Published:Updated:

மந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்!

மந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்!

மந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்!

மந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்!

Published:Updated:
மந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்!
##~##

'எவர் ஒருவர், இறைவனைத் தேரில் தரிசனம் செய்து மனமுருகி வேண்டுகிறாரோ, அவருக்கு மறுபிறப்பு என்று ஏதுமில்லை’ என்கிறது வேதம். அதனால்தான், கோயில்களில் உள்ள மூலவருக்குத் திருத்தேர் செய்து, திருவீதியுலா வைபவமெல்லாம் வைத்தார்கள் பெரியோர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேரும் அழகு; தேரில் பவனி வரும் இறைத் திருமேனியும் கொள்ளை அழகு! அந்த அழகைத் தரிசிக்க, தேவர்களும் முனிவர்களும் வந்துவிடுவார்களாம். அப்படி வருவதால், திருவீதியுலா நடைபெறும் அந்த ஊரே செழித்துவிடும் என்பது ஐதீகம்.

அதேபோல், நம் கண்ணெதிரே நடமாடிய மகான்களும் தெய்வத்துக்கு நிகரான வர்கள். அவர்களின் திருமேனிகளுக்குத் திருத் தேர் அமைப்பதும், அதில் அந்த மகானின் மூர்த்தம் வீதியுலா வருவதைத் தரிசிப்பதும் மகா புண்ணியம்!

கலியுகத்தின் கற்பகவிருட்சமாம் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் திருவுருவம் மந்த்ராலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்களில் வீதியுலா வருவதை 'ரதோத்ஸவ விழா’ என்று விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

மந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்!

மந்த்ராலயத்தின் பீடாதிபதிக்கு சமீபத்தில் ஒரு கனவு. கனவில் தோன்றிய ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்,

மந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்!

'நவரத்தினங்களால் ஆன ரதத்தைத் தயார் செய்யுங்கள்’ என அருளினார். மகான் அருளியதை பீடாதிபதி எடுத்துச் சொல்ல, அதனைத் தங்கள் கடமையாகக் கொண்டு, முழுமூச்சாக ரதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், ஹனுமந்தபுரம் பல்லலி சேவா அறக்கட்டளையைச் சேர்ந்த அன்பர்கள்

''கடந்த எட்டு வருடங்களாக, திருவையாறில் நடைபெறும் சங்கீத ஆராதனை விழாவைப் போலவே, மந்த்ராலயத்தில் சங்கீத ஆராதனை விழாவைச் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறோம். இதற்காக, சென்னையில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களை அழைத்து

வந்து, மந்த்ராலயத்தில் சங்கீத ஆராதனை விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இசையால் அந்த உன்னதமான மகானைப் பாடப் பாட... மனசே அமைதியாகிவிடும். வாத்திய இசையாலும் உள்ளம் உருக்கும் வரிகளாலும் மந்த்ராலயத்தில் நல்ல நல்ல அதிர்வலைகள் தோன்றுவதை உணரமுடியும். அதில் மகானின் ஆசீர்வாதமும் இரண்டறக் கலந்து, நமக்குள் தெளிவையும் அமைதியை யும் ஏற்படுத்தும்.  

கடந்த வருட விழாவின்போது, மந்த்ராலயத்தின் பீடாதிபதி அவர்கள் எங்களை அழைத்தார். ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் உத்தரவைத் தெரிவித்தார். அந்தப் பணியை நிறைவேற்றுகிற பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். இது அந்த மகானின் கட்டளை; தெய்வ சங்கல்பம்!'' என்று நெக்குருகிச் சொல் கின்றனர், அறக்கட்டளை அன்பர்கள்.  

அதையடுத்து, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்ரீராகவேந்திர மடங்களில், இசை

மந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்!

ஆராதனை விழாக்களை நடத்தத் துவங்கினார்கள். அதன் மூலம் அங்கே கிடைக்கும் தொகையைக் கொண்டு, நவ ரத்தினத் தேர் செய்யும் திருப்பணியில் ஈடுபடத் துவங்கினார்கள்.

''இப்படித்தான் சென்னை- விருகம்பாக்கத்தில் உள்ள மடத்தில் கச்சேரி நடைபெற்றது. கச்சேரி துவங்கி ஒரு மணி நேரமாகியும் ஒரு ரூபாய்கூட நன்கொடை கிடைக்கவே இல்லை. அதிர்ந்து, கலங்கி, துவண்டே போய்விட்டோம். மகான் ராகவேந்திர ஸ்வாமியை மனத்துள் பிரார்த்தித்தோம். அப்போது சுமார் 65 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் எழுந்து வந்து, தனது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி, 'நவரத்தினத் தேர்ப் பணிக்கு இதை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று மனமுவந்து கொடுத்தார். அதன் பிறகு, மளமளவென்று அந்த மடத்தில் கணிசமான நன்கொடை சேர்ந்துவிட்டது'' என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர்.

ஆறு லட்சம் நவரத்தினக் கற்கள், தங்கத் தகடுகள் என சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில், மிகப் பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது நவரத்தின ரதம். சுமார் 20 அடி உயரம் கொண்ட இந்தத் திருத்தேரின் மேல்பாகத்தில் ஸ்ரீராமர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீஉடுப்பி கிருஷ்ணர், ஸ்ரீசந்தான கோபாலன், ஸ்ரீலட்சுமி நாராயணர், ஸ்ரீவெங்கடேச பெருமாள், ஸ்ரீவைகுண்ட வாசுதேவர், ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் ஆகியோரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட உள்ளதாம். ரதத்தின் நடுவில் ஸ்ரீராகவேந்திரரின் திருவுருவம் பொறிக்கப்படும் எனப் பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர் அன்பர்கள்.

''மிகப் பெரிய தனியார் தொழில் நுட்ப நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் அதிக அளவு தொகையை நன்கொடையாகத் தருவதற்கு முன்வந்தன. 'இந்த நவரத்தினத் தேருக்கான தொகை எவ்வளவு? அதில் கால்வாசியை நாங்கள் தருகிறோம்; பாதிச் செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்’ என்று போட்டி போட்டுக்கொண்டு உதவுவதற்கு பலரும் முன்வந்தனர். ஆனால், இந்த நவரத்தின ரதத்துக்கான திருப்பணியில், ஸ்ரீராகவேந்திரரின் ஒவ்வொரு உண்மையான பக்தரின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறோம். அப்படிச் செய்கிற பங்களிப்பின் மூலம் குரு ராகவேந்திரரின் பரிபூரண ஆசீர்வாதம், அவரின் பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பது உறுதி!'' என்கிறார் அறக்கட்டளையைச் சேர்ந்த கிருஷ்ணன்.

குரு ஸ்ரீராகவேந்திரரின் திருவடிகளே சரணம்!

படங்கள்: வி.செந்தில்குமார்