Published:Updated:

தைப்பூச திருநாளில்...

தைப்பூச திருநாளில்...

தைப்பூச திருநாளில்...

தைப்பூச திருநாளில்...

Published:Updated:
தைப்பூச திருநாளில்...

தைப்பூசம். பல ஆன்மிக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் இது. முதன்முதலாக நீரும், அதிலிருந்து

லகமும் தோன்றியது தைப்பூசத்தன்றுதான் என்கின்றன புராண நூல்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூரபதுமனை அழிக்க ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பிரம்மவித்யா சொரூபமான வேலாயுதத்தை சக்திதேவி தந்ததும் இந்த நாளில்தான். பழநி முதலாக முருகன் திருத்தலங்களில் தைப்பூசம் வெகுவிசேஷம்!

தாமிரபரணியின் கரையில் தவமிருந்த ஸ்ரீகாந்தி மதிக்கு நெல்லையப்பர் அருள்பாலித்த திருநாளும் இதுவே. தைப்பூசத்தன்று நெல்லையப்பர் கோயில் விழாக்கோலம் காணும்.

தைப்பூச திருநாளில்தான், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்ப்பித்ததாக விவரிக்கிறது மயிலாப்பூர் தலபுராணம். வள்ளலார் ஜோதியில் கலந்ததும் ஒரு தைப்பூசத்தில்தான்.

பூச நட்சத்திரத்தின் பிரதான தேவதை குரு பகவான். ஆகவே, தைப்பூசத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடி குருவை வழிபட கல்வி- ஞானம் பெருகும்.

- ஜி.ஜெயலட்சுமி, சென்னை-64