Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##

ன்யா ராசியை தமிழ் மொழி கன்னிராசி என்று சொல்லும். ராசி சக்கரத்தின் 6-வது ராசி இது. 150 முதல் 180 வரையிலான சக்கரத்தின் ஆரங்கள் இதில் அடங்கும். ராசிக்கு அதிபதி புதன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ராசியில் புதனுக்கு உச்ச ராசி, மூலத்ரிகோண ராசி, ஸ்வக்ஷேத்திரம் என்ற மூன்று தகுதிகள் இணைந்திருக்கும். துலாம், ரிஷபம் அதாவது 2-க்கும், 9-க்கும் உடைய சுக்கிரன் இங்கு நீசம் பெற்று விடுவான். நாவன்மை, செல்வம், குடும்பம், சேமித்த புண்ணியங்களின் அளவு ஆகியவற்றில் சரிவு இருக்கும். அதாவது, போதுமான அளவு பூர்வ புண்ணியம் சேமிக்காதவர்கள் கன்னி ராசியில் பிறக்க நேரிடும். பூர்வ புண்ணியத்தின் குறையை ஆற்றலால் நிறைவு செய்ய இயலாது. குறையின் சுட்டிக்காட்டலில் சிந்தனை செயல்படும். முற்பிறவி கர்மவினையை ஒட்டி புத்தி செயல்படும் என்கிறது சாஸ்திரம் (புத்தி: கர்மானுசாரிணீ...). பல பரிகாரங்களை ஏற்றும் துயரம் குறையாமல் இருக்க இதுவே காரணம். பரிகாரங்களால் ஒட்டுமொத்த கர்மவினையையும் துடைத்து அழித்துவிடலாம் என்பதை ஜோதிடம் ஏற்காது. அப்படி ஏற்றுக்கொண்டால், அது நியதியின் உருவத்தை உருக்குலைத்து விடும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

எல்லோருக்கும் நன்மை செய்யும் குரு, இந்த ராசிக்கு பகைவனாக மாறுகிறார். உலக சுகத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் அதிபதியான குரு 4, 7 என்ற கேந்திரத்தில் இருப்பது தோஷமாக மாறுகிறது. இதை, 'கேந்திராதிபத்ய தோஷம்’ என்கிறது ஜோதிடம். மீன ராசியில் ராசிநாதன் புதன் நீசம் பெற்றிருப்பான். அங்கு சுக்கிரனுக்கு உச்சம் இருக்கும். மற்ற கிரகங்களைவிட புதனும் சுக்கிரனும் சூரியனுடன் நெருங்கி நகர்வார்கள். மௌட்யமும் அஸ்தமனமும் இவ்விருவரை எளிதில் ஆட்கொண்டுவிடும்.

சிந்தனையில் திருப்பமும் பொருளாதாரத்தில் சரிவும் இந்த ராசிக்காரர்களுக்கு நிகழ வாய்ப்பு உண்டு. சூரியனோடு நெருங்கும் புதனுக்கு அஸ்தமனம் என்ற குறை இருந்தாலும் நிபுண யோகம் என்ற நிறை அதனுடன் இணைந்திருக்கும். இவ்விருவரும் ஏழு ராசிகள் இடைவெளியில் பயணிக்கமாட்டார்கள். ராசியில் ஒரே நேரத்தில் இருவரும் உச்சனாகவோ, நீசனாகவோ மாற மாட்டார்கள். இரு ராசிகளிலும் (மீனம், கன்னி) இருவரின் இணைப்பு நீசபங்க ராஜ யோகமாக மாறுவதால்... ஒருவரின் குறை மற்றவரால் நிறைவு செய்வதாக அமைவது, சிந்தனையும் பொருளாதாரமும் சரியாமல் இருக்க உதவும்.

அம்சகத்தில் இருவரும் நீசமாகவும் உச்சமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. அது, வாழ்வின் செழிப்பை

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

உறுதி செய்யும். அம்சக பலனை இணைத்து ராசி பலன் அமையும் (பலமம்சகர்ஷயோ:). சுக்கிரன், குரு ஆகிய இரு சுப கிரகங்களின் ஒத்துழைப்பு குறைந்தாலும், மற்ற கிரகங்களின் சேர்க்கையில் வலுப்பெற்ற புதனுக்கு, அந்தக் குறையை நிறமில்லாமல் செய்ய இயலும். புதன் சுப கிரகம். சுப கிரகத்துடன் இணைந்தால் சுபன். பாப கிரகத்துடன் இணைந்தால் பாப கிரகமாக மாறுவான். சேர்க்கையில் தகுதி மாற்றம் நிகழ்வதால், அவன் நிசர்க்க சுபன் இல்லை. இவனுக்கும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. 4-வது கேந்திரத்தில் அமைந்தால் சுகத்தை இழக்க வைப்பான். தனுர், மீன லக்னத்துக்கு, புதன் கேந்திராதிபத்ய தோஷத்துடன் இணைவான். மீனம் 4-வது கேந்திரமாக அமைந்தால்... தனது தகுதி நீசத்தால் இழந்த நிலையில்... தனது கேந்திராதிபத்ய தோஷமுடைய குருவின் வீட்டில் இருப்பதும், கேந்திராதிபத்ய தோஷத்தின் உச்சத்தை எட்டவைக்கும். மற்ற கேந்திரங்கள் துயரத்தைச் சேர்க்காது.

மீனத்தில் நீச புதனோடு சுக்கிரனின் சேர்க்கையும் கன்னியின் உச்ச புதனோடு சுக்கிரனின் சேர்க்கையும் ஒன்றின் குறையை மற்றொன்று நிறைவு செய்யும். இருவரும் சுபக்கிரக யோகத்தில் இருப்பதால் சுப பலனை அளிப்பதில் முனைப்பு இருக்கும். அறிவும் சிந்தனையின் செழிப்பும், சாமர்த்தியமும் புதன் அளிப்பான். பொருளாதாரத்தையும் உலக சுகத்தையும் குறைவில்லாமல் பார்த்துக் கொள்வான் சுக்கிரன். நீச புதனுக்கு சுக்கிரன் சேர்க்கையில் பங்கம் வந்தால், இழக்கும் தகுதியை அடைந்த அறிவு வலுப்பெற்றுவிடும். சுக்கிரன் உச்சனாக இருந்தாலும் நீச புதனின் சேர்க்கையில் வலுவிழந்து, பொருளாதார மந்த நிலையை உருவாக்கும். உலக சுகத்தை எட்டிப்பிடிக்க வேண்டியிருக்கும். நீச சுக்கிரனுக்கு புதன் சேர்க்கையில் பொருளாதாரம் செழிக்கும். சுக்கிரனுக்கு நீசத்துக்கு பங்கம் வந்தமையால், சுக்கிரனின் தகுதி இழக்கப்பட மாட்டாது. ஆனால் புதன் உச்சன் ஆனாலும், நீச சுக்கிரனுடன் ஏற்பட்ட சேர்க்கையானது அறிவுத் திறனை மங்க வைத்து அலைக்கழித்து, துயரத்தில் ஆழ்த்துவான்.

உச்ச கிரகச் சேர்க்கை உயர்ந்த பலனுக்கு வழிகோலும். அதேபோல், நீசக்கிரக யோகம் விரும்பாத பலனைத் திணிக்கும். புதனுக்கு நீசம் ஏற்பட்டாலும், உச்ச சுக்கிரனின் சேர்க்கை நீச பலனைத் தொடாமல் செய்துவிடும். சுக்கிரன் பாராமுகமாக இருந்தாலும் சேர்க்கையில் விருப்ப பலனை அளிப்பது, இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம். உச்சனான புதன் கல்வியை நிறைவு செய்வான். உச்சனான சுக்கிரன் பொருளாதாரத்தை கவனிப்பான். இரண்டும் ஒருசேரக் கிடைப்பது, இந்த ராசிக்காரர்களுக்கு இயலாது. இரண்டில் ஒன்று சரிவை சந்திக்கும். புதன் கன்னியில் உச்சனாகி இருக்கும் வேளையில் மீனத்தில் சுக்கிரன் உச்சனாகத் தென்பட மாட்டான். மீனத்தில் சுக்கிரன் உச்சனாக இருக்கும் வேளையில் கன்னியில் புதன் தென்பட மாட்டான்.

ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும். கல்வி இருக்கும் இடத்தில் செல்வம் இருக்காது. செல்வம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. இரண்டும் ஒருசேரக் கிடைப்பது அரிது. இதை அனுபவத்திலும் உணர முடியும். கல்விக்கு கலைமகளும் செல்வத்துக்கு அலைமகளும் பொறுப்பு என்பர். அவ்விருவரையும் மாமியார்- மருமகளாக புராணங்கள் சித்திரிக்கும். அவர்கள் பகையோடு இருப்பதால், இணைய மாட்டார்கள் என்று சொல்வதுண்டு. அதுபோன்று கன்னி ராசிக்காரர்களுக்கு கல்வியும் செல்வமும் இணையாது. அம்பாள், தனது தர்பாரில்... ஒருபுறம் அலைமகளும் மறுபுறம் கலைமகளும் இருந்து வெண்சாமரம் வீசும் கைங்கரியத்தை ஏற்கவைத்து, இணையாத இருவரையும் இணைய வைத்தாள். அம்பாளை அணுகினால் அவளருளால் கல்வி, செல்வம் இரண்டையும் அளித்து நம்மில் இணைய வைப்பாள் என்று பாஸ்கரராயர் கூறுவார்.

புதன், சுக்கிரன் ஆகியோரது செயல்பாடு, அம்பாளை வர்ணிக்க அவருக்கு உதவியது. குருவின் மனைவி சந்திரனின் வீட்டில் தங்கிய பிறகு, ஒரு செல்வத்தை ஈன்றெடுத்தாள். குழந்தைக்கு தகப்பன் யார் என்ற சந்தேகம் எழுந்தது. எவராலும் தீர்ப்பு சொல்ல முடிய வில்லை. கடைசியில் சந்திரன் குழந்தையிடமே விளக்கம் கேட்டான். குழந்தை 'சந்திரன்’ என்று பதில் உரைத்தது. உடன் மகிழ்ச்சியில் குழந்தையின் முதுகில் தட்டிக் கொடுத்து, 'அறிவாளி’ (புத:) என்று சொன்னான். பிறந்த குழந்தைக்கு தகப்பனாரை நாம் அறிமுகம் செய்யவேண்டும். ஆனால் இங்கே, பிறந்த குழந்தையே தனது தகப்பனாரை அறிமுகம் செய்துவைத்தது. 'புத:’ என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு, அறிஞன் என்று பெயர் உண்டு. உணர முடியாத பிறப்பின் ரகசியத்தை உணர்ந்தவன் என்று புதனுக்கு பெருமை சேர்க்க வந்த கதை இது.

மனதில் உதித்த விஷயத்தை அலசி ஆராய்வது புத்தி. அது, ஒரு தீர்வை எட்டும் (நிச்சயாத்மிகா புத்தி:). அந்த புத்தியை உடையவன் புதன். தகப்பன் தன் குழந்தையை, 'எனது இதயத்தில் இருந்து வெளிவந்தவன்’ என்று சொல்வான் (ஹிருதயாத் அதிஜாயதெ...). தீர்வை எட்டுபவன் புதன். புத்திக்கும் மனத்துக்கும் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்ட... மனத்துக்குக் காரகனான சந்திரனுக்கு தகப்பன் என்றும், புத்தியில் விளைந்த தீர்வுக்கு- பிள்ளைக்கு புதன் என்றும் பெயர் வந்தது. மனஸ், புத்தி, சித்தம், அகங்காரம் இவற்றுக்கு அந்த:கரணம் என்று பெயர் உண்டு. இந்த நான்கில் மனமும் புத்தியும் மிக நெருக்கமாக இணைந்திருக்கும். அந்த நெருக்கம் இருப்பதை 'தகப்பன்’ என்று குழந்தை சொன்னது என்ற கருத்தில் புதன் என்ற பெயர் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. புதனுக்கு குருவின் சேர்க்கையைவிட, சந்திரனின் சேர்க்கை பல நன்மைகளை உருவாக்கும். புதனுக்கு, இணைவதில்... குருவைவிட சந்திரனில் ஈர்ப்பு இருப்பதால், தகப்பனார் யார் என்ற கேள்விக்கு, சந்திரன் என்று பதில் வந்தது.

ராசியின் முதல் மூன்று நவாம்சகங்களுக்கு  (உத்திரம்  2, 3, 4-ஆம் பாதங்கள்) சூரிய தசை. அடுத்த (ஹஸ்தம்) நான்கு நவாம்சகங்களுக்கு சந்திர தசை. கடைசி (சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்) இரு

நவாம்சகங்களுக்கு செவ்வாய் தசை இருக்கும். 12-க்கு உடையவன், 11-க்கு உடையவன், 3-க்கும் 8-க்கும் உடையவன்- இவர்களது தசைகளை, முழு இளமையை எட்டும் வரையிலும் இந்த ராசியில் பிறந்தவர்கள் சந்திப்பார்கள். பால்யம் பாலாரிஷ்டத்தை சந்திக்கும். மகர ராசி, ரிஷப ராசி இவற்றின் நவாம்சகங்களுக்கும் இந்த தசா வரிசைகள் பொருந்தும். அர்த்தப ராசியில் கன்னியும் அடங்கும்.  அரை

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

நட்சத்திரத்தில் முடிவடையும் ராசி என்று பொருள்.

ரிஷபம்- மிதுனம், கன்னி- துலாம், மகரம், கும்பம் ஆகியவற்றில் அரை நட்சத்திரம் இணைந்திருக்கும். ராகு தசையும், குரு தசையும் இளமையில் பரவியிருக்கும். சனியும் புதனும் முதுமையில் முடிவடையும். புதன் தசையை எட்டாமல் இருந்தாலும் மற்ற தசைகளில் புக்தியிலும் அந்தரத்திலும் தென்படும் புதன், அறிவையும் ஆற்றலையும் இணைத்துவிடுவான். ராசிநாதன் தனது தசையில்தான் பலன் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. புக்தி, அந்தரங்கள் சரியான வேளையில் பலனை அளிக்க ஏற்படுத்தப்பட்டவை. தசாநாதன், புத்தி நாதன், அந்தர நாதன்- இவற்றின் பலன்கள் மாறுபட்டு தென்படுவதற்கு, அதுவும் ஒரு காரணம்.

சனியும் சுக்கிரனும் (ஒன்பதுக்கு உடையவன், (மிதுனம், கன்னி) த்ரிகோண ராசி என்கிற கோணத்தில்) இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்வார்கள். ராசிநாதன் புதன், 10-க்கு உடையவனும் புதனாக இருப்பதால் புத்திஜீவியாக பணம் ஈட்டி பெருமையை எட்டுவான். சிரமஜீவியாக மாறமாட்டான். சனியின் தொடர்பு தொழில் கல்வியை அளிக்குமே தவிர, உடல் உழைப்பாளியாக மாற்றாது.

படகில் பயணம் மேற்கொண்ட கன்யகை, இந்த ராசியின் அடையாளம். அவள் கையில் பந்தம் இருக்கும். மற்றொரு கையில் நெற்கதிரும் இருக்கும். இது நர ராசி. நாகரிகமான ராசி. உணவுக்கு நெல்லும், செயல்பாட்டுக்கு வழிகாட்ட வெளிச்சமும் இருப்பதால், அறியாமையில் மூழ்கி அல்லல்படாமல் வெளிச்சத்தில் வாழ்க்கையில் வெற்றியை எட்ட இயலும். பதற்றம் இல்லாமல் நிறை மனதோடு வாழும் வாழ்க்கை அமையும். பெண்களுக்கே உரிய வெட்கம், எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள் என்ற எண்ணம், பெண்மைக்கு உகந்த உடல்வளம், மென்மை,  விவசாயத்தில் ஈடுபாடு ஆகிய பண்புகளை இந்த ராசியில் பிறந்தவர்களிடம் காணலாம்.

புதன் ஐம்பெரும் பூதங்களில் நிலத்தைச் சுட்டிக்காட்டுவதால் பொறுமையும், அசையாத நம்பிக்கையும், எடுத்த காரியங்களை முடிப்பதில் உறுதியும் தென்படலாம். கல்விக்குக் காரகனான புதன் பலன் பொருந்தியிருந்தால், அறிஞனாகவும் விஞ்ஞானியாகவும் திகழ்வான். சுக்கிரன் உச்சனாக இருந்தால் செல்வந்தனாகவும், உலக சுகத்தில் திளைப்பவனாகவும் இருப்பான். சுயநலத்தைப் பெருக்கும் வேலைகளை ஏற்பார்கள். ஆறஅமர யோசனை செய்து செயலில் இறங்கும் இயல்பு இருக்கும். பிறரது உதவியில் தனது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளும் மனம் இருக்கும். அளவுக்கு மீறிய நெருக்கத்தை யாரிடமும் வைக்கமாட்டார்கள். சுயநலத்தை ஒட்டி பொதுநல செயல்பாட்டில் அளவோடு இறங்குவார்கள். பணம் செலவழிப்பதில் சுணக்கமும் சேமிப்பதில் அளவு கடந்த ஆர்வமும் இருக்கும்.

தனக்கு நிகரான ஒருவனைப் புகழ்வது பிடிக்காது. பிறரது குறைகளைப் பெரிதாக்கி பிரகடனப்படுத்தி, அதன் மூலம் தனது பெருமையைப் பெருக்கும் எண்ணம் சிலரிடம் இருக்கும். சண்டை - சச்சரவு என்றால் தலையிடாமல் வெளியேறுபவர்களும் உண்டு. ஆழமான நட்பை உறுதி செய்யமாட்டார்கள். குழந்தைகளோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். மனைவி, தாய் போன்றவர் களிடம் நெருக்கம் அளவோடு இருக்கும். குறைந்த குழந்தைச் செல்வம் இருக்கும்.

சுக்கிரன், சனி, புதன் - ஆகியோரது தசைகளில், முழுத்தேவைகள் பூர்த்தியாகிவிடும். சனி பலம் பெற்று இருந்தால் செழிப்பான வாழ்வு அமையும். சுக்கிரனுக்கோ, புதனுக்கோ நீசபங்கம் இருந்தால் மக்கள் தலைவனாகவோ, செல்வச் சீமானாகவோ, அரசனாகவோ, மந்திரியாகவோ இருந்து புகழை எட்ட வாய்ப்பு இருக்கும். தான் ஏமாறாமல் இருக்க எல்லா காரியங்களிலும் தனிக்கவனம் இருக்கும். புதன் நீசனாகவும், சனி பலமிழந்தும், சுக்கிரன் மௌட்யம் அடைந்தும் தென்பட்டால், எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவனாக துயரத்தில் ஆழ்ந்துவிடுவான்.

புதனும் சனியும் பலவானாக இருந்து, சுக்கிரனும் சேர்ந்தால் படிப்பும் பகுத்தறிவும், பெருமையும் உழைப்பும் மேலோங்கி உலக அங்கீகாரம் பெற்றுத் திகழ்வான். 4-க்கும், 7-க்கும் அதிபதி குருவாக இருப்பதால் வீடு-வாகனங்கள், வெளிநாட்டு வர்த்தகம் போன்றவற்றில் இழப்பை சந்திப்பான். தாய் வீட்டின் உதவி, மாமனின் அரவணைப்பு ஆகியவற்றை துறப்பான்.

பும் புதாய நம:, சும் சுக்ராய நம:, சம் சனைச்சராய நம: என்று சொல்லி மூவரையும் வணங்கலாம். 'உத்புத்யஸ்வாக்னே’ என்ற மந்திரத்தால் புதனை வழிபடலாம். 'ப்ரவ: சுக்ராய’ என்ற மந்திரத்தால் சுக்கிரனை வழிபடலாம். 'சம்னோதேவீ:’ என்ற மந்திரத்தால் சனைச்சரனை வழிபடலாம். மந்திரம் அறியாதவர்கள், 'ஸெளம்யம் ஸெளம்யகுணோபேதம் ப்ரணமாமி புதம் சுபம்’ என்ற செய்யுளை மனதில் அசைபோட்டு வழிபடலாம். 'பார்கவம் வரதம் சுக்ரம் ப்ரணமாமி முதான்வஹம்’ என்று சுக்கிரனையும், 'சனைச்சரம் சூர்யபுத்ரம் ப்ரணமாமி ஸீகாப்தயே’ என்று சனைச்சரனையும் வழிபடலாம்.

உழைப்புக்கும் பொருளாதாரத்துக்கும் அறிவுக்கும் இந்த மூவருக்கான வழிபாடு ஒத்துழைக்கும். உடல் வளம், உள்ளத் தெளிவு, உற்சாகம், செல்வம் ஆகியன மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். ஈடுபாட்டுடன் இவர்களை வேண்டினால் விருப்பம் நிறைவேறும். குறைகளை நினைத்து சுணக்கமுற்று செயலிழக்காமல், உற்சாகத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டால் பலன் நிச்சயம்.

- வழிபடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism