புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சென்னையில்... மேல்மலையனூர் அம்மா!

அகிலம் காக்கும் அழகு தெய்வமே..!

##~##

மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரியின் கருணையும் புகழும் எல்லோரும் அறிந்ததுதான். அங்கிருந்து பிடிமண் எடுத்து வந்து, கோயில் கட்டப்பட்ட தலங்கள் ஏராளம். அதில், சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலும் ஒன்று.

 திண்டிவனம் அருகேயுள்ள மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அந்தப் பலன்கள் யாவும் இங்கே, இந்தத் தலத்திலும் கிடைக்கும் எனப் போற்றுகின்றனர், பெண்கள்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தொடர்ந்து ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வந்து, அம்மனுக்கு செவ்வரளி மாலை அல்லது எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால்... விரைவில் விரும்பியபடி வரன் அமையும்; தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம்.

திருவல்லிக்கேணியில் அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிக்கு, மேல்மலையனூரில் நடைபெறுவது போலவே மகா சிவராத்திரி, மயானக்கொள்ளை முதலான விழாக்கள் வருடாவருடம் விமரிசையாக நடைபெறுகின்றன.

சென்னையில்... மேல்மலையனூர் அம்மா!
சென்னையில்... மேல்மலையனூர் அம்மா!

இதோ, இந்த வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 10.3.13 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற, 1008 பேர் கலந்துகொண்ட பால்குடப் பெருவிழா மற்றும் 102-வது மகா சிவராத்திரி விழா ஆகியன விமரிசையாக நடந்தன. மறுநாள் மயானக் கொள்ளை நிகழ்ச்சியும் சிறப்புற நடந்தேறியது.

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியை மனதார வேண்டுங்கள். அருளும் பொருளும் அள்ளித் தந்து, நம் கஷ்டத்தைப் போக்கி, கண்ணீரைத் துடைத்தருள்வாள் அந்தக் கருணைத் தெய்வம்.

விமரிசையாக நடந்த விழாவின் புகைப்படத் தொகுப்பு, இங்கே உங்களுக்காக!

- இ.ராஜவிபீஷிகா