நினைதொறும் சொல்லும் தொறும்நெஞ்சு இடிந்து உகும்
வினைகொள்சீர் பாடிலும் வேம்எனது ஆர்உயிர்;
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை என்அப்பா!
நினைகிலேன் நான்உனக்கு ஆள்செய்யும் நீர்மையே!

- நம்மாழ்வார் (9-ஆம் பத்து; 6-ஆம் திருவாய்மொழி)

பொருள்: தடாகங்களையுடைய, சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்காட்கரையில் எழுந்தருளியுள்ள என் அப்பனே! பாவங்களைப் போக்கும் உனது கல்யாண குணங்களை நினைக்கும்போதெல்லாம் என் மனமானது கட்டுக்குலைகிறது; சொல்லும்போதெல்லாம் நீராய்க் கரைகிறது; பாடும்போதெல்லாம் என் அரிய உயிரானது வேகிறது. ஆதலால், நான் உனக்கு அடிமைத் தொண்டு செய்யும் தன்மையை நினைக்கவும் முடியவில்லை!

மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்து வந்து மகாபலியிடம் மூன்றடி நிலம் தானம் பெற்று, விண்ணும் மண்ணும் அளந்து, பிறகு அவனைப் பாதாளத்தில் இருத்திய திருக்கதை நாமறிந்ததே! இந்தச் சம்பவம் நிகழ்ந்த திருத்தலம் திருக்காட்கரை என்பர்.

கேரளாவில் ஷோரனூர்- எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் எடப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். த்ரிக்காக்கரா என்றால், கேரள மக்களுக்கு சுலபமாகப் புரிகிறது.

வாமனர் மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன், மகாபலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒருமுறை தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள்செய்யுமாறு வேண்டிக்கொண்டான். பகவானும் ஏற்றுக்கொண்டார். பகவான், மகாபலிக்கு அருள்புரிந்தது ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத் திருநாளில். இதை நினைவுகூரும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாபலியும் தான் வேண்டிக்கொண்டபடி இந்த விழாவில் கலந்துகொண்டு, குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.

திருக்காட்கரை திருத்தலத்திலும் ஓணம் திருவிழா வெகு விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. கருவறை விமானம்- புஷ்கல விமானம். தீர்த்தம்- கபில தீர்த்தம். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தருளியிருக்கிறார். தாயார் ஸ்ரீபெருஞ்செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது. 10 மற்றும் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 18 கல்வெட்டுக்கள் இந்தத் தலத்தில் காணக்கிடைக்கின்றன.

மூலவரான வாமன மூர்த்திக்கு முன் மண்டபத்தில் யக்ஷி, உப தேவதைகளாக பகவதி, சாஸ்தா, கோசாலகிருஷ்ணன்; வெளிப் பிராகாரத்தில் பிரம்மரிஷி, சிவன், கணபதி, சுப்ரமணியர், துர்கை, பார்வதி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.

நிலச்சுவான்தார் ஒருவரது நிலத்தில், அவர் பயிர் செய்திருந்த வாழை மரங்கள் விளைச்சல் தரவில்லை. எனவே, ஸ்ரீமகாவிஷ்ணுவின் கடைக்கண் பார்வை தனது நிலத்தில் விழவேண்டும் என்று வேண்டிக் கொண்டார் அவர். அதையேற்று, பெருமாள் தமது நேத்திரத்தால் (விழிகளால்) அந்த பக்தரின் நிலத்தைப் பார்க்க, விளைச்சல் அமோகமாகப் பெருகியதாம். அன்று முதல் அங்கு விளைந்த வாழைப் பழங்கள் 'நேந்திரம்பழங்கள்’ என்று அழைக்கப்பட்டன. அந்த பக்தரின் நிலத்தில் விளைந்த வாழைப்பழங்களில் சில தங்கத்தால் ஆன பழங்களாக இருந்ததாம். அவற்றைப் பெருமாளுக்குக் காணிக்கையாக அளித்தாராம் நிலச்சுவான்தார்.

ஒருநாள், ஆலயத்தின் சந்நிதியில் அர்ச்சகர் வைத்திருந்த அந்த தங்க வாழைப்பழங்கள் காணா மல் போய்விட்டன. விஷயம் அறிந்து கோயிலுக்கு வந்த அரசன், அங்கிருந்த அப்பாவி யோகி ஒருவரைச் சந்தேகப்பட்டுச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான். ஆனால், தங்க வாழைப் பழங்கள் கருவறையில் பத்திரமாக இருந்தது பின்னர் தெரியவந்தது. இதையறிந்த யோகி கடுங்கோபம் கொண்டு மன்னனைச் சபித்தார். பிறகு, தற்கொலை செய்துகொண்டு, பிரம்ம ராட்சஸாக மாறி அலைய ஆரம்பித்தாராம்.

சபிக்கப்பட்ட மன்னன், சாப நிவர்த்திக்காக இங்கு வந்து பெருமாளைப் பிரார்த்தித்து வந்ததுடன், அந்த யோகிக்கும் சிறியதொரு கோயில் கட்டி தினப்படி பூஜைகள் செய்து வழிபட்டு, அவரின் கோபத்தைத் தணித்து வந்தானாம். இன்றைக்கும் இங்குள்ள யோகியின் சந்நிதிக்கு தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன.

கர்த்தம பிரஜாபதிக்கும் தேவஹூதிக்கும் மகனாகப் பிறந்தவர் கபில முனிவர். மகா விஷ்ணுவின் அவதாரமாகவே போற்றப்படும் இவர், தாய்க்குத் தத்துவங்கள் உபதேசித்தவர்.

ஒருமுறை, சகரர்களின் (சாம்ப சிவமூர்த்தியின் பேரருளால் சகரன் எனும் மன்னனுக்கும் அவன் மனைவிக்கும் பிறந்த புதல்வர்களான அறுபதினாயிரம் பேர்) அஸ்வமேத குதிரையை அபகரித்து வந்த இந்திரன், அதைக் கபில முனிவரின் குடிலுக்குப் பின்புறம் கட்டி வைத்துவிட்டுப் போனான். அங்கு வந்த சகரர்கள் குதிரையைக் களவாடியது கபிலமுனிவரே என்று குற்றம் சாட்டினர். இதனால் கோபம் கொண்ட கபிலர், அவர்களைச் சாம்பலாகும்படி சபித்தார். அதன்பின், பகீரதன் கடும் தவமிருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்து, அதன் மூலம், தன் முன்னோராகிய சகரர்களை முக்தி பெறவைத்த கதை நமக்குத் தெரியும். ஆக, இத்தகைய வல்லமை மிக்க கபில முனிவரின் தவத்தால் மகிழ்ந்து, பெருமாள் இங்கு அவருக்குக் காட்சி கொடுத்ததாக புராணம் கூறுகிறது. அப்போது, அவர் வேண்டிக்கொண்டபடி பெருமாள் இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்வதாக ஐதீகம்.

இந்தக் கோயிலில் வாமனருக்கு ஒரு கருவறையும், சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தனித்தனியே உள்ளன. தினமும் 5 பூஜைகள், 3 சீவேலிகள் நடைபெறுகின்றன. வாமன மூர்த்தி சந்நிதிக்கு தெற்குத் திசையில், மகாபலி வழிபட்டதாக கூறப்படும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தலத்தில், ஸ்ரீவாமனரை வழிபடுவதற்கு முன்பாக சிவலிங்கத்தை வழிபடுவதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஓணம் பண்டிகையின்போது வாமனர் எனப்படும் ஸ்ரீதிருக்காட்கரை அப்பனை வணங்குவதற்குச் சமமாக மகாதேவர் எனப்படும் சிவபெருமானையும் மக்கள் வழிபடுவதற்கான காரணம் இங்கு யாருக்கும் தெரியவில்லை.

ஆலய மேல்சாந்தியான ஸ்ரீனிவாச போற்றியைச் சந்தித்தோம். ''இங்குள்ள மூலவருக்குப் பிரதான வழிபாடு பால் பாயச நைவேத்தியம்; ஸ்ரீசிவபெருமானுக்கு நெய் பாயசம் சமர்ப்பிக்கப்படுகிறது. ஆலயம் காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு 11 மணிக்குச் சாத்தப்படுகிறது. பிற்பகலில் 5 மணிக்குத் திறந்து இரவு 8 மணிக்கு நடைசாத்துகிறோம். ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் 10 நாள் திருவிழா இங்கு விசேஷம்! கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா, வாமன மூர்த்தி அவதரித்த தினமான திருவோணத்தில் ஆராட்டுடன் முடிவடைகிறது.

மிகச் சிறப்பான ஓணம் திருவிழாவுக்கு இந்த ஆலயத்துக்கு வர இயலாதவர்கள், தங்கள் வீடுகளை அலங்கரித்து, கோலங்கள் போட்டு, தீபங்கள் ஏற்றிவைத்து திருக்காட்கரை அப்பனைப் பூஜிக்க வேண்டுமென்றும், திருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்றும் அரசன் கட்டளையிட்டதாக ஒரு தகவலும் உண்டு.

தோஷ நிவர்த்தி, பாவ நிவர்த்தி மற்றும் சந்தானப் பிராப்தி ஆகியவற்றுக்காக இத்தல இறைவனைப் பிரார்த்திப்பது விசேஷம். தசாவதாரங்களில் வாமன அவதாரம் நிகழ்ந்த இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளைச் சேவித்தால், எல்லாப் பாவங்களும் நீங்கும் என்பது நிச்சயம்!'' என்றார் மேல்சாந்தி ஸ்ரீனிவாச போற்றி.

(நிறைவுற்றது)

படங்கள்: வி.ராஜேஷ்