Published:Updated:

ஸ்ரீராமர் திதி கொடுத்த புண்ணிய திருத்தலம்!

தை அமாவாசை தரிசனம்!

ஸ்ரீராமர் திதி கொடுத்த புண்ணிய திருத்தலம்!

தை அமாவாசை தரிசனம்!

Published:Updated:
##~##

'நீத்தார் கடனைச் செய்யச் செய்ய, வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் நிச்சயம். மனதில் அமைதியும் குடும்பத்தில் நிம்மதியும் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆகவே, நீத்தார் கடனைச் செய்ய மறந்துவிடாதீர்கள்'' என ஸ்ரீராமபிரானுக்கு அகத்திய முனிவர் அருளினார். அதன்படி, ஓர் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கான கடனைச் செய்து, சிவனாரின் பேரருளைப் பெற்றார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. 

அதுமட்டுமா? சீதாதேவியைத் தேடி ஸ்ரீராமரும் ஸ்ரீலட்சுமணரும் அலைந்தபோது, தாகத்தால் வறண்டு தவித்தார்களாம். அப்போது வருணன் தோன்றி, அவர்களின் தாகத்தைத் தணித்தாராம். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி, ஸ்ரீராமர் நீத்தார் கடன் செலுத்தி, சிவனாரின் தரிசனத்தையும் பெற்ற அந்தத் திருத்தலம், தீர்த்தாண்டதானம் என்றே அழைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீராமர் திதி கொடுத்த புண்ணிய திருத்தலம்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து மீமிசல் செல்லும் கடற்கரைச் சாலையில் (இ.சி.ஆர். சாலை), தொண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தாண்டதானம். இங்கே சிவனாரின் திருநாமம்- ஸ்ரீசர்வ தீர்த்தேஸ்வரர்.

திருப்புனவாசல் எனும் அற்புதமான தலம், அருகில் உள்ளது. அந்தத் தலத்து நாயகனாம் ஸ்ரீவிருத்தபுரீஸ்வரரைப் பார்த்தபடி மேற்கு நோக்கி எழுந்தருள்கிறார் தீர்த்தாண்டதானத்து சிவபெருமான். இங்கேயுள்ள தீர்த்தகட்டமான கடலில் நீராடிவிட்டு சிவனாரை வழிபட்டால், 64,000 கோடி தீர்த்தங்களில் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசைப் புனித நாளில், இந்தத் தலத்தில் திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர். இந்தத் தலத்தில் திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம்; அவர்களின் ஆத்மாவும் அமைதிபெறும்; பிறகு, ஸ்ரீசர்வதீர்த்தேஸ்வரரை வழிபட்டால், சகல ஞானமும் யோகமும் பெற்று இனிதே வாழலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

ஸ்ரீராமர் திதி கொடுத்த புண்ணிய திருத்தலம்!

கோயிலின் பின்புறம் மந்தாரைக் கிணறு உள்ளது. இதில் நீராடி, தொடர்ந்து 48 நாட்கள் சர்வதீர்த்தேஸ்வரரை வணங்கி வழிபட்டால், தீராத நோயும் தீரும்; மனோபலம் பெருகும் என்பது நம்பிக்கை.

இங்கே... பாதிரி, வில்வம் என ஸ்தல விருட்சங்கள் இரண்டு. தேய்பிறையில் பிறந்தவர்கள் சந்திர தோஷத்தில் இருந்து விலகுவதற்கு இங்கேயுள்ள வில்வ மரத்துக்கும், சூரிய தோஷத்தால் பாதிப்பானவர்கள் பாதிரி மரத்துக்கும் சந்தனம்- குங்குமமிட்டு வணங்கினால், அந்த தோஷங்களில் இருந்து விலகி, நிம்மதியாக வாழலாம்.

இங்கு அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபெரியநாயகி. திருமணத் தடையால் கலங்குவோர், பிள்ளை பாக்கியம் இல்லையே என வருந்துவோர்... இங்கு வந்து கடலில் நீராடி, ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீசர்வதீர்த்தேஸ்வரரை வணங்கினால், விரைவில் கல்யாணம் கைகூடும்; குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

  - சு.ராம்குமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்