புனலூர் தாத்தா
##~##

'வெங்கிடகிருஷ்ணய்யா குருசாமின்னு ஒருத்தர். சாஸ்தா தாசன்னு எல்லாரும் அவரைச் சொல்லுவாங்க. தட்சிணாமூர்த்தி சுவாமியும் பூபதி சுவாமியும் அவர் கூடவே மலைக்குப் போனாங்க. இவங்க மூணு பேர் மூலமா, அப்பாவும் சபரிமலைக்குப் போக ஆரம்பிச்சார். அதான், அப்பாவுக்கும் என் வாழ்க்கைக்குமான மிகப்பெரிய திருப்புமுனை. அந்தத் தரிசனம்தான், தீவிர ஐயப்ப பக்தரா அப்பாவை மாத்துச்சு. என்னையும் அப்படியே கொண்டுவந்து, ஸ்ரீஐயப்பனோட பாதாரவிந்தங்கள்ல சேர்த்துச்சு’ என்று பிரபல பாடகர் வீரமணி ராஜூ நெக்குருகிச் சொன்னதைக் கடந்த இதழில் எழுதியிருந்தேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வெங்கிட கிருஷ்ணய்யா குருசாமி, அதாவது சாஸ்தா தாசன் குருசாமி, இப்பவும் சென்னை அம்பத்தூர்லதான் இருக்கார். இன்னிவரைக்கும் தொடர்ந்து சபரிமலைக்குப் போய் தரிசனம் பண்ணிட்டிருக்கார். அவர்தான் என்னைப் போல பலரையும் மலைக்கு அழைச்சுட்டுப் போயிட்டிருக்கார்’ என்று ஐயப்ப பக்தர் விஸ்வநாதன் என்பவர் தகவல் தெரிவித்தார்.

புனலூர் தாத்தா

''1955-ஆம் வருஷம்தான் முதன்முதலா மலைக்குப் போக ஆரம்பிச்சேன். இப்ப எனக்கு 64 வயசு. அந்த ஐயப்பனோட கருணையாலயும் அருளாலயும், மிகப்பெரிய புண்ணியமா நான் நினைக்கறது ஒண்ணே

புனலூர் தாத்தா

ஒண்ணுதான்... 55- ஆம் வருஷம் துவங்கி, இந்த 2012 வரைக்கும் அதாவது 58 வருஷமா தொடர்ந்து சபரிமலைக்கு, மாலை போட்டு, விரதமிருந்து போயிருக்கேன். நடுவுல அதுஇதுன்னு எந்தவொரு சம்பவமும் நிகழாம, தொடர்ந்து சபரிமலைக்கு வரவைச்சது அந்த சபரிகிரிநாதன் கருணைதான்!'' என நெகிழ்ந்து சொல்கிறார் சாஸ்தா தாசன்.

''இதுல எனக்குக் கிடைச்ச கூடுதல் பாக்கியம்னா, சுமார் 20 வருஷம், புனலூர் தாத்தா வோடயே சபரிமலைக்குப் போயிருக்கேன். வாழ்க்கைப் பயணத்துக்கு வழிகாட்டியா ஒரு நல்ல குரு நம்ம எல்லாருக்குமே தேவை. குறிப்பா, இதை சூசகமா உணர்த்துறதுதான் சபரிமலைப் பயணமே! ஒரு அற்புதமான

புனலூர் தாத்தா

குருநாதரா புனலூர் தாத்தா இருந்து எங்களை வழிநடத்தின நாட்கள்... வாழ்க்கையின் பொற்காலங்கள்! அவரோட பயணம் பண்ணி, சாஸ்தாவைத் தரிசிச்சதாலதான் இன்னிக்கு வரை திடகாத்திரமா, மனசுல எந்தப் பொதியையும் சுமக்காம இருக்கேனோ என்னவோ?'' என்று மனமுருகிச் சொல்கிறார்.

''குரு வணக்கமும் குரு மரியாதையும் சபரிமலைக்குப் போறவங்க செய்ற முக்கியமான கடமை; மிக அற்புதமான பூஜை. இங்கே, வயசு, ஜாதி, காசு -பணம்னு எதுவும் பெருசு கிடையாது. வயசுல சின்னவங்களா இருந்தாலும் அவர்தான் குருசாமின்னா, அத்தனை மரியாதைகளையும் பாத பூஜைகளையும் அவருக்குச் செஞ்சே ஆகணும். குருவருள் இருந்தாத்தான் திருவருள் கிடைக்குங்கறது சத்திய வாக்கு! அதனாலதான் வருஷம் தவறாம, எங்கள் குருநாதர் புனலூர் தாத்தாவுக்கு குருபூஜையை ரொம்ப விமரிசையா செஞ்சுகிட்டிருக்கோம். இதுக்காகவே, 'அனுக்கிரக சாஸ்தா சாரிட்டபிள் டிரஸ்ட்’னு ஒரு அமைப்பையே உருவாக்கியிருக்கோம். வைதீகம்தான் என் உத்தியோகம். பகவான் கிருபையால, புனலூர் தாத்தாவோட பேரருளால அவருக்கான குருபூஜையை, இன்னிக்கி என் கூட வர்ற சாமிகளோட உதவியால ரொம்பச் சிறப்பாவே பண்ணிட்டிருக்கேன்.

ஒவ்வொரு டிசம்பர் மாசமும் கடைசி ஞாயித்துக்கிழமையில, குருபூஜை விமரிசையா நடக்கும். வருஷா வருஷம் இந்த பூஜைக்கு, தன் உடலையும் பொருட்படுத்தாம செங்கோட்டைலேருந்து வந்து பூஜைல கலந்துக்கறார் வாஞ்சீஸ்வர ஐயர். புனலூர் தாத்தாவோடயே இருந்து, பல சத்காரியங்களைச் செஞ்ச வாஞ்சீஸ்வர ஐயர் எங்களோட பூஜைல கலந்துக்கறது, இன்றைய தலைமுறை ஐயப்ப

புனலூர் தாத்தா

பக்தர்களுக்குக் கிடைச்ச மிக உன்னதமான ஆசீர்வாதம்!'' என்று பெருமிதம் பொங்கச் சொல்பவர், பெரும்பாலும் பெரியபாதை வழியேதான் சபரிமலைக்கு தன் சிஷ்ய கூட்டத்தை மலைக்கு அழைத்துச் செல்கிறார்.

''காடே வீடுன்னு இருக்கிற விலங்குகளாட்டும்... காட்டுல இருக்கற அலுவலகமே கதின்னு இருக்கிற வனத்துறை ஊழியர்களாட்டும்... இவங்களைவிட, காட்டுல எத்தனை பாதைகள் இருக்கு, அந்தப் பாதை வழியாப் போனா, எங்கே போக முடியும்; இந்தப் பாதை எதுவரைக்கும் ஆபத்து இல்லாம இருக்கும்; பிறகு என்ன மாதிரியான ஆபத்துகள் இருக்கும்னு மொத்த பாதைகளும் புனலூர் தாத்தாவுக்கு அத்துபடி! மலைகளும் பாதைகளும், மரங்களும் நிம்மதியா ஓய்வு எடுக்கக்கூடிய இடங்களும் புனலூர் தாத்தாவுக்குத்தான் முழுசாத் தெரியும்.

யானைகள் எந்த நேரத்துல எந்த வழியா, எதுக்காக வரும்னெல்லாம் தெரிஞ்சு வைச்சிருப்பார், புனலூர் தாத்தா. 'இன்னும் கொஞ்ச நேரத்துல இந்தப் பக்கம் யானைக் கூட்டம் வரப்போகுதுன்னு தோணுதுன்னு சொல்வார். பார்த்தா... கொஞ்ச நேரத்துல அங்கே யானைக் கூட்டம் வந்து நிக்கும்! அதேபோல, நிறைய கோயில்களுக்குக் கொடிமரங்கள் செய்றதுக்கு மரங்களை அனுப்பி வைச்சிருக்கார் அவர். எனக்குத் தெரிஞ்சு அவர் சிந்தனை, செயல், பேச்சு, மூச்சு எல்லாமே ஐயப்பன், ஐயப்பன், ஐயப்பன்தான்! ஐயப்ப ஸ்வாமிக்காகவும் ஐயப்ப பக்தர்களுக்காகவுமே வாழ்ந்த மகான் அவர். அவரைச் சந்திச்சதும் அவரோட பேசினதும் அவரோடயே சபரிகிரிவாசனைத் தரிசனம் பண்ணினதும், என் இந்த ஜென்மத்துக் கொடுப்பினை'' என்று சொல்லும்போதே, அழுகை பீரிடுகிறது சாஸ்தா தாசனுக்கு.

புனலூர் தாத்தா

''உண்மைதான். சபரிமலை தரிசனமும் அங்கே குடிகொண்டிருக்கும் சாஸ்தாவின் பேரருளும் நமக்குக் கிடைக்கணும்னா, நல்லதொரு குருவின் வழிகாட்டுதல் அவசியம் தேவை. குரு இல்லேன்னா, காட்டுப் பாதையில, அதுவும் பெரியபாதை வழியா எப்படிப் போறது, எங்கே போறதுன்னே தெரியாம எங்கேயோ போகவேண்டியதுதான்! இந்த இரண்டு மூணு தலைமுறை ஐயப்ப பக்தர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷம்... புனலூர் தாத்தாதான்!  அவர் இல்லேன்னா, என் இந்த வாழ்க்கையே ஒரு வடிவத்துக்கு வந்திருக்காது'' என்கிறார் வாஞ்சீஸ்வர ஐயர்.

''ஒருகாலத்துல, தன்னோட இளம் வயசுல சந்நியாசம் வாங்கிடலாம்னு முடிவு எடுத்து, சிருங்கேரி மடத்துக்குப் போனவர் புனலூர் தாத்தா. 'இல்லறத்துல இருந்துக்கிட்டே நீ செய்ய வேண்டிய சேவைகள் நிறைய இருக்கு’ன்னு சொல்லி அவரை அனுப்பி வைச்சிட்டார் சிருங்கேரி சுவாமிகள். அதுக்கு அடுத்தடுத்த வருடங்கள்லதான் சபரிமலை மேலயும் பக்தர்கள் மேலயும் பெரிய ஈடுபாடும் பக்தியும் வந்துச்சு, புனலூர் தாத்தாவுக்கு.

ஒருமுறை சிருங்கேரி சுவாமிகள் கேரளத்துக்கு வந்திருப்ப, அவரைத் தரிசனம் பண்ணின புனலூர் தாத்தா, 'வாங்களேன் சுவாமி சபரிமலைக்கு! எங்கள் ஐயப்பனின் அழகை வந்து தரிசனம் பண்ணுங்க’ன்னு சொல்ல... சிருங்கேரி சுவாமிகளும் மலையேறி வந்து, ஐயன் ஐயப்ப ஸ்வாமியைத் தரிசனம் பண்ணினார். 'சுப்ரமணி... இப்ப இங்கே என்ன சேவையெல்லாம் பண்ணிட்டிருக்கே?’ன்னு கேட்டார் சுவாமிகள். 'வர்ற பக்தர்களுக்கெல்லாம் முடிஞ்சவரைக்கும் அன்னதானம் செஞ்சுகிட்டிருக்கோம்’னார் புனலூர் தாத்தா. உடனே சுவாமிகள், 'இது மகா புண்ணியம். எவ்ளோ சோதனை வந்தாலும், அன்னதானத்தை விட்டுடாதே’ன்னார். நித்திய அனுஷ்டான பூஜைகளையும் அன்னதானத்தையும் தன்னோட ரெண்டு கண்ணா நினைச்சு, செவ்வனே பண்ணிட்டிருந்தார் புனலூர் தாத்தா'' என்கிறார்கள் வாஞ்சீஸ்வர ஐயரும் சாஸ்தா தாசனும்.

''ஒருமுறை... பம்பைல காலைல ஒன்பது மணிலேருந்து சாயந்திரம் நாலு மணி வரைக்கும் அன்னதானம் நடந்துச்சு. எல்லாரும் பக்தர்களுக்கு கவனிச்சு கவனிச்சு பரிமாறிக்கிட்டிருக்கோம். கிட்டத்தட்ட சாப்பாடெல்லாம் முடிஞ்சுச்சுன்னு இருக்கற வேளைல... ஆந்திராலேருந்து ஒரு எழுபத்தஞ்சு சாமிங்க இருமுடியோட வந்து இறங்கி, பயங்கர பசியோட வந்தாங்க. நாங்கள்லாம் பதறிட்டோம். ஆனா, புனலூர் தாத்தா பதறவே இல்லை. அப்ப என்ன நடந்துச்சு தெரியுமா?'' என்று சஸ்பென்ஸ் வைத்து முடித்தார் சாஸ்தா தாசன்.

- சரண கோஷம் தொடரும்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism