'இதோ, இந்த இடத்தில்தான் தங்கப் போகிறேன். தங்கி, உன்னையே எப்போதும் நினைத்துத் தவம் செய்யப் போகிறேன். இந்தக் காட்டிலும் மேட்டிலும், மண்ணிலும் மலையிலும், செடியிலும் கொடியிலும், பூவிலும் நறுமணத்திலும் நான் உச்சரிக்கிற உன் திருநாமங்கள் தங்கி, இந்த இடத்தை இன்னும் வளமையாக்கட்டும். நல்ல அதிர்வுகள் ஏற்பட்டு, இந்த இடத்தில் சாந்நித்தியங்கள் பெருகட்டும்'' என்று பெருமாளிடம் பிரார்த்தித்துக்கொண்டு, பொருநை நதி கிளை பிரிந்து ஓடுகிற கரைக்கு அருகில் காசியப முனிவர் தவம் செய்தார். அந்தத் திருத்தலம்- வீரவநல்லூர்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில், சேரன்மாதேவிக்கும் அம்பாசமுத்திரத்துக்கும் நடுவில் உள்ளது வீரவநல்லூர். காசியப முனிவரின் வேண்டுதலால், இங்கே குடியிருந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள்.

முனிவருக்கும் மன்னனுக்கும் மக்களுக்கும் அருள் மழை பொழிந்த ஆலயம், சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக கும்பாபிஷேகமோ வைபவமோ இல்லாமல் இருப்பது குறித்து, கடந்த 30.10.12 தேதியிட்ட 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம்.

வீரவநல்லூர் திருவிழாவையும் அங்கே நடைபெறும் விழாக்களையும் திருவீதியுலாவையும் குறிப்பிட்டிருந்தோம். கூடவே, கோலாகலங்களையும் கொண்டாட்டங்களையும் தொலைத்துவிட்டு நிற்கிற ஆலயத்தின் அவலத்தையும் வேதனையுடன் தெரிவித்திருந்தோம். 'ஊர் கூடினால்தான் தேர் இழுக்க முடியும். உலக மக்கள் தெய்வத் திருப்பணியில் ஈடுபட்டால்தான், சிதைந்து கிடக்கும் கோயில் விரைவில் சீர்பெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெறும். அந்தப் பலன் நம்மை மட்டுமின்றி, நம் சந்ததிக்கும் போய்ச்சேரும்’ என்று சொல்லியிருந்தோம்.

அதைப் படித்ததும், சக்திவிகடன் வாசகர்களிடம் இருந்து தடதடவென நீண்டன உதவிக்கரங்கள். திருப்பணிகளை மேற்கொண்ட ஸாந்தீபனி எஜுகேஷனல் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட், மளமளவெனத் திருப்பணிகளை உற்சாகத்துடன் செய்தது.

இதோ, வருகிற 18.3.13 திங்கட்கிழமை அன்று காலை 9.40 முதல் 10.30 மணிக்குள் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஆலயத்துக்கு மகா ஸ்ம்ப்ரோக்ஷண வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது என்று பூரிப்பும் நன்றியுமாகத் தெரிவிக்கின்றனர், வீரவநல்லூர் மக்கள்.

அன்றைய நாளில், கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு, ஸ்ரீசுந்தரராஜ பெருமாளைத் தரிசனம் செய்வோம். நம்மால் முடிந்த அன்னதானம் முதலான திருப்பணிகளில் ஈடுபடுவோம். இன்னும் வளம் பெறுவோம் என்பது உறுதி.

- வி.ராம்ஜி