Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
கேள்வி - பதில்

தெய்வத் திருவுருவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்திரை காட்டுவது ஏன்? தெய்வ முத்திரைகள் உணர்த்தும் தத்துவம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 - சிவ.கல்யாணராமன், நாகர்கோவில்

##~##

பாதுகாப்பு அளிக்கிறேன், விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்பது அபய-வரத முத்திரையின் விளக்கம். நம் எண்ணத்துக்கு உகந்தவாறு பரம்பொருளின் பல வடிவங்களான இறையுருவங்களுக்கு முத்திரைகள் அமைந் திருக்கும். ஆன்ம ஞானத்துக்கு சின்முத்திரை ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும். இடையூறு வருமோ என்ற எண்ணம் மேலோங்கும்போது, ஸ்ரீவிக்னேஸ்வரரை அணுகுவோம். குழந்தைச் செல்வம் வேண்டும் என்றால், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனை அணுகுவோம். குடும்ப க்ஷேமத்தை நிறைவு செய்ய ஸ்ரீசோமாஸ்கந்த பரமேஸ்வரரை ஏற்போம். அரக்கர் பயம் அகல மகிஷாசுரமர்த்தினியை வழிபடுவோம். அதேபோன்று, கலையில் தேர்ச்சி பெற கலைமகளையும், வீரம் பெற்று விளங்க மலைமகளையும் வழிபடுவோம். இப்படி, நம் எண்ணத்துக்கு உகந்த முத்திரை அல்லது வடிவம் பெற்ற இறையுருவங்களை அணுகும்போது, மனம் அதில் எளிதில் லயித்துவிடும்.

பரம்பொருள் பல இறையுருவங்களாகக் காட்சியளிக்க நமது எண்ணம்தான் காரணம். உலகமே நான்தான் என்று காட்ட விஸ்வரூபம் எடுத்தார் ஸ்ரீகிருஷ்ணர். நீரில் மூழ்கித் தேடுவதற்காக மத்ஸ்யாவதாரம், மந்திர பர்வதத்தைத் தாங்க ஆமை வடிவம், பூமியைத் துளைபோட்டு இறங்க

கேள்வி - பதில்

வராஹம்... இப்படிச் செயலுக்கு உகந்த வடிவங்களை எடுத்தார் ஸ்ரீமந் நாராயணன். பக்தனைக் காக்க நரசிம்மம், பலியை ஒடுக்க வாமனன், அரசர்களை அடக்க பரசுராமர், அரக்கனை அழிக்க ஸ்ரீராமன், எதிரிகளை வெல்ல பலராமன், அறிவைப் புகட்ட ஸ்ரீகிருஷ்ணன்... இப்படி, அவரது செயல்பாடுகள் அத்தனையும் செயலை ஒட்டிய வடிவமைப்பில் நிறைவேறின. அலை அலையாக வெளிவரும் ஆசை களின் ஊற்று மனம்; நிலைக்கும் திறன் மனம் (மனனாத் மன:). ஆசைகளை நிறைவேற்ற ஆண்டவனை அணுகு

வோம். ஆசைக்கு உகந்த இறையுருவத்தை ஆராதிப் போம். மாறுபட்ட ஆசைகள் தோன்றும்போது, மாறுபட்ட இறையுருவத்தை அணுகத் தோன்றும். எல்லாப் பொருட் களிலும் தெய்வத்தன்மையைப் பார்க்கச் சொல்கிறது ஸனாதனம்.

நாக ப்ரதிஷ்டை, அச்வத்த ப்ரதிஷ்டை, கூப ப்ரதிஷ்டை, தடாக ப்ரதிஷ்டை, ஆராம ப்ரதிஷ்டை- இப்படிப் பாம்பிலும், மரத்திலும், குளத்திலும், குட்டையிலும், கிணற்றிலும் தெய்வாம்சத்தைப் பார்ப்பது உண்டு. பிரபஞ்சம் முழுவதையும் பரம்பொருளின் வடிவமா கப் பார்க்கும் பக்குவம் வரும்போது, 'நாமே எல்லாமும்’ என்று தெரிய வரும் (ஆத்மவத் ஸர்வ பூதானி ய: பச்யதி ஸபச்யதி). ஆரம்ப காலத்தில் முத்திரையிலும் வடிவத்திலும் தெய்வாம்சத்தைப் பார்த்து, படிப்படியாக எல்லாவற்றிலும் காணும் பக்குவம் வந்துவிட்டால், துயர் தொடாத ஆனந் தத்தை உணரலாம்.

குறிப்பிட்ட தத்துவ வடிவம் முத்திரையாகச் சுட்டிக் காட்டப்படும். சின்முத்திரை- ஜீவ ப்ரம்ம ஐக்கியத்தைச் சொல்லும் (அங்குஷ்ட தர்ஜனி யோக முத்ரா வ்யாஜேன தேஹினாம். ச்ருத்யுக்தம் ப்ரம்ம ஜீவைக்யம் தர்சயன் னோவதாத் சிவ:). கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் ஆகியவற்றை முத்திரை வழி செயல்படுத்தும்போது, ஆன்மாவை அமுதமாக நிவேதனம் செய்ய காமதேனு முத்திரை பயன்படும். மானசீக பூஜையில் முத்திரை பயன்படும். புராண விளக்கங்களில் உருப்பெற்றவை மூர்த்தங்களின் உருவங்கள்.

மகாபாரதம் எழுதுவதற்கு ஒரு தந்தம் பயன்பட்டதால், ஏகதந்தன் ஆனார் விக்னேஸ்வரர். மேலும் பஞ்சமுக கணபதி, ஸித்தி-புத்தி கணபதி போன்ற பல உருவங்களும் பக்தர்கள் மனதில் உருப் பெற்று உருவமாக வடிக்கப்பட்டன. நிர்குண தெய்வத்தை ஸகுணமாக்கும் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், மனதின் கற்பனைக்கு உகந்தவாறு பலப்பல திருவுருவங்கள் தென்பட ஆரம்பித்தன.

பூஜை முறையிலும் முத்திரை உண்டு. சொல்லுக்குப் பதிலாக முத்திரை பயன்பட்டது. நாட்டிய சாஸ்திரத்தில் அபிநயங்களிலும் முத்திரை அரங்கேறியிருக்கும். இரண்டு கரங்களையும் சேர்ப்பதை 'நமஸ்கார முத்திரை’ என்றும் சொல்லலாம். மொழி வருவதற்கு முன்னால் கை, கால், கண், உடம்பு ஆகியவற் றின் அசைவுகளும் முகபாவங்களுமே எண்ணங் களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்பட்டதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். அவையும் ஒரு தகவலை விளக்கும் முத்திரைதான். பேச இயலாதவர்கள் கண், கைகள் மற்றும் கால்களின் குறிப்பால் கருத்தை வெளியிடுவர். ஆக, முத்திரைகள் என்பவை தகவல்களை உள்ளது உள்ளபடி விளக்குவதற்குப் பயன்படுகின்றன. வார்த்தைகள் மூலம் வெளிவரும் தகவல்கள் கேட்பவரின் சிந்தனைக்கு உகந்த வாறு மாறுபட வாய்ப்பு உண்டு. ஆனால், முத்திரைக்கு அது இல்லை.

புத்தரின் விளக்கவுரையை நான்கு சீடர்கள் நான்கு விதமாக எடுத்துக்கொண்டதாகச் சரித்திரம் கூறும். ஹீனயானம், மஹாயானம் யோகாசாரம், மாத்யமிகம் எனும் பிரிவுகள் அப்படி வந்ததாகச் சொல்லலாம். பிரம்ம சூத்திரத்துக்கு, படிப்பவரின் சிந்தனை மாற்றத் தால் பல விளக்கங்கள் உண்டு. பகவத் கீதையின் விளக்கவுரைகள் ஏராளம். பார்த்த காட்சியை சொல்லால் விளக்கும்போது காட்சி யின் தரத்தை மாற்றிச் சொல்ல இயலும். கண்ணால் பார்த்த காட்சியை கண் மாற்றிக் கூறாது. வேதம், கண்ணால் பார்த்தது உண்மை என்று சொல்லும் (சக்ஷூர்வை ஸத்யம்). உண்மையை விளக்கும் தகுதி முத்திரைக்கும் உண்டு.

கேள்வி - பதில்

'மனோபலம் கூடுவதற்கு அனுமனை வழிபடு’ என்று பெரியவர் ஒருவர் அறிவுறுத்தினார். ஏற்றுக்கொண்டேன். எனினும், அவர் கூறியதன் உள்ளர்த்தத்தை அறிய ஆவல்...

- எம்.பிரசன்ன வேங்கடேசன், சென்னை-46

வாழ்க்கையின் முழுமையை எட்டுவதற்கு, தேக பலத்துடன் மனோபலமும் இணைய வேண் டும். இரண்டில் ஒன்று சுணக்கமுற்றால், அது அரைகுறை. குறையை நிறைவு செய்வதற்கு, அந்த அரை (பகுதியை) எதிர்பார்க்கும்.

விச்வாமித்திரர் வசிஷ்டருடன் மோதினார். அவரிடம் க்ஷத்ரிய பலம் இருந்தது; ப்ரம்ம பலம் இல்லை. அதனால் தோல்வியைத் தழுவினார். பிறகு, விழித்துக்கொண்டார். க்ஷத்திரிய பலம் மட்டுமே தனியாக முழுமை பெறாது, ப்ரம்ம பலமும் வேண்டும் என்பதை உணர்ந்தார் (திக்பலம் க்ஷத்திரியபலம் ப்ரம்ம

கேள்வி - பதில்

தேஜாபலம் பலம்). 'நாட்டைப் பாதுகாக்க அரசு பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். ஆனால், அரசனுக்கு ஆன்ம பலமும் வேண்டும்’ என்கிறது வேதம். உறுதியான அரசுக்குப் படை பலமும் வேண்டும்; ஆன்ம பலமும் வேண்டும். இரண்டும் இணைந்து நாட்டைத் தாங்கி நிற்கும் என்று வேதம் விளக்கும் (ப்ரம்ம க்ஷத்ரே ராஷ்டிரம் தாரயதம்). உபநிடதமோ, 'பலவீனமானவனுக்கு ஆன்மா எட்டாக்கனி’ என்கிறது (நாயமாத்மாபலஹீனேனவப்ய:).

தேக பலத்தின் உறுதியானது மனோபலத் தின் இறுதியில் ஊர்ஜிதமாகும். உண்மை யில் மனோபலமானது, தேக பலத்தை நிலை நிறுத்தும். சீதையைத் தேடி அலைந்த வானர சைன்யம் கடற்கரையை அடைந்தது. தேடும் முயற்சியில் தோல்வி அடைந்த வானர சைன்யம், சுக்ரீவனின் கையால் மடிவதைவிட உபவாசம் இருந்து மடிவது மேல் என்று எண்ணி, உண்ணாநோன்பை ஏற்றது. அந்த வேளையில் விழித்துக்கொண்ட ஜாம்பவான், வானரர்களைக் காப்பாற்றவும், அதே நேரம் சீதையைத் தேடிப்பிடிக்கவும் திறமை வாய்ந்த ஆஞ்சநேயரை அணுகினார். அனுமனின் குன்றிய மனோபலத்தை உசுப்பிவிட்டு, அவனாகவே கடலைத் தாண்டும் செயலில் ஈடுபட வைத்தார். மனோபலம், கடலைத் தாண்டும் பணியில் ஊக்கம் அளித்தது.

போர்க்களத்தில் எதிரிகள் லட்சுமணனை வீழ்த்தினர். நினைவு இழந்த நிலையில்

இருந்த லட்சுமணனைக் கண்டு ஸ்ரீராமன் துக்கத்தில் ஆழ்ந்தார். அப்போதும் அனுமனின் உறங்கிக்கிடந்த மனோபலத்தை உசுப்பி விட்டு, ஒளஷத பர்வதத்தை வரவழைத்தனர். அனுமனின் மனோபலம், பர்வதத்தைத் தாங்கி வரும் வலிமையை அளித்தது. லட்சுமணன் விழித்தெழுந்தான். போரில் வெற்றி கிடைத்தது. ஒரு தடயமும் இல்லாத பொருளை அடை யாளம் கண்டு வெற்றிபெற, மனோபலம் இருந்தால் மட்டுமே இயலும். சீதையை முன்பின் பார்த்ததில்லை; அவள் இருக்கும் இடம் பற்றிய தகவலும் தெரியாது. இதுபோன்ற சூழலில் வெற்றியளிப்பது மனோபலம். அலசி ஆராயும் திறன், தேகபலம், மனோபலம், புகழ், ஈடுபட்ட செயலில் இருந்து பின்வாங்காமல் இருக்கும் மனோவலிமை, பயமின்மை, உடல் ஆரோக்கியம், உற்சாகம், சொல்வலிமை ஆகிய அத்தனையும் அனுமனை நினைத்தால் நம்மில் வந்துவிடும் என்பார்கள் (புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வ மரோகதா ஆஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்). வெற்றியடைய மனோபலம் வேண்டும் என்பதற்கு அனுமன் எடுத்துக்காட்டு.

கேள்வி - பதில்

பஞ்சாங்கத்தில் வடக்கு சூலம், தெற்கு சூலம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. அந்தத் திசை நோக்கிப் பயணிக்கக்கூடாது என்கிறார்கள். இது ஏன்? சூலம் என்றால் என்ன?

- கீர்த்தனா ரவி, விழுப்புரம்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது; 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; இடியுடன் கூடிய மழை பொழியும்; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்படி உருவானது, ஏன் உருவானது, கடலுக் குள் ஏன் போகக்கூடாது என்று கேள்விகள் எழுப்பமாட்டோம்.

கேள்வி - பதில்

நம் மனம் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளும். சற்று நேரத்தில், புயல் வங்கக்கடல் நோக்கி நகர்ந்துவிட்டது; இனி ஆபத்தில்லை என்று அறிவிப்பு வரும். அதற்கும் கேள்வி கேட்கமாட் டோம். நிம்மதி அடைவோம். புயலின் தோற்றம், அதன் மாற்றம், அதைப் பற்றிய எந்த அறிவும் இல்லாதவர்கள் தகவலை ஏற்றுச் செயல்படுவார்களே தவிர, கேள்வி எழுப்பமாட்டார்கள். தகவலில் நம்பிக்கை இருக்கும். அதனால் ஏற்போம். ஆனால், நமது பண்பை வளர்க்கும் பல தகவல்களைஏற்கமாட்டோம். கேள்வி எழுப்பி, பதிலில் திருப்தி அடையாமல், அதைப் புறக்கணிப்போம். அதைப் புறக்கணிக்கும் எண்ணத்துடன் கேள்வி எழும். இப்படி சிறுசிந்தனை வட்டத்தில் உழலும் மக்கள்தான் ஏமாற்றம் அடைகிறார்கள்.

எல்லா பிரமாண்டங்களுக்கும் வடக்கில் மேரு பர்வதம் இருக்கிறது என்கிறது புராணம் (ஸர்வேஷாமேவ வர்ஷாணாம் மேருருத்ரத: ஸ்தித:). அதிலிருந்து வடக்கு திசை தெரிந்தது. அதை வைத்து மற்ற திசைகளும் தெரியவரும். கிழக்கில் சூரியன் உதிப்பான் என்பதால் கிழக்கு தெரிந்துவிட்டது. மற்றவை எளிதில் விளங்கிவிடும். வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் இடையூறு கள் திக்குகளிலிருந்து வெளிவரும்; தென்மேற்குப் பருவ மழை, வடமேற்குப் பருவ மழை- இப்படி யெல்லாம் விளக்குவதற்கு திக்குகள் வேண்டும்.

பயணம் மேற்கொள்கிறோம். திக்கை நோக்கிப் பயணம் இருக்கும். அந்த திக்கில் நமது பயணம் துயரத்தை அளிக்குமா, மகிழ்ச்சியை அளிக்குமா என்று முன்னமேயே தெரிந்துகொள்ள ஜோதிடம் சில தகவல்களை அளிக்கும். திங்கள், சனி- கிழக்கு சூலம்; செவ்வாய், புதன்- வடக்கு சூலம்; வியாழன்- தெற்கு சூலம்; வெள்ளி, ஞாயிறு- மேற்கு சூலம் என்று சொல்லும். சூலம் என்றால் துயரம் என்று பொருள். வயிற்றுவலியை ஆயுர்வேதம் 'ஜடரசூலம்’ என்று சொல்லும். தலைவலியை சிர:ச்சூலம் என்று சொல்லும். இவை இரண்டும் துயரத்தை அளிக்கும். ஆக, 'இந்த நாளில் இந்த திக்கை நோக்கிய பயணம் துயரத்தில் முடியலாம்; தவிர்த்துவிடு’ என்று பொருள்.

சந்திரனுக்கும் சனிக்கும் ராசிச் சக்கரத்தில் கிழக்கு திக்குடன் சம்பந்தம் இல்லை. அதுபோன்று மற்ற கிரகங்களுக்கு அனுகூலமாகவும், ப்ரதிகூலமா கவும் இருக்கும் திக்குகளை வைத்து சூலம் உருவானது. நமது முயற்சிகள் துயரத்தைத் தொட வாய்ப்பிருந்தால், அவற்றை விலக்கச் சொல்லும். சில நேரம் திக்கு சூலம் துயரத்தை அளிக்காமலும் இருக்கலாம். ஆனால், கடைசி நிமிடத்தில் மாற்றம் வரும் என்பதை முன்னமேயே கணிக்கும் திறமை நம்மில் இல்லாததால், பாதுகாப்பை எண்ணி சூலத்தைத் தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கு நன்றாக இருப்பதைப் பார்த்து, எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும் என்கிற முடிவு தவறானது. நன்மையை விரும்புவர்கள் சாஸ்திரத்தை ஏற்பார்கள்.

- பதில்கள் தொடரும்...