், தங்கள் இல்லத்தில் வைத்து பூஜிக்கவும் எடுத்துச் செல்கிறார்கள். மானசரோவரின் கரையில் நிற்கும்போதே கயிலை மலையானின் தென்முக

தரிசனம் கிடைக்கிறது. அன்னையின் மடியில் (மானசரோவரின் கரையில்) இருந்தபடி தந்தையை தரிசிப்பது என்பது எத்தகைய கொடுப்பினை!

(ஆன்மிக ஆல்பம் புரட்டுவோம்...)