Published:Updated:

'மல்லிகையாக மாறிய அஸ்தி!'

'மல்லிகையாக மாறிய அஸ்தி!'

'மல்லிகையாக மாறிய அஸ்தி!'

'மல்லிகையாக மாறிய அஸ்தி!'

Published:Updated:
'மல்லிகையாக மாறிய அஸ்தி!'
##~##

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருவுடையார்பட்டி. இங்கேயுள்ள இறைவனின் திருநாமம் - ஸ்ரீதிருமூலநாதர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுக்கோட்டைக்கு அருகே உள்ள அற்புதமான திருத்தலம், திருவரங்குளம். அந்தத் தலத்துக்கு வந்த கரிகால்சோழன், வழியில் சுயம்புமூர்த்தமாக இருந்த சிவலிங்கத் திருமேனியைக் கண்டு சிலிர்த்துப் போனார். அந்த லிங்கத்தின் மீது பசு மற்றும் கன்றின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியந்த மன்னர், அங்கே சிவனாருக்கு அழகிய கோயிலைக் கட்டினார் என்கிறது ஸ்தல வரலாறு. அதுவே திருவுடையார்பட்டி!

ஆலயத்தில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே அம்பாளின் திருநாமம் - ஸ்ரீதிரிபுரசுந்தரி. தன்னை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் ஒளியேற்றி, நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தருளும் கருணையே உருவானவள் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

'மல்லிகையாக மாறிய அஸ்தி!'

இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீசொர்ண பைரவரும் விசேஷமானவர். தேய்பிறை அஷ்டமி நாளில், இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாளில், ஸ்ரீசொர்ண பைரவரைத் தரிசித்து, தயிர்சாத நைவேத்தியம் செய்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்; சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் வந்துசேரும் என்பது ஐதீகம். கோயிலில், மூலவர் திருமூலநாதரை நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீமுனீஸ்வரரும் சிறப்புக்கு உரியவர். ஊருக்குக் காவலாகவும் தன்னைச் சரணடையும் பக்தர்களின் வீடுகளுக்குக் காவலனாகவும் திகழ்பவர் இந்த ஸ்ரீமுனீஸ்வரர்.

'மல்லிகையாக மாறிய அஸ்தி!'

சிவனடியார் ஒருவரின் தந்தை இறந்துவிட, கங்கையில் கரைப்பதற்காக அவரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு, தனது நண்பரோடு காசியம்பதி நோக்கிச் சென்றார். வழியில், வெள்ளாற்றங்கரையில் இளைப்பாறினார். அப்போது அந்த நண்பர் அஸ்தி கலசத்தைத் திறந்து பார்க்க... வியப்பில் ஆழ்ந்து போனார். காரணம், அதில் அஸ்தி சாம்பலுக்குப் பதிலாக, நறுமணம் மிக்க மல்லிகைப்பூக்கள் இருந்தன. சிவனடியாரிடம் இதைச் சொல்லவில்லை அந்த நண்பர். பிறகு காசிக்குச் சென்று, பூஜைகள் முடித்து, கங்கையில் அஸ்தியைக் கரைக்க முனையும் வேளையில், அதில் சாம்பலும் எலும்பும் இருந்தன. திடுக்கிட்டுப் போன அந்த நண்பர், சிவனடியாரிடம் நடந்தவற்றைச் சொல்ல, அஸ்தியைக் கரைக்காமல் அப்படியே எடுத்துக்கொண்டு, மீண்டும் வெள்ளாற்றங்கரைக்கு வந்து திறந்து பார்த்தார்கள். சாம்பலும் எலும்பும் மீண்டும் மல்லிகைப் பூக்களாக மாறியிருக்க... 'என் சிவனே... என் சிவனே...’ என்று சிலிர்த்துப் போனார் சிவனடியார். அவற்றை அங்கேயே வெள்ளாற்றில் விட்டார். அதையடுத்து, காசிக்கு நிகரான தலம் என்றும், காசியைவிட ஒரு வீசம் அதிகம் புண்ணியம் கிடைக்கப் பெறும் தலம் என்றும் திருவுடையார்பட்டியைப் போற்றத் துவங்கினார்கள் மக்கள்.

'மல்லிகையாக மாறிய அஸ்தி!'

இங்கே வெள்ளாற்றங்கரையில், முன்னோர்களுக்கான காரியங்களையும் கடமைகளையும் செய்வது மிகுந்த விசேஷத்தைப் பெறும் என்பது ஐதீகம். பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களுக்கான காரியங்களை இங்கு செய்தால், அவர்கள் மனம் குளிர்ந்து போவார்கள்; நம் இல்லங்களை வழிநடத்தி ஆசீர்வதிப்பார்கள் எனத் தெரிவிக்கின்றனர்.

தை அமாவாசை நாளில் திருவுடையார்பட்டிக்கு வந்து வெள்ளாற்றில் நீராடினால், அல்லது அந்தத் தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டு திருமூலநாதரை வழிபட்டால், பித்ருக்கள் சாபம் நீங்கும்; முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்து, சந்ததி சிறக்க வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்.

    - கே.அபிநயா

   படங்கள்: தே.தீட்ஷித்