கடந்த ஜனவரி 23-ஆம் தேதி காலையில், சென்னை பாரிமுனை தம்புச்செட்டித் தெருவுக்குள் நுழையவே முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம். கருணையே வடிவான ஸ்ரீகாளிகாம்பாளின் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அன்றைய தினம்தான் சீரும் சிறப்புமாக நடந்தேறியது கும்பாபிஷேக வைபவம்.
அதற்கு முன்னதாக தினமும் யாகபூஜைகள், சிறப்பு ஆராதனைகள் என ஆகம விதிப்படி கோயிலில் தினமும் வழிபாடுகள் நடந்தேறும்போதே, பக்தர்கள் சந்தோஷத் துடனும் உற்சாகத்துடனும் வந்து ஸ்ரீகாளிகாம்பாளைத் தரிசித்தவண்ணம் இருந்தனர்.
படத்தை க்ளிக் செய்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

23.1.13 அன்று இந்தியாவில் உள்ள கங்கை, காவிரி, நர்மதை என புண்ணிய நதிகளில் இருந்து எடுத்த வந்திருந்த தீர்த்தத்தைக் கொண்டு கும்பத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்ட வேளையில், 'அம்மாவே சரணம்... தேவியே சரணம்... ஸ்ரீகாளிகாம்பாளே சரணம்’ என கோஷமிட்டு வழிபட்டனர் பக்தர்கள்.
முதல் நாள், ஆலயத்தில் வேத கோஷங்களை முழங்கி சண்முக சிவாசார்யர் பூஜைகளைத் தொடங்க, பக்தர்கள் அலைகடலெனத் திரண்டிருந்தார்கள். கோயில் முழுவதும் காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேக வைபவத்தின்போது, வானில் வட்டமிட்டு வந்த ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட... மெய்சிலிர்த்துப் போனார்கள், பக்தர்கள்.
மண்டலாபிஷேக நிறைவு நாளுக்குள் (21.2.13) கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலுக்குச் சென்று தரிசிப்பது, கும்பாபிஷேக தரிசனப் பலனைக் கொடுக்கும்.
நீங்களும் உடனே ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயம் சென்று அன்னையின் அருளைப் பெறுங்கள்!
இதோ... அன்னை காளிகாம்பாள் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாக் காட்சிகள், உங்களுக்காக.
படங்கள்: இ.ராஜவிபீஷிகா