Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

விருச்சிக ராசியின் (லக்னம்) அதிபதி செவ்வாய். ராசிச் சக்கரத்தின் 210 ஆரங்கள் முதல் 240 வரை பரவியிருக்கும். ராசிச் சக்கரத்தின் 8-வது ராசியான இது, ஆயுளின் இறுதியை வரையறுக்கும்.

 முதல் ராசியான மேஷம் ராசிபுருஷனின் தலை. அதில் அறிவு புலன்கள் அடங்கியிருக்கும். உடலை இயக்கும் மஸ்திஷ்கம் (மூளை) அதில் அடங்கும். அறிவு புலன்கள் செயல்பாடுகளை வரையறுக்கும். செம்மையான செயல்பாட்டை கண்காணிக்கும். அதற்கு அதிபதி செவ்வாய். ஆரம்பத்துக்கும் அழிவுக்கும் அதிபதி ஒன்றாக இருப்பதால், முழுமையான வளர்ச்சியை சுவைத்து மகிழ்ந்த பிறகே அழிவு எட்டிப்பார்க்கும். ஆக, நீண்ட ஆயுளை பதிவு செய்துவிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

எதிர்பாராத எதிர்ப்பு, இடையூறுகள், ரணம், விபத்து, கடன் தொல்லை, ஆறாத்துயரம், நிலை இல்லாத தவிப்பு ஆகிய அத்தனைக்கும் இடமான 6-வது ராசிக்கு (மேஷம்) உடையவனும், லக்னத் துக்கு (விருச்சிகம்) உடையவனும் ஒருவனாகவே இருப்பதால், மாட்டிக்கொண்ட சிக்கலில் இருந்து பிதுங்கி வெளிவந்து பிரகாசமான சூழலைத் தழுவு வார். பாவாதிபதி பாவத்தில் இருந்தால், பாவ பலன் அனுகூலமாக மாறிவிடும். லக்னாதிபதி எந்த பாவத்தில் இருந்தாலும் அந்த பாவம் சரிவை சந்திக்காது. லக்னாதிபதியே பாவாதிபதியாக மாறினால் இடையூறுகளைத் தாண்டும் திறமையை அளித்து விடுவார்.

இந்த ராசியில் எந்தக் கிரகமும் உச்சத்தை அடைவது இல்லை. சந்திரன் நீசம் பெறுவான். மனதுக்குக் காரகனாகவும், அதேவேளையில் கடகத்துக்கு அதிபதியா கவும் தென்படுவதால், அதிர்ஷ்டங்களைச் சந்தித்தா லும் நிறமில்லாமலும் அங்கீகரிக்கப்படாமலும் மாறி விடும். குடத்தில் வைத்த விளக்கு போன்று பெருமை வெளியே பரவாது.

சந்திரன் 5-வது நவாம்சகத்தில் வர்க்கோத்தமம் பெற்றிருந்தால், வேலை வாய்ப்பில் பணம், பெருமை, புகழ் சேரும். அதிர்ஷ்டத்தை  முழுமையாகச்சுவைக்கும் வாய்ப்பும் கிடைக்கும். மேஷம், விருச்சி கத்துக்கு ராசியதிபதி செவ்வாய் ஆனாலும், பலனளிப்பதில் மாறுபட்ட அளவுகோலை கையாளுவார் செவ்வாய்.

மேஷம் சர ராசி; ஒற்றைப் பட ராசி; இரவு ராசி. பின்புறத்துடன் வெளிப்படும் ராசி. விருச்சிகம் ஸ்திர ராசி; இரட்டைப்படை ராசி; பகல் ராசி. சிரசுடன் தோன்றும் ராசி. இந்த அகண்ட மாறுதலானது பலனிலும் பிரதிபலிக்கும். செவ்வாய் உச்சம் பெற்று, உபசயஸ்தானத்தில் தென்பட்டால், பிறரது ஒத்துழைப்பால் பெருமை பெற்று விளங்கு வான். நீசம் பெற்று கடகத்தில் இருந்தால், வேண்டியவர்களும் வேண்டாதவர்களாக மாறி, முன்னேற்றத்துக்கு செயற்கையாக முட்டுக்கட்டை உருவாகி, தனது சிறுமையைத் தானே அனுபவித்துக் கொண்டு சங்கடப்பட நேரிடும். தகுதி இருப்பதை சமுதாயம் உணர்ந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பது, சகிக்க முடியாத துயரமாக மாறும்.

விருச்சிக ராசி சூரியனுக்கும் குருவுக்கும் பந்து வீடு. புதன், சுக்கிரன், சனி ஆகிய மூவருக்கும் சத்ரு வீடு. 2-க்கும், 5-க்கும் குரு அதிபதியாக இருப்பதால், துயரத்தைவிட இன்பத்தை அளிக்கும் பூர்வ புண்ணியங்கள் அனுபவத்துக்கு வரும். ஆனால், 9-ஆம் பாவம் கடகம் ஆனதாலும், விருச்சிக ராசி அதிபதிக்கு நீச வீடாக இருப்பதாலும், லக்னம் 9-ஆம் பாவாதிபதிக்கு நீச வீடாக இருப்பதாலும், வாழ்நாள் முழுதும் மாறாத துயரத்தைப் பதிவு செய்ய இடமளித்து விடுவான். பந்து கிரகங்களின் ஒத்துழைப்பும், லக்னாதிபதியின் வலுவான நிலையும், சந்திரனின் வலுப்பெற்ற நிலையும் சேர்ந்துவிட்டால், அரசனாகவோ தலைவனாகவோ திகழ்ந்து மக்களின் ஆதரவு பெற்று, அவன் பிறந்த பரம்பரையை சிரஞ்ஜீவியாக மாற்றியமைக்கும் அமைப்பு இருக்கும்.

9-க்கு உடையவன் 10-ல் இருப்பதோ, 10-க்கு உடையவன் 9-ல் இருப்பதோ, 9-க்கும் 10-க்கும் உடையவன் ஒன்பதிலோ பத்திலோ சேர்ந்து இருப்பதை தர்ம கர்மாதிபதி யோகமாக உயர்த்திச் சொல்லும் ஜோதிடம். இந்த ராசிக்கு தர்மகர்மாதிபதி யோகம் இணைந்தால், அலைபாயாத மனத்துடன் அசகாய சூரனாகத் திகழ்வான். ஒரு கேந்திரத்துக்கும் ஒரு த்ரிகோணத்துக்கும் அதிபதி ஒரு கிரகமாக வரும்போது, அந்த கிரகம், 'யோக காரகன்’ என்ற தகுதியை எட்டும். மகர, கும்ப லக்னத்துக்கு சுக்கிரன் யோக காரகன். கடக, சிம்ம லக்னத்துக்கு செவ்வாய் யோக காரகன். ரிஷப, துலா லக்னத்துக்கு சனி யோக காரகன்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சூரியனும் சந்திரனும் ஒரு வீட்டுக்கு மட்டுமே அதிபத்யம் இருக்கும். சூரியன் ஆன்ம காரகன். ஆன்மா ஒன்றுதான் இருக்க முடியும். மனமும் ஒன்றுதான் இருக்க முடியும். ஆகவே, இந்த இருவரும் கேந்திரத்துக்கோ, த்ரிகோணத்துக்கோ அதிபதியாக இருந்தால், அவ்விருவரும் யோக காரக அந்தஸ்தைப் பெறுவார்கள் என்கிறது ஜோதிடம்.

விருச்சிகத்துக்கு இந்த இருவரும் யோக காரக அந்தஸ்தைப் பெறுவதால், தங்களது தசை, புக்தி, அந்தரங்களில் நல்ல பலனை அளிப்பார்கள் என்ற சிறப்பு உண்டு. அம்சகத்தில் உச்சனாகத் தோன்ற முடியாத சந்திரன், தனது வர்க்தோத்தமத்தில் உச்ச பலனை அளித்து, அந்தக் குறையை நிறைவு செய்வார்.

இந்த ராசியின் உருவம் தேள். விருச்சிகம் என்ற சொல்லுக்கு தேள் என்று பொருள். குப்பைக் கூளங் களோடு இணைந்து வாழும் புழு இனம். இதை கீடராசி என்கிறது ஜோதிடம். தேளின் உடலில் விஷம் இருக்காது; கொடுக்கில் நிறைந்திருக்கும். அந்த கொடுக்கை அழித்துவிட்டால் சாதுவாக தென்படும்.

தனக்கு இடையூறு நெருங்குகிறதோ என்ற பயத்தில் கொடுக்கால் எதிரியைக் கொட்டி, விஷத்தை உமிழும். தேளின் இயல்பு இந்த ராசியில் பிறந்தவனிடம் தென்படலாம். கர்பாதானம், பும்சுவனம், சீமந்தம் போன்றவற்றில் இந்த ராசியை ஏற்காது ஜோதிடம்.

தேள் வெப்பத்தில் வெளிப்படும் உயிரினம். சூட்டுடன் இணைந்த சாணியில், குளிர்ச்சியின் தாக்கத்தில் புழுக்கம் நிலவும்போது, இது உடலெடுக்கும்.

நாயின் வாலைப் போன்று கொடுக்கை வளைத்து வைத்து கொட்டிவிடும். ஆகையால், நாம் அதன் வால் பக்கம் இருந்தால், அது உடலை திருப்பி வைத்து கொட்ட வேண்டியிருக்கும். எதிரியைத் தாக்க நினைத்த நொடியில், கண் இமைக்கும் வேளையில் உடலைத் திருப்பிக் கொட்டிவிடும். தேள் கொட்டிய விரலில் ஏறிய விஷம் வலுவிழக்க, 24 மணி நேரம் தேவைப்படும். உயிரைப் பறிக்கும் விஷம் கொண்ட தேள்கள் ஒரு பிரிவில் மட்டும்தான் உண்டு. அசுத்தமான இடத்தில் வசிக்கும்.

பூமியில் வளைய வரும் இயல்பு, எதிரிகளைத் தாக்கி அவர்களது துயரத்தில் மகிழும் மனம் இருக்கும். சொல் வன்மையால் பிறரது மனத்தைப் புண்படுத்துவதை விளையாட்டாகப் பார்க்கும் இயல்பும் தென்படலாம். பிறரது துயரத்தைப் பார்த்து மனம் உருகாது. தமக்கு எதிரியாக ஒருவன் உருவாவதை விரும்பமாட்டார்கள். முளையிலேயே கிள்ளியெறிய முற்படுவர். தேவகிக்கு முதல் குழந்தை பிறந்ததும் அதை கம்சனிடம் ஒப்படைத்தாள். அவன் அதைக் கொல்ல முயன்றபோது, 8-வது குழந்தைதானே உனக்கு எதிரி. இந்தக் குழந்தையை வாழ விடலாமே என்று தேவகி வேண்டினாள். கம்சன் குழந்தையை அழிக்காமல் திரும்பிவிட்டான். வரும் வழியில் நாரதரைச் சந்தித்தான். அவரது விளக்கத்தால் பயத்தில் ஆழ்ந்த கம்சனின் மனம், முதல் குழந்தையை அழித்து நிம்மதி பெற்றது. பயத்திலிருந்து விடுபட, அந்த பயத்துக்கான காரணத்தை அழிக்கும் எண்ணம் இவர்களில் தென்படும்.

ஸ்திர ராசியாக இருப்பதால் எண்ணம், செயலில் ஸ்திரத்தன்மை பளிச்சிடும். ம்பேறியாக இருந்து விஷயத்தை கோட்டைவிட்டு ஏமாறமாட்டார்கள். இடையூறுக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து செயல்பட்டு வெற்றியைச் சந்திப்பர். பிறர் மனதில் இருக்கும் எண்ணங்களை நொடியில் கண்டு பிடிக்கும் திறன் இருக்கும். மறைக்க வேண்டியதை மறைத்து வைக்கவும் தெரியும். தருணம் வந்ததும் போட்டு உடைக்கவும் தெரியும். எதிர் விளைவுகளை சிந்திக்காமலே சடுதியில் செயல்பட்டு துயரத்தில் சிக்குவர். தராதரம் பாராமல் இளக்காரமாக உரையாடி வம்புதும்புகளில் மாட்டிக் ள்வார்கள். செப்பிடி வித்தை, மாயாஜாலம் போன்றவற்றில் நாட்டம் ருக்கும். மனவியலில் தேர்ச்சி பெற்று பெருமையோடு விளங்க ஆர்வம் இருக்கும். கண்கட்டு வித்தை, இறந்தவர்களுடன் உரையாடல் ஆகியவற்றிலும் விருப்பம் இருக்கும். பழிக்குப் பழி - ரத்தத்துக்கு ரத்தம் என்ற கொள்கையில் பிடிப்பு இருக்கும். ஏமாந்து போனால், ஏமாற்றியவனை உண்டு இல்லை என்றாக்கி விட்டு, வெற்றி பெறுவர்.

பொருளாதாரத்தில் விரும்பிய நிறைவு கிடைக்காவிட்டாலும், வேறு வழியில் தேவையைப் பூர்த்தி செய்யும் திறமை இருக்கும். சூரியனும் குருவும் பலமாக இருந்து செவ்வாய்க்கு உச்சமோ, யோககாரகமோ ஏற்பட்டு, அதேவேளையில் புதன், சுக்கிரன், சனி ஆகியோர் பலவீனமா கவும் தென்பட்டால், வாழ்வில் எல்லா தடைகளையும் தகர்த்து, நீண்ட ஆயுளோடும் பெருந்தன்மையுடனும் முழுமையை அடைவார்கள்.

பூமியின் புதல்வனாக செவ்வாயைச் சொல்வது உண்டு. குஜன் என்ற சொல்லுக்கு... கு - பூ; ஜன் - புதல்வன் என்ற விளக்கம் உண்டு. பூமிக்கு வெப்பம் இருப்பதால், செவ்வாயும் வெப்பம் மேலிட்ட கிரகமாக மாறி விடுகிறான். ஆக, வெப்பத்தால் தோன்றும் பிணிகளைச் சந்திக்க நேரிடும். வெப்பம் மாறுபாட்டுக்கு நிச்சயம் தேவை.

பரிணாம வாதத்துக்கு செவ்வாயின் பங்கு உண்டு. உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகள், இவனது தாக்கத்தில் உருவமாற்றத்தில் வளர்ந்து செயல்பட சித்தமாகிவிடும். சிந்தனையோடு செவ்வாய் இணைந்தால், சிந்தனை வேகம் பெற்று விருப்பத்துக்கு  மாறான முடிவையும் சந்திக்கவைக்கும். இவனது செயல்பாடுகள், இருபக்கமும் கூர்மையான வாள் போன்றது. காதலும், வீரமும், பிடிவாதமும், பொல்லாத்தனமும், அடவாடித்தனமும், செவ்வாயின் சேர்க்கையில் வலுப்பெற்றுவிடும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பெண் ஜாதகத்திலும் ஆண் ஜாதகத்திலும் 7-ல் இருக்கும் செவ்வாய் பரஸ்பரம் அழிவைக் கொடுக்கும் என்பதில்லை. இருவரது ஆயுளும் பலமாக இருந்தால் சண்டை- சச்சரவுடன் இணைந்த தாம்பத்தியம் வாழ்வின் முடிவு வரை தொடரும். செவ்வாயின் தாக்கம் தன்னை சிறுமையாக்கிக் கொள்ள விரும்பாமல், சூழலை மறந்து உப்புசப்பு இல்லாத விரோதத்தில் முடிவடையும். பாவாத் பாவம் என்ற நோக்கில், விருச்சிகத்தின் 10-க்கு (சிம்மத்துக்கு) 10-ஆன (வ்ருஷபம்) 7-ல் செவ்வாய் வலுவுற்று இருந்தால், வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றி, பல பெருமைகளைப் பெற்று விளங்கச் செய்யும்.

பூமி என்ற உடலுக்கு ஆன்மா சூரியன்; மனம் சந்திரன். செயல்பாட்டை நடைமுறைப்படுத்துபவன் செவ்வாய். சூரியனின் தொடர்பில், மனத்தில் இருக்கும் எண்ணங்கள் செவ்வாயின் தாக்கத்தில் உருமாற்றம் பெற்று, அத்தனைப் பொருள்களும் பயன்பட தயார் நிலையில் இருக்கும். நமது உடலில் இருக்கும் ஆன்மா, மனம் ஆகியவற்றுடன் செவ்வாய் (சுறுசுறுப்பு) இணையும் வேளையில், மறைந்த எண்ணங்கள் அத்தனையும் அனுபவத்துக்கு வந்துவிடும். ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு எண்ணங்களின் பரிணாமத்தை உருவாக்க தேவைப்படும். உலகையே தன் உடலாக்கிக் காட்டினார் ஸ்ரீமந் நாராயணன். நமது உடலும் பிரபஞ்சத்தின் சிறு பதிப்பு. அதன் இயக்கத்துக்கு ஆன்மாவும் மனமும் மட்டுமே போதாது. மாறி மாறி பல அனுபவங்களைச் சந்திக்கவைக்க மற்ற ஏழு கிரகங்களும் தேவை.

முதல் அம்சகத்துக்கு குரு தசை இருக்கும். அதன் பிறகு நான்கு அம்சகங்களுக்கும் சனி தசையும், கடைசியில் இருக்கும் நான்குக்கு புதனும் இருப்பார். குரு தசை சிறுவயதில் மறைந்துவிடும். சிறு வயதிலிருந்து இளமையை எட்டும் வரை 19 வருடங்கள், சனி தசை இருக்கும். அதன் பிறகு, 17 வருடங்கள் புதனும் இருக்கும். சனியும் புதனும் அனுகூலமாக செயல்படாதவர்களாக இருப்பதால், பல இடையூறுகளைத் தாண்டி கல்வியிலும் திருமணத்திலும் வெற்றிபெற வேண்டியிருக் கும். குருவும் சூரியனும் வலுவாக இருந்தால், இவர்களது இடையூறு தெரியாமலேயே வெற்றி கிட்டிவிடும்.

வயது வந்த பிறகு அதிர்ஷ்டத்தை சுவைக்கும் தருணம் இருக்கும். எல்லாத் தசைகளிலும் குரு, சூரியன், செவ்வாய் - இவர்களது புத்தி, அந்தரங்கள் இன்னல் தெரியாது இன்பத்தைச் சுவைக்க வைக்கும். முதுமையில் தோன்றும் சூரியன், ஆன்மிகத்தில் ஆர்வத்தை வளர்த்து பிறப்பின் பலனை எட்டவைப்பான். அறிஞனாகவும், கவியாகவும், குறிப்பிட்ட துறையின் தலைவனாகவும் விளங்குவான். தனது உழைப்பில் சம்பாதித்த பொருளையே ஏற்பான். பிறரது பொருட்களை அவை தேவை என்றாலும் மறுத்துவிடுவான்.

கடகத்துக்கும் மீனத்துக்கும் இந்த ஆரம்ப கால தசைகள் பொருந்தும். ஆனால் ராசியின் இயல்பு, அதிபதிகளின் மாற்றம் தசைகளில் மாறுபட்ட பலனுக்கு ஏதுவாகிவிடும். நட்சத்திரங்களின் 2-வது சுற்றும் (பர்யாயம்), ராசியின் 2-வது பகுதியும் முடிவடையும் இந்த ராசியில் நட்சத்திர கண்டாந்தம், ராசி கண்டாந்தம் இரண்டும் இருக்கும். ராசியின் மூன்று துண்டுகளில் 2-வது துண்டு முடிவடைகிறது. கேட்டையின் கடைசி பாதத்தில் பிறந்தவர்கள் பரிஹாரம் செய்ய வேண்டும் என்கிறது சாந்தி ரத்னாகரம்.

'கும் குஜாய நம: ரம் ரவியெ நம: கும் குரவே நம:’ என்று சொல்லி மூவரையும் வழிபடலாம். ஆன்மபலம், உயர்ந்த எண்ணம், உற்சாகம் மூன்றும் இணையும்போது விருப்பங்கள் வெற்றியடையும். அக்னி மூர்த்தா என்ற மந்திரத்தை ஓதி வழிபடலாம். 'ஆஸத்யேன’ என்ற மந்திரத்தையும், 'ப்ருஹஸ்பதே’ என்ற மந்திரத்தையும் பணிவிடையில் இணைக்கலாம்.

'பூமிபுத்ராய குஜாய நம:’ என்று சொல்லி புஷ்பாஞ்சலி செய்யலாம். 'பாஸ்கராய நம: ப்ருஹஸ்பதயை நம:’ என்று சொல்லியும் புஷ்பாஞ்சலி செய்யலாம். மனத்தில் 12 முறை இந்த பெயர்களை அசைபோடலாம்.

மனத்தோடு இணைந்து செயல்படும் அத்தனை யும் விரும்பிய பலனை அளித்துவிடும். கண்கள் விக்கிரகத்தைப் பார்க்க வேண்டும். வாய் நாமாவை உச்சரிக்க வேண்டும். கைகள் மலரைத் தூவ வேண்டும். அப்போது மனம் வேறிடத்துக்குப் பயணமாகாமல் விக்கிரகத்தில் லயித்துவிடும்.

நம் மனத்தை விக்கிரக உருவத்தைவிட்டு அசையாமல் இருக்கும்படி செய்தால், காலப் போக்கில் மனம் தானாகவே விக்கிரகத்தை நினைவுகூர்ந்து, அதில் லயித்துவிடும். வழிபாடு பயனுள்ளதாக மாறிவிடும். பழக்கப்படுத்தினால் வசப்படாத ஒன்றும் உலகில் இல்லை.

- வழிபடுவோம்...