புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்

##~##

திபெத்தின் தார்ச்சன் நகரில் பயபக்தியோடு யாகங்கள் நடத்தி முடித்த நாம், அடுத்ததாக கயிலைமலையானை மூன்று நாட்களுக்கு பரிக்ரமா (வலம் வருதல்) வர ஆயத்தமாகிறோம்.

 தார்ச்சனில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு காரில் பயணித்தால், எம துவார் என்கிற இடத்தை அடையலாம். இங்கே, ஒருபுறம் நுழைந்து மறுபுறம் வெளியே வரும் வகையில் சிறிய நுழைவுவாயில் போன்று அமைத்திருக்கிறார்கள். இதைத்தான் எம துவார் என்கிறார்கள். இதன் ஒருபுறமாக நுழைந்து மறுபுறமாக வெளிவந்துவிட்டால் எம பயம் போய்விடும் என்பது நம்பிக்கை. இந்த வழியாகச் செல்லும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு செய்கிறார்கள்.

எம துவாரைத் தொடர்ந்து, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள டார்போச் வரை காரில் பயணிக்கலாம். அதன்பிறகு, முழுக்க முழுக்க நடைப்பயணம்தான். இங்கேதான் சுமை தூக்கும் கூலியாட்களான திபெத்தின் செர்ஃபாக்களின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. ஒருவருக்கான லக்கேஜை சுமந்தபடி வர, மூன்று நாட்களுக்கான இவர்களது கட்டணம் 600 யுவான் (ஒரு யுவான் என்பது இந்திய மதிப்பில் சுமார் 9 ரூபாய்).

பனிமுடி தரிசனம்

நடக்க முடியாதவர்கள் குதிரைப் பயணம் செய்யலாம். அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். 3 நாட்களுக்கு ஒருவருக்கான குதிரைப் பயணத் தொகை 1400 யுவான்.

கடினமான பயணம்தான் என்றாலும், கயிலைமலையானை மிக அருகில் தரிசிக்கப் போகிறோம் என்கிற ஆவலில் பக்தர்கள் பரிக்ரமா வரத் துவங்குகிறார்கள்.

இந்தப் பரிக்ரமாவில், முதன்முதலில் நமக்கு அந்த வெள்ளைப் பனித்தலையனின் மேற்கு முக தரிசனம் கிடைக்கிறது. சிலிர்ப்பான அனுபவம். அதன் அழகில் மெய்ம்மறந்து கைகூப்பியபடி தரிசித்து, வெண்பனியின் குளிரில் நெக்குருகி, தொடர்ந்து பயணிக்கிறோம்.

(ஆன்மிக ஆல்பம் புரட்டுவோம்...)