தொடர்கள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##

னுசு ராசிக்கு அதிபதி குரு. இது, ஸ்திரமும் சரமும் சம பங்கில் கலந்த ராசி. இதை, உபய ராசி என்று ஜோதிடம் சொல்லும். முதல் 15 பாகைகள் ஸ்திரம். அடுத்த 15 பாகைகள் சரம். பின் ராசி (விருச்சிகம்) ஸ்திரமானதால் முதல் பகுதி ஸ்திரமாயிற்று. முன் ராசி (மகரம்) சரமானதால், மறு பகுதி சரமாயிற்று.

 ராசி புருஷனின் 9-வது ராசி. அதிர்ஷ்டத்தை அளக்கும் ராசி. ராசிச் சக்கரத்தின் 240 முதல் 270 வரையிலான ஆரப் பகுதிகள் இதில் அடங்கும். இந்த தனுர் ராசியில் எந்தக் கிரகத்துக்கும் உச்சமோ நீசமோ ஏற்படாது. மிதுனத்துக்கும் கன்னிக்கும்... அதாவது 7-க்கும், 10-க்கும் உடைய புதன் த்ரிகோணாதிபத்யம் இல்லாததால் (ஐந்துக்கோ, ஒன்பதுக்கோ உடையவனாக இல்லாததால்), இந்த லக்னக்காரர்களுக்கு பலமிழந்து தென்படுவான். 7 ஸ்வக்ஷேத்திர பலவான், 10 உச்சம், மூலத்ரிகோணம் ஸ்வக்ஷேத்திரம் என்ற கோணத்தில் பலம் பொருந்தி யிருந்தாலும், கேந்திராதிபத்ய தோஷத் துடன் இணைந்து இருப்பதால், போதிய பலனை அளிக்கும் தகுதியை இழந்துவிடுவான். அறிவு, ஆற்றலில் எல்லையை எட்ட முடிந்தாலும், சமுதாய அங்கீகாரம் கிடைக்காமல் புகழ் மங்கி விடும்.

கையில் வில் ஏந்திய மனிதன் குதிரை உருவத்துடன் இணைந்த வடிவம் பெற்றது இந்த ராசி. விலங்கினமும் மனிதனும் கலந்த ராசி. இரு இயல்புகளும் அவனில் தென்படும். சிந்தனையுடன் கூடிய செயல்பாடு சிலநேரம் தென்படும். ஆராயாமல் செயலில் இறங்கி சங்கடத்தை சந்திக்கவும் வேண்டியது இருக்கும். வெப்ப ராசி, இரண்டு இயல்புகளை உடைய ராசி. இரண்டு கால் பிராணியும் நான்கு கால் பிராணியும் இணைந்த ராசி. இருவேறு தகுதி தென்படும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளும் ராசிச் சக்கரத்தின் நான்கு கோணங்களில் அமைந்திருக்கும். நான்கும் உபய ராசியாக இருப்பதால், இரண்டு இயல்புகள் கலந்திருந்தாலும்... மிதுனமும் கன்னியும் - புருஷ ராசியும் (ஆண்மை) ஸ்த்ரீ ராசியும் (பெண்மை) இணைந்திருப்பதாலும், நாகரீகமான இயல்பு தென்படுவதாலும், ராசியின் அடையாள மாற்றம் பலனில் மாற்றத் துக்குக் காரணமாகி விடும்.

தனுர், மீன லக்னங்களுக்கு புதனுக்கு கேந்திராதிபத்யம் என்ற தோஷம் இருக்கும். மிதுன, கன்னி லக்னங்களுக்கு குரு கேந்திராதி பத்யத்துடன் இணைந்திருப்பான். 7-வது கேந்திரத்தில் குருவின் கேந்திராதிபத்யம் வலுவாக இருக்கும். 4-வது கேந்திராதிபத்யத்தில் புதன் வலுப்பெற்றிருப்பான். அதாவது களத்ர சுகத்தை அழிக்க முற்படுவான் குரு. உலக சுகத்தை அழிப்பதில் கவனமாக இருப்பான் புதன். தனுர் லக்னத்துக்கு 4-ல் புதன் வந்தால், இயல்பாகவே நீசனாக மாறுவதால், இந்த லக்னத்தில் புதனின் செயல்பாடு திருப்தி அளிக்காது. குரு, புதன் இருவரும் நண்பர்கள் அல்லாததால், மிதுனம் - கன்னியில் இருக்கிற குருவும், தனுர்- மீனத்தில் வரும் புதனும் இடையூறைச் சந்திக்க வைப்பார்கள். தனுர் லக்னாதிபதி குரு 7-ல் இருந்தால், தாம்பத்திய சுகத்தில் நெருடலை விளைவிப்பான். 10-ல் (கன்னியில்) குரு இருந்தால் வேலையில் இடையூறை விளைவித்து சங்கடத்தில் ஆழ்த்துவான்.

அதே போன்று மிதுனம், கன்னி லக்னங்களுக்கு, தனுர் மற்றும்  மீன ராசிகளில்... புதன், வேலையிலும் சுகத்திலும் இடையூறை ஏற்படுத்துவான். சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருக்கு நட்பு வீடு. புதன், சனி, சுக்கிரன் ஆகியோருக்கு சத்ரு வீடு. சூரியன், சந்திரன், செவ்வாய் வலுப்பெற்று இருந்தால், எல்லாவிதமான ஐஸ்வரிங்களும் நிரம்பப்பெற்று புகழோடு விளங்க வைக்கும். சனியும் சுக்கிரனும் எதிரிடையாக செயல்பட்டாலும், சூரியன்- சந்திரன்- செவ்வா யுடன் இணைந்து வலுப்பெற்றால், வாழ்வில் நிறைவை எட்டவைப்பான். புதன் எதிரியாகவும் மாரகனாகவும் தென்படுவதால், நல்லவர்களது சேர்க்கையில் நல்லதை ஏற்காமல், தனது வலிமை யில் சங்கடத்தை ஏற்கவைப்பான்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

லக்னாதிபதியும் 4-க்கு உடையவனும் குருவாக இருப்பதால், அறிஞனாகத் திகழ வாய்ப்பு உண்டு. 4-ல் புதனுக்கு நீசமும் சுக்கிரனுக்கு உச்சமும் இருப்பதால், பொருளாதாரத்தில் நிறைவை எட்டினாலும் உலக சுகத்தில் சுணக்கம் இருக்கும். குரு, பாப கிரகத்துடன் இணைந்தால், பாப கிரகத்தின் வலுவைக் குறைப்பான். ராகுவுடன் இணைந்தால், ராகுவின் தாக்கம் நல்ல பலனை இழக்க வைக்கும். இதை குருசண்டாள யோகம் என்று குறிப்பிடும் ஜோதிடம். 9-க்கு உடைய சூரியனுடன் குரு இணைந்தால் அரசனாகவும், தலைவனாகவும் திகழ்வான். செவ்வாயுடன் இணைந்தால் சேனாதிபதியாகவோ, மந்திரியா கவோ, ஆலோசகராகவோ மாறுவான். சந்திரனுடன் இணைந்தால் பெரும் செல்வந்தராக மாறலாம்.

அல்லது செல்வம் சேராமலேயே எல்லாவித அனுபவங்களும் அவனைத் தேடி வந்து மகிழ்விக்கும்.

குதிரைக்கு 'சக்தி’ அதிகம். மனிதனுக்கு சிந்தனை வளம் இருக்கும். வில்லுக்கு எதிரியை அழிக்கும் தன்மை உண்டு. ஒற்றைக் குளம்பு இனம். ஓட்டத்திலும் களைப்பு தெரியாது.உடல் வலிமை உண்டு. வேகத்துக்கு குதிரையின் வேகத்தையே அளவுகோலாகக் கொள்வர் (ஹார்ஸ் பவர்). ஆக சிந்தனை வளம், உடல் வலிமை, எதிரியை வீழ்த்தும் தகுதியுடைய ஆயுதம் இந்த

மூன்றும் அடையாளமாகவே அமைந்திருப்பதால், 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற முறையில், வாழ்நாள் முழுவதும் இந்த இயல்புகள் இருக்கும். புகழ் பாடி, காக்கா பிடித்து காரியம் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. அதே நேரம், பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல், உள்ளதை உள்ளபடி உடைத்து வாழ்வை சீரழித்துக் கொள்பவர்களும் உண்டு. சீண்டிப் பார்த்தால் சீறி எழுந்து நட்பை உதறித் தள்ளி தனிமையில் தவிப்பவர்களும் உண்டு. எதிரிகளின் பலத்தை ஆராயாமல் எதிர்க்கத் துணிவதும் உண்டு. தோல்வியை ஒப்புக்கொண்டு, சமரசத்தில் இறங்க மனம் இருக்காது. தனது பலவீனத்தை பிறரில் சுமத்திவிட்டு, நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் அக்கறை இருக்கும். தோல்வியை வேறொரு கோணத்தில் நல்ல முடிவாக சித்திரித்து, அவமானத்தை மறைப்பார்கள்.

குரு, வாழ்வில் அனுகூலங்களைச் செய்வார். சனி, இடையூறுகளைத் தந்து சங்கடத்தில் ஆழ்த்துவார் என்பது பொது வான ஜோதிடக் கண்ணோட்டம். இதை வைத்து, குரு அனுகூலமானால் நல்லது நடக்கும். சனி ப்ரதிகூலமானால் கெட்டதைச் சந்திக்க நேரிடும் என்ற பொது அபிப்ராயம் மக்கள் மத்தியில் உண்டு. 2, 5, 9, 11-ல் குரு இருக்கிறார் என்றவுடன் நல்ல காலம் தோன்றிவிட்டதாகவும், 12, 1, 2, 4, 7, 8, 10 ஆகியவற்றில் சனி இருக்கிறார் என்றால் சங்கடத்தைச் சந்திப்போமா என்றும் சந்தேகம் எழுந்துவிடும்.

தென்னாட்டில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் குரு பலன் திருமணத்துக்கு வழிகோலும் என்ற நம்பிக்கை ஆழமாக உண்டு. அதே போன்று ஏழரைச்சனி, அஷ்டமச் சனி ஆகியன துயரத்தை தரும் என்று திடமாக நம்புகிறவர்களும் உண்டு. 5 (மேஷம்) - பூர்வ புண்ய ஸ்தானம். ஐந்தின் ஐந்தான '9’ (சிம்மம்)- அதிர்ஷ்டம், பாக்கியம், பூர்வபுண்ணியத்தின் அளவு அல்லது செழிப்பு. இதில் குரு வரும்போது, சாதகமாக அவற்றைச் சுவைக்க வைக்கும்படி செய்வார். ஆகையால், த்ரிகோணத்தில் குரு அனுகூலத்தைச் செய்வார். 11-ல் எல்லா கிரகங்களும் நன்மையைச் சந்திக்க வைக்கும் என்கிறது ஜோதிடம் (ஸர்வேஷாம் கிரஹாணாம் சுப ஏகாதச ஸ்தான...). குடும்பம், பொருளாதாரம்... இதைச் சுட்டிக்காட்டும் 2-ல் குரு அனுகூலம் நிம்மதி அளிக்கும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

அதேநேரம் சனி 12-ல் இழப்பையும், 1-ல் உடல் ஆரோக்கியத்தையும், 2-ல் பொருளாதார வீழ்ச்சி, குடும்பச் சித்ரம் ஆகியவற்றையும், 4-ல் மகிழ்ச்சியின்மையையும் 7-ல் வேலை வாய்ப்பு, (10-ன் 10 பாவாத்பாவம்- 7) மாரகம், வெளி தேசம், தாம்பத்தியத்தில் இடையூறுகளையும், 8-ல் மன அமைதியைக் குலைத்து, தடுமாற்றமும் டென்ஷனும் ஏற்படுத்தும்.

10-ல் வேலை பார்க்கும் இடத்தில் செயற்கை யான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி, வருங்காலத்தை இருண்ட காலமாக தோற்றுவித்து, சிந்தனையில் ஆழ்த்தி நிலைகுலைய வைக்கவும் தயங்கமாட்டான் சனி.

இப்படி, துயரத்துக்கு சனியும் மகிழ்ச்சிக்கு குருவும் என்று நம் மனம் உறுதியாக நம்பும். ஜோதிடத்தின் பல கோட்பாடுகளை ஊடுருவி ஆராயும்போது எல்லோருக்கும் எல்லா லக்னத்துக்கும் பொருந்தாது என்பது விளங்கும். கிரகங்களைப் பற்றிய பொது விதி, அதன் நிஸர்க பலனை சுட்டிக்காட்டும். தனிப்பட்ட ஜாதகத்தில் அது இருக்கும் இடம், அதன் வலிமை ஆகியவற்றை ஒட்டி பலன் மாறிவிடும்.

கன்யா லக்னம் 7-ல் (மீனத்தில்) குரு. 7-க்கு உடையவன் 7-ல் இருப்பதால், பாவாதிபதி பாவத்தில் இருப்பதால், அதிலும் சுப கிரகம் 7-ல் இருப்பதால், அந்த பாவம் செழிப்பாக இருக்கும் என்று ஜோதிடம் சொல்லும். அந்த குரு, லக்னத்தை- கன்யா ராசியைப் பார்ப்பதால், லக்னம் பலம் பெற்று 7-க்கு உடைய தாம்பத்தியத்தை சுவைக்கும் திறமையை வலுப்படுத்தும். லக்னத்தில் - கன்னியில் ஸ்வக்ஷேத்ர குரு பார்ப்பதால், நீண்ட ஆயுள் இருக்கும் என்றும் ஜோதிடம் சொல்லும். அதே நேரம், குரு கேந்திராதிபத்ய தோஷத்துடன் தென்படுவதால், அந்த பாவத்தை அடியோடு அழிக்கும் என்றும் ஜோதிடம் சொல்லும்.

ஜீவ பரமான பலன், பொருள் சம்பந்தமான பலன் (மெட்டீரியல் பெனிஃபிட்) என்று இரண்டு உண்டு. 7-ல் மனைவியை குரு இழக்க வைப்பான் என்றால், ஜீவபரமான பலனை மட்டும் இழக்கவைத்து உலக சுகபோகங்களை அள்ளித் தருவான் என்று பொருள். ஒரு குருவுக்கு எதிரிடையான இரண்டு பலன்களை ஜோதிடம் சொல்லும். இரண்டும் நடைமுறையில் வெளிப்படும்.

எந்த ஒரு பலன் முதலில் நடைமுறைக்கு வந்தாலும், அதற்கு எதிரிடையான பலனுக்கும் அங்கு அவகாசம் இருக்கவேண்டும். அதாவது, இரண்டு பலன்களும் அனுபவத்துக்கு வரும். முதலில் பொருளாதார முன்னேற்றம், மகிழ்ச்சி, செழிப்பு, மனைவியின் ஆதரவு, ஒத்துழைப்பு, அன்பு, பெருமிதம் ஆகியன அனுபவத்துக்கு வரும். அது செழிப்புற்று மகிழும் வேளையில், திடீரென மனைவியின் இழப்பு வந்துவிடும். அந்த இழப்பு அதிக துயரத்தை அளிக்க, மற்றவற்றில் உண்டான நிறைவும், அவளது அன்பைச் சுவைத்த அனுபவமும் துயரத்தை

இரட்டிப்பாக்கி வாழ்வில் சூன்யத்தை உணர வைக்கும். முதலில் கேந்திராதிபத்ய தோஷம் செயல்பட்டால், அடுத்து பொருளாதார செழிப்பு தலைதூக்காது. ஆகையால், இன்பத்தைச் சுவைத்து மகிழும் சூழலை ஏற்ற பிறகு,

துன்பத்தைச் சந்திக்க வைக்கும்போது, இரண்டு விபரீத பலன்களையும் முழுமையாக உணர வைக்கும். சுப கிரகம் என்று நினைத்த குரு, மகிழ்ச்சியை முழுமையாக அழிப்பவனாகவும் மாறுவான்.

மகர லக்னம் 7-ல் கர்கடகத்தில் செவ்வாய் நீசன்; சனி சேர்ந்து இருக்கிறான். 7-ல் சனி அந்த பாவத்தை அழிக்க வேண்டும் என்பது ஜோதிடத்தின் பொது விதி. நீச செவ்வாயும் களத்திரத்தை அழிக்க வேண்டும். 7-க்கு உடைய சந்திரனின் (கடகத்தில்) வீட்டில் நீசம் பெற்ற செவ்வாய், தனது உச்ச ராசியான மகரத்துக்கு அதிபதியான சனியுடன் சேர்ந்து இருப்பதால், 7-ஆம் பாவத்தைச் செழிப்பாக்கி, ஆயுளை நீட்டித்து, பொருளாதாரத்தை நிறைவு செய்து வாழ்வில் தன்னிறைவை எட்ட வைப்பான் என்கிறது ஜோதிடம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

இங்கு இரண்டு பலன்களும் நடைமுறைப்படுத்தப்படும். முதலில் நல்ல பலன்களை அள்ளி வழங்கி மகிழ்ச்சியில் பொங்க வைத்து, கடைசி காலத்தில் - முதுமையை எட்டும் தறுவாயில், சனி உயிர் பறிப்பை நடைமுறைப்படுத்துவான். இங்கு துயரத்தை அளிக்கும் சனி மகிழ்ச்சியைத் தருவான் என்கிறது ஜோதிடம்.

ஒரு கிரகம் இன்பம் அல்லது துன்பத்தை மட்டுமே செய்யும் என்று நம்பி செயல்பட்டால், நாம் ஏமாந்துபோவோம். சனி 8-ல் இருந்தால், ஆயுள்காரகன் ஆயுளை அழிக்க வேண்டும் என்பது பொது விதி. ஆனால் சனிக்கு விபரீத பலன் சொல்ல வேண்டும் என்று சொல்லும் (விபரீதம் சனைஸ்ம்ருதம்...). ஆயுள் அழிப்பை அழிக்கிறான். அதாவது, ஆயுளைப் பெருக்குகிறான் என்று பொருள். ஆகையால், சனி நன்மை அளிக்கிறார். ஐந்தில் ராகு- குழந்தை இருக்காது. 7-ல் ராகு கலப்புத் திருமணம் என்று விளக்கமளிக்கும் புது கண்ணோட்டமானது, ஜோதிடத்தின் அடிப்படை தத்துவங்களை ஏளனம் செய்கிறது.

முதல் நான்கு அம்சகங்களுக்கு (மூலம்) கேது தசை இருக்கும். அதன் பிறகு, நான்கு (பூராடம்) அம்சகங்களுக்கு சுக்கிர தசை. கடைசி (உத்ராடம் 1-ம் பாதம்) அம்சகத்துக்கு சூரிய தசை வரும். தனுர் லக்னம் இளமையில் செழிப்புறும். பால்யத்தில் சங்கடத்தை சந்தித்தாலும், இளமையும் முதுமையும் சுவர்க்க சுகமாக மாறும். உண்மையில் புத்தி வளர்ந்து, எண்ணங்கள் உதயமாகி அனுபவத்துக்கு வரும்போது, மகிழ்ச்சி முழுமை பெறும். அனுபவத்தில் தெளிவு பெற்று, முதுமை இனிக்கும். இது இந்த லக்னத்தில் பிறந்தவர்களில் தென்படலாம்.

மேஷத்துக்கும் சிம்மத்துக்கும் இந்த தசா வரிசைகள் பொருந்தும். ஆனால், அங்கு ராசியின் அமைப்பு, அதிபதி போன்ற மாற்றங்களால் பலனும் மாறுபட்டிருக்கும். 5-க்கு உடைய செவ்வாயும், 9-க்கு உடைய சூரியனும், லக்னத்துக்கு உடைய குருவும் வலுவாக இருந்தால், எல்லா இடையூறுகளையும் தாண்டி இன்பத்தைச் சுவைக்கலாம். மற்ற கிரகங்களின் தாக்கத்தால் துன்பத்தில் ஆழ்ந்தாலும், இவர்களின் வலுவால் அதிலிருந்து மீண்டு வர இயலும்.

'கும் குருவே நம: ரம் ரவயே நம:’ என்று சொல்லி வழிபடலாம். குருவுக்கும் ரவிக்கும் குரு- சிஷ்ய உறவு. அவர்களது ஒத்துழைப்பு அதில் பிறந்தவனை அறிஞனாக்கும்.

சூரியன்- ஆன்மா; குரு - அறிவு என்பதால், ஆன்மிக அறிவை இணைப்பு வலுப்படுத்தும். மற்ற உலக அறிவோடு ஆன்மிக அறிவும் இணைந்து வளர்ந்தால் மட்டுமே முழு மனிதனாகத் திகழ இயலும்.

'ஆஸத்யேனரஜஸா’ என்ற மந்திரம் சொல்லி வழிபடலாம். 'ப்ருஹஸ்பதெ’ என்ற மந்திரத்தை உச்சரித்தும் குருவை வழிபடலாம். அல்லது 'மித்ரய நம: ரவயே நம: குருவே நம: ப்ருஹஸ்பதயெ நம:’ என்று சொல்லி, புஷ்பத்தை இரண்டு கைகளிலும் அள்ளி எடுத்து புஷ்பாஞ்சலி செய்யலாம். அதற்கும் நேரம் கிடைக்காமல் போனால், மனதில் அவர்கள் பெயரை அசை போடலாம்.

நினைப்பை தடை செய்ய இயலாது. அது நம் வசம் இருக்கும். தினமும் காலையில் நீராடித் திலகமிட்டு, இவர்களை வழிபடுங்கள். நன்மைகள் பல நம்மை அண்டி வந்துவிடும்.

- வழிபடுவோம்...