Published:Updated:

தமிழக அரசு சார்பில் மலிவு விலையில் பூஜை பொருட்கள் அங்காடிகள் திறப்பு!

Vikatan Correspondent
தமிழக அரசு சார்பில் மலிவு விலையில் பூஜை பொருட்கள் அங்காடிகள் திறப்பு!
தமிழக அரசு சார்பில் மலிவு விலையில் பூஜை பொருட்கள் அங்காடிகள் திறப்பு!
தமிழக அரசு சார்பில் மலிவு விலையில் பூஜை பொருட்கள் அங்காடிகள் திறப்பு!

நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் முக்கிய கோவில்களில் மலிவு விலையில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள் இன்று திறக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா உப்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு வழிபடச் செல்லும் பக்தர்களிடம் பூஜை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அதனையும் அரசே ஏற்று மலிவு விலையில் வழங்க வேண்டும் என்று ஏராளமான கோரிக்கைகள் அரசுக்கு வந்தன. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் மலிவு விலை பூஜை பொருட்கள் வழங்கும் அங்காடிகள் தொடங்க உத்தரவிட்டார்.

இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் உடனடியாக செயல்படுத்தும்படி அனைத்து கோவில்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில் ஆகிய 4 கோவில்களில் மலிவு விலை பூஜை பொருள் அங்காடிகள் இன்று தொடங்கப்பட்டது.

இங்கு சாமிக்கு அர்ச்சனை செய்வதற்கான தேங்காய், பழம், விபூதி, ஊதுபத்தி, கற்பூரம், குங்குமம், வெற்றிலை, பாக்கு ஆகியவை அடங்கிய பொருட்கள் ஒரு பையில் போடப்பட்டு ரூ.45க்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் மற்ற கோவில்களுக்கும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.