Published:Updated:

மு.க.அழகிரி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்பு!

மு.க.அழகிரி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்பு!
மு.க.அழகிரி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்பு!
மு.க.அழகிரி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்பு!

மதுரை: மு.க.அழகிரி பெயரில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில், மு.க.அழகிரி அறக்கட்டளைக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகில் உள்ள வினாயகர் கோவிலுக்கு சொந்தமான 44 சென்ட் இடத்தை, மு.க.அழகிரி பெயரில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாகவும், அந்த இடத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை மீட்க வேண்டும் என்றும் சிவரக்கோட்டையை சேர்ந்த விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் மதுரை ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் முத்து தியாகராஜன், துணை ஆணையர் கருணாநிதி மற்றும் சர்வேயர்கள் சம்பத்தப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றும் விசாரணை நடத்தினர். கோவில் ஆவணங்களை அவர்கள் ஆய்வு செய்தபோது, மு.க.அழகிரி பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட இடம் கோவில் இடம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த இடத்தை அதிகாரிகள் மீட்டனர். அதன் பின்னர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு புல்டோசர் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. இன்று அந்த இடத்தை சுற்றி கம்பிவேலி அமைக்கும் பணி நடக்கிறது.

கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாக மு.க.அழகிரி, சம்பத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. மேலும், இந்து சமய அறநிலையத் துறை தடையில்லா சான்று இல்லாமல் நிலத்தை பத்திரப்பதிவு செய்த திருமங்கலம் பத்திரப் பதிவு அலுவலர் மீதும் வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.