Published:Updated:

முன்னோரை வழிபடுவோம்!

முன்னோரை வழிபடுவோம்!

முன்னோரை வழிபடுவோம்!

முன்னோரை வழிபடுவோம்!

Published:Updated:
முன்னோரை வழிபடுவோம்!
##~##

ருங்குளம் எனும் பகுதியை, மார்த்தாண்டேஸ்வரன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். தீவிர சிவ பக்தனான மன்னன், அனுதினமும் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினான். ஒருநாள், மன்னனின் கனவில் வந்த சிவனார், 'மலைக்கு அருகில், தாமிரபரணி நதிக்கரையில், ஆலயம் அமைத்து வழிபடுவாயாக!’ என்று சொல்லி அருள... அதன்படி கருங்குளம் கிராமத்தில் அழகிய சிவாலயத்தை அமைத்து வழிபட்டான் மன்னன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், வேறு நாட்டை ஆட்சி செய்து வந்த சிங்கநாதன் எனும் மன்னன், தீராத வயிற்று வலியால் துடித்து வந்தான். பார்க்காத மருத்துவர் இல்லை; சாப்பிடாத மருந்து இல்லை. ஆனால், வயிற்றுவலி மட்டும் தீரவே இல்லை. ஒருநாள், முனிவர் ஒருவர், 'முன் ஜென்மத்தில் நீ யாரோ ஒரு மகரிஷியின் சாபத்துக்கு ஆளாகி, இன்று வரை அதற்கான பலனை அனுபவித்து வருகிறாய். கருங்குளத்து ஈசனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், சாபம் நீங்கப் பெறுவாய்’ என்றார். அதன்படி இங்கு வந்த மன்னன், சிவனாரை தரிசித்துப் பிரார்த்தித்தான். சாபம் நீங்கப் பெற்று, வயிற்றுவலியில் இருந்து மீண்டான் என்கிறது ஸ்தல வரலாறு.

முன்னோரை வழிபடுவோம்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது கருங்குளம் கிராமம். வகுளகிரி க்ஷேத்திரம், மார்த்தாண்ட கருங்குளம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த ஊரில், மலையடிவாரத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகுலசேகரநாயகி.  

முன்னோரை வழிபடுவோம்!

ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீபஞ்சலிங்கம், ஸ்ரீபைரவர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஆகியோரும் இங்கே தனிச்சந்நிதி யில் அருள்பாலிக்கின்றனர்.

முன் ஜென்ம சாபம் நீக்கிய தலம் என்பதால், தை அமாவாசை நாளில் பித்ருக்கள் கடன் செய்வதற்கு உகந்த தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள். தை அமாவாசை நாளில் இங்கு வந்து சிவனாரைத் தரிசித்து, வில்வமாலை சார்த்தி வழிபட்டால், பித்ரு தோஷம் முதலானவை நீங்கும்; தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்!  

முன்னோரை வழிபடுவோம்!

நவக்கிரகங்கள் தம்பதி சமேதராகக் காட்சி தரும் ஆலயம் என்பதால், நவக்கிரகங்களுக்குத் தீபமேற்றி வழிபட்டால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

கல்வியில் மந்தம், திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம், செவ்வாய் தோஷம், நவக்கிரக தோஷம், சந்தான பாக்கியமின்மை எனக் கலங்குவோர், சனிக்கிழமைகளில் இங்கு வந்து, தாமிரபரணியில் நீராடி, நவக்கிரகங்களுக்கு 11 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, அந்தந்த கிரகங்களுக்கு உரிய வஸ்திரத்தை அணிவித்து வணங்கினால், தடைகள் அனைத்தும் விலகும்; நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்!

- ச.காளிராஜ்

படங்கள்: ஏ.சிதம்பரம்